Skip to main content

Full text of "காகித உறவு : சிறுகதைகள்"

See other formats




காகீத உறவு 


(சிறுகதைகள்‌) 


சு. சமுத்திரம்‌ 





முதல்‌ பதிப்பு : சூலை, 2005 
திருவள்ளுவர்‌ ஆண்டு : 2036 
உரிமை : ஆசிரியர்க்கு 


விலை : ரூ. 25.00 
மணிவாசகர்‌ வெளியீட்டு எண்‌ : 1186 


நினைவில்‌ வாழும்‌ 
நிறுவனர்‌ 
௪ச.. மெய்யப்பனா£ 


டாக்டர்‌ ச. மெய்யப்பன்‌, அண்ணாமலைப்‌ 
பல்கலைக்கழகத்தின்‌ முன்னாள்‌ தமிழ்ப்‌ 
பேராசிரியர்‌. 

பல்கலைக்கழகங்கள்‌ பலவற்றில்‌ இவர்‌ 


அறக்கட்டளைகள்‌ நிறுவியுள்ளார்‌. 

'வள்ளுவம்‌' இதழின்‌ நிறுவன ஆசிரியர்‌. 

குன்றக்குடி அடிகளார்‌ 'தமிழவேள்‌' என்றும்‌, தருமபுரம்‌ 
ஆதீனத்‌ தலைவர்‌ “செந்தமிழ்க்‌ காவலர்‌' என்றும்‌ விருதுகள்‌ 
வழங்கிச்‌ சிறப்பித்துள்ளனர்‌. 

“பதிப்புச்செம்மல்‌' என அறிஞர்கள்‌ இவரைப்‌ பாராட்டுவர்‌. 





கிடைக்குமிடம்‌ : 

மணிவாசகர்‌ நாலகம்‌ 

12-65, மேல சன்னதி, சதம்பரம்‌- 608001. 9:230069 

31, சிங்கர்‌ தெரு, பாரிமுனை, சென்னை-600108. 0:25361039 

5, சிங்காரவேலுதெரு, தி. நகர்‌, சென்னை-600017. 8:24357832 

110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை-625001. (0:2622853 

15, ராஜ வீதி, கோயமுத்தூார்‌-641001. (0:2397155 

28, நந்தி கோயில்‌ தெரு, இருச்‌ச-620002. (6:2706450 

அச்சிட்டோர்‌ : மணிவாசகர்‌ ஆப்செட்‌ பிரிண்டர்ஸ்‌, சென்னை - 600 021 
தொலைபேசி : 25954528 


வளரும்‌ வாசகர்‌ அணி 
ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம்‌ 


ஆசிரியர்‌ சமுத்திரம்‌ நூற்றுக்கணக்கான சிறுகதைகளை 
எழுதி நாடறிந்த எழுத்தாளராகத்‌ திகழ்ந்தவர்‌. அவரின்‌ 
சத்தியத்தின்‌ அழுகை, சமுத்திரம்‌ கதைகள்‌ வாசகர்களிடையே 
மிகுந்த வரவேற்பைப்‌ பெற்றுள்ளன. இப்போது “காகித உறவு. 
அவருக்கென வாசகர்கள்‌ நாளும்‌ பெருகி வருகிறார்கள்‌. 
வானொலி, தொலைக்காட்சி முதலிய மக்கள்‌ தொடர்புச்‌ 
சாதனங்களில்‌ பணியாற்றியதால்‌ புலப்பாட்டு நெறி வாய்க்கப்‌ 
பெற்றவர்‌. எதையும்‌ எளிதில்‌ சொல்லும்‌ கலையில்‌ வல்லவராகத்‌ 
திகழ்ந்தார்‌. அவருடைய அணுகுமுறைகளும்‌ உத்திகளும்‌ அவர்‌ 
படைப்புக்கள்‌ பரவுவதற்கு வழிவகுத்தன. அவருக்கு என்று ஒரு 
தனிநடை அமைந்துள்ளது. அறிவு ஜீவிகள்‌ என்று சொல்லக்‌ 
கூடிய மேதாவி விமரிசகர்கள்‌ குழு மனப்பான்மையுடன்‌ 
இருட்டடிப்பு செய்தாலும்‌ அவருடைய வாசகர்‌ பரப்பளவு நாளும்‌ 
விரியத்தான்‌ செய்கிறது. வானொலியிலும்‌, தொலைக்‌ 
காட்சியிலும்‌ ஒலிக்கும்‌ பெயராக இருந்ததால்‌ மக்கள்‌ 
காதுகளில்‌ இப்போதும்‌ ஒலித்துக்‌ கொண்டே இருக்கிறது. 


சிறுகதையோ, . நெடுங்கதையோ அவர்‌ படைப்பில்‌ 
அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது. பத்திரிகை உலகில்‌ 
தமிழ்ச்சாதி எழுத்தாளர்களுக்கு விளம்பர மின்மையும்‌ 
மறைக்கப்படுதலும்‌ மரபாகிவிட்டமை ஒன்றும்‌ புதிதல்ல. 
காரிருளைக்‌ கிழித்து வரும்‌ கதிரவன்‌ ஒளிபோலப்‌ 
படைப்பாற்றலால்‌ எழுத்தாளர்கள்‌ ஒளிவீசத்தான்‌ செய்கிறார்‌ 
கள்‌. அவ்வகையில்‌ சமுத்திரம்‌ தடைகள்‌ பல கடந்து இலக்கிய 
உலகில்‌ அங்கீகாரம்‌ பெற்றுவிட்டார்‌. 


இத்தொகுப்பில்‌ இடம்பெற்றுள்ள கதைகளில்‌ அலுவலகங் 
களின்‌ அவலமும்‌, அதிகாரிகளின்‌ ஆணவப்போக்கும்‌ லஞ்ச 
லாவணியங்களின்‌ சீர்கேடும்‌ மிகுந்த அழுத்தத்துடன்‌ 
பேசப்படுகின்றன. 


10. 


11. 


பொருளடக்கம்‌ 


காகித உறவு 

குடிக்காத போதை 

அசைக்க முடியாது 
சமூகப்புயலில்‌ ஒரு காதல்‌ கூடு 
லாரிச்‌ சிங்கி 

ஏழை - ஆப்பிள்‌ - நட்சத்திரம்‌ 
சனிக்கிழமை 

பிறக்காத நாட்கள்‌ 

ஒரு ஏழைப்‌ பெண்ணின்‌ வாள்‌ 
பண்டாரம்‌ படுத்தும்‌ பாடு 


இரத்தத்‌ துளிகள்‌ பயிராகின்றன 


௧௨௨௨௧௬ ௯௫ 


தக 


௧௨,௦௧௦௯ 


ஆடக ௬௬ 


ப்கீக.ம்‌ 


12 


18 


23 


30 


41 


47 


57 


07 


76 


94 


காகித உறவு 


மூதல்‌ 'காலத்தில்‌' “பெயர்‌' என்ற வார்த்தைக்கு முன்னால்‌ 
'மாடசாமி: என்று எழுதினான்‌. 

இரண்டாவது காலமான *உத்தியோகம்‌': என்ற வார்த்தைக்கு 
வந்தான்‌. :அக்கெளண்டண்ட்‌”. 

மூன்றாவது காலமான *சம்பளத்திற்கு' வந்தான்‌. எந்தச்‌ 
சம்பளம்‌? அடிப்படைச்‌ சம்பளமான ரூபாய்‌ ஐந்நூறா; இல்லை 
அலவன்ஸோடு சேர்த்த தொகையா? போகட்டும்‌, வாங்கும்‌ 
சம்பளமா? அல்லது வாங்க வேண்டிய சம்பளமா? சிறிது குழம்பி), 
எப்படியோ அந்த இடத்தையும்‌ நிரப்பினான்‌. 

சென்ற தடவை என்ன காரணத்திற்காகப்‌ பணம்‌ 
எடுக்கப்பட்டது?” என்ற காலத்திற்கு முன்னால்‌ வந்து, சிறிது 
நொண்டினான்‌. என்ன காரணம்‌? 

ஞாபகத்துக்கு வந்துவிட்டது. அவனால்‌ மறக்க முடியாத 
காரணம்தான்‌. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில்‌ அவன்‌ 
தந்‌ைத உயிரோடு இருந்தபோது அவர்‌ “இறந்துவிட்ட” ஈமச்‌ 
சடங்கிற்காக, இரண்டாயிரம்‌ ரூபாய்‌ கேட்டு மனுப்‌ போட்டான்‌ 
அவன்‌. அவன்‌ எந்தச்‌ சமயத்தில்‌ எழுதினானோ தெரியவில்லை. 
சொல்லி வைத்து போல்‌, அவன்‌ தந்‌ைத அடுத்த மாதம்‌ அதே 
தேதியில்‌, அவன்‌ *காரண காலத்தைப்‌ பூர்த்தி செய்த அதே 
காலத்தில்‌ காலமானார்‌ என்றாலும்‌ அய்யாவின்‌ சாவுக்காக, 
வாங்கிய இரண்டாயிரத்தை, அவர்‌ இறப்பதற்கு முன்னதாகவே, 
அருமை மகள்‌ ஸ்டெல்லாவுக்கு ஐந்து பவுன்‌ தங்கத்தில்‌ சங்கில்‌ 
செய்து போட்டு விட்டாண்‌. அப்பன்‌ இறந்தபோது அந்தச்‌ சங்கிலியை, 
அவனால்‌ மகள்‌ கழுத்திலிருந்து இறக்கவும்‌ முடியவில்லை. 
இறந்தபோது தந்தையின்‌ ஈமச்சடங்கிற்கெணன்று சித்திக்குப்‌ பணமும்‌ 
கொடுக்கவில்லை. 

எவ்வளவு வேண்டும்‌?” என்ற இடத்திற்கு முன்னால்‌ 
மூவாயிரம்‌ ரூபாய்‌ என்று எழுதிவிட்டு, கடைசி காலத்திற்கு 
வந்தான்‌. உடனே உண்மையிலேயே திணறிப்‌ போனான்‌. அந்தக்‌ 
'காலம்‌', தன்‌ மனுவுக்கு 'காலன்‌' போல்‌ வந்திருப்பதை நினைத்து, 
அவனுக்குக்‌ கொஞ்சம்‌ கோபங்கூட வந்தது. எண்ன காரணத்தை 
எழுதுவது? 

அய்யாவை, இரண்டாவது தடவையாகச்‌ சாகடிக்க முடியாது. 
அம்மாவை... அவள்‌ இளைய தாயார்‌ தானே... சாகடிச்சால்‌ என்ன? 


6 காகித உறவு 





வேண்டாம்‌. வேண்டவே வேண்டாம்‌. இந்தக்‌ காலத்தில்‌ எழுதப்‌ 
போய்‌, அவள்‌ காலம்‌ முடிந்து விட்டால்‌, அவளோடு 
கன்னிகழியாமல்‌ இருக்கும்‌ இரண்டு தங்கச்சி சனியன்களும்‌ 
அவன்‌ காலில்‌ வந்து உட்கார்ந்தால்‌, அவனால்‌ வாழ்க்கையை 
எப்படி நடத்த முடியும்‌? 

முடியாத்‌ 

அவனுடைய பெண்‌ குழந்தைகளான பப்பிக்கும்‌, 
ஸ்டெல்லாவுக்கும்‌ காது குத்தலாமா? முடியாது. அவர்களுக்கு 
ஏற்கனவே இரண்டு மூன்று தடவை, பேப்பரில்‌ காது 
குத்தியாகிவிட்டது. இனிமேல்‌ அந்தக்‌ “காதுகுத்து” வேலை எ௫படாது. 
அப்படியானால்‌ என்ன செய்யலாம்‌? 

அரை மணிநேரம்‌ கழித்து, அவன்‌ இருக்கைக்கு வந்த 
போது, நிர்வாக அதிகாரி, “என்னாச்சி?” என்றார்‌. 

“மூளையைக்‌ குழப்பிக்கிட்டிருகேன்‌'”' என்று அவன்‌ 
பதிலளித்தபோது தபால்காரர்‌ ஒரு கடிதத்தை நீட்டினார்‌; அதை 
அவன்‌ வாங்கிக்‌ கொண்டே, கடித உறையைப்‌ பார்த்தான்‌. தங்கை 
தமயந்தி கிராமத்திலிருந்து எழுதியிருக்கிறாள்‌. இந்தச்‌ சனியனுக்கு 
வேறு வேலை இல்லை... வழக்கமான பல்லவியாகத்தான்‌ இருக்கும்‌. 

அன்பில்லாத அண்ணாவுக்கு. 

எல்லாம்‌ வல்ல, நியாய அநியாயங்களைக்‌ கடந்த இறைவன்‌ 
அருளால்‌, நானும்‌ என்விரக்தியும்‌, எழுபது வயது அம்மாவும்‌ 
அவள்‌ நோயும்‌, இருபத்தெட்டு வயதுத்‌ தங்கை கல்யாணியும்‌, 
அவளது கல்யாண நிராசையும்‌, வழக்கம்‌ போல்‌, நல்லபடியாகவும்‌, 
ஒற்றுமையாகவும்‌, சொத்தில்லா சுகத்தோடும்‌ சுகமில்லா 
மனத்தோடும்‌ இருக்கிறோம்‌. இது போல்‌ நீயும்‌, உண்‌ ஸ்கூட்டரும்‌, 
அண்ணியும்‌, அவள்‌ நகைகளும்‌, பப்பியும்‌, அவள்‌ நாட்டியமும்‌, 
ஸ்டெல்லாவும்‌, அவள்‌ ஐந்து பவுன்‌ சங்கிலியும்‌ நலமாக இருக்க, 
சத்தியமாக இறைவனைப்‌ பிரார்த்திக்கிறேன்‌. 

அண்ணா! நன்றாக நினைத்துப்பார்‌. உனக்கு மூன்று 
வயதானபோது, உன்‌ அம்மா - எண்‌ பெரியம்மா - இறந்து 
போனாள்‌. எனக்கு விவரம்‌ தெரியாத பருவத்தில்‌, உன்‌ இளைய 
தாயாரான என்‌ அம்மா, உன்னைக்‌ கொடுமைப்படுத்தினாளோ 
என்னவோ. ஆனால்‌ எனக்கு விவரம்‌ தெரிந்த வயதிலிருந்து 
அவள்‌ உன்னிடம்‌ இளைய தாயாராக நடக்காமல்‌, உன்‌ பொருட்டு 
இளைத்த தாயாராகத்தான்‌ நடந்து கொண்டு வந்தாள்‌ என்று 
நான்‌ - தெய்வ பக்தியுள்ள நான்‌ - எந்தக்‌ கோவி விலும்‌ 


காகித உறவு 7 


வ ல பட ட பழ டட அகட ப்பட்ட ப்ப பப ப்பட்ட பவ பபப பப்ட்ப ப்ட்‌ கட்டப்படும்‌ 
கற்பூரத்தை அணைக்கத்‌ தாயார்‌. அக்கம்‌ பக்கத்துக்காரர்கள்‌ 
அம்மாவிடம்‌ வந்து 'ஒனக்கு பகவான்‌ கிருமையில்‌ ஒரு ஆம்புளப்‌ 
பிள்ளை பிறக்கணும்‌:, என்று சொல்லும்போதெல்லாம்‌, எனக்கு 
இனிமே பிள்ளையே வேண்டாம்‌. என்‌ ஒரே மவன்‌ மாடசாமி 
காலும்‌ கையும்‌ கெதியா இருந்தால்‌ அதுவே போதும்‌', என்று நீ 
இல்லாத சமயங்களில்‌ அவர்களுக்கு அம்மா பல தடவை 
பதிலளித்ததைக்‌ காதுபடக்‌ கேட்டிருக்கிறேன்‌. நீ ஈ.எஸ்‌.எல்‌.ச 
முடித்தவுடன்‌ உன்னை உயர்நிலைப்பள்ளியில்‌ சேர்க்க வேண்டும்‌ 
என்று ஒற்றைக்‌ காலில்‌ நின்றவள்‌ அவள்‌. நீ எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. 
முடித்ததும்‌, நமக்கும்‌ தோளுக்குமேல்‌ ரெண்டூ பொட்டப்பிள்ளைங்க 
இருக்கு. இவனை வேலைக்கு மனுப்போடச்‌ சொல்லலாம்‌' என்று 
அப்பா சொன்னபோது, நீ மேற்கொண்டு படித்துத்தான்‌ 
ஆகவேண்டும்‌ என்று அப்பாவை அடிக்காத குறையாகப்‌ பேசி 
வெற்றி கண்டவள்‌ அம்மா. அப்படின்னா ஒன்‌ வயத்துல பிறந்த 
ஒருத்தியையாவது படிக்க வைக்கணும்‌' என்று அவர்‌ சொன்னதும்‌, 
அம்மா அரைகுறையாகச்‌ சம்மதிக்க, நான்‌ எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. வரை 
படித்தேன்‌. நான்‌ பி.யூ.சி. படிக்க விரும்பியபோது நீ காலேஜில்‌ 
கஷ்டமின்றிப்‌ படிப்பதற்காகவும்‌, உன்‌ ஹாஸ்டல்‌ 
செலவுகளுக்காகவும்‌, என்னைப்‌ படிக்க வைக்கக்கூடாது என்று 
வாதாடி, காரியத்தைச்‌ சாதித்துக்‌ கொண்டவள்‌ உன்‌ சித்தி. பட்டப்‌ 
படிப்பை முடித்து, வேலையில்‌ சேர்ந்த கையோடு நீ கல்லூரித்‌ 
தோழியைக்‌ கல்யாணம்‌ செய்ய நினைத்தபோது, முரண்டு 
குமரிங்கள கரையேத்தாம... ஒனக்குக்‌ கல்யாணம்‌ இல்லை” என்று 
கோபமாகத்‌ திட்டிய அய்யாமீது கோபப்பட்டு, கல்யாணத்தை 
மேளதாளத்துடன்‌ நடத்தி வைத்தவள்‌ உன்‌ அம்மாவுக்கு மாற்றாகவும்‌, 
மாற்றுக்‌ குறையாமலும்‌ வந்த என்‌ அம்மா. 

ந பணம்‌ அனுப்பவில்லை என்பதைவிட, போட்ட 
கடிதத்திற்குப்‌ பதில்‌ அனுப்பவில்லையே என்ற எண்ணத்திலும்‌, 
வயது வந்த இரண்டு பெண்களை எப்படிக்‌ கரையேற்றுவது என்று 
புரியாமலும்‌ நாடி நரம்பெல்லாம்‌ வாடி வதங்க எங்களை வாடிய 
மலர்களாக்கி, மயான பூமியில்‌ அய்யா மறைந்து கொண்டார்‌. நீ 
ஈமச்‌ சடங்கிற்கு வந்தாய்‌. இருக்கிற நிலத்தை விற்பதற்கான 
பத்திரத்தில்‌ பெரிய மனது பண்ணிக்‌ கையெழுத்துப்‌ போட்டு, 
அந்தப்‌ பணத்தை அய்யாவின்‌ ஈமச்‌ சடங்கிற்கும்‌, அம்மாவிற்கு 
வெள்ளைப்‌ புடவை வாங்குவதற்கும்‌ அனுமதித்த உனக்கு, நாங்கள்‌ 
நன்றி செலுத்திக்‌ கொண்டோம்‌. நீயும்‌ ஏதோ ஒரு வேகத்தில்‌ 


8 காகித உறவு 





'பெஸண்ட்‌ நகரில்‌ குவார்ட்டர்ஸ்ல இருக்கிறேன்‌... வசதியா 
இருக்கும்‌. வந்துடுங்க, என்று சொல்லிவிட்டுப்‌ போய்‌, பிறகு 
பதிலே போடவில்லை. என்றாலும்‌, ஆதரவற்ற அனாதைகளான 
நாங்கள்‌, உனக்குக்‌ கடிதமெழுத நேரமிருந்திருக்காது என்று 
எங்களையே நாங்கள்‌ ஏமாற்றிக்கொண்டு உன்‌ வீட்டிற்கு 
வந்தோம்‌. ப ்‌ 

வாசலுக்கு வந்த அண்ணி, வாங்களென்று கூப்பிடாமலே 
அறைக்குப்‌ போய்விட்டாள்‌. ஓடிவந்த பிள்ளைகளையும்‌ அடித்தாள்‌. 
இருந்தாலும்‌ நாங்கள்‌ செஞ்சோற்றுக்‌ கடன்‌ கழித்தோம்‌ என்று 
பெருமையாகச்‌ சொல்லிக்‌ கொள்ளலாம்‌. மாதம்‌ இருபது ரூபாய்க்கு 
அமர்த்தியிருந்த வேலைக்காரியை நீக்கச்‌ சொல்லிவிட்டு, 
அம்மாவே வீட்டு வேலைகளைச்‌ செய்தாள்‌. வேலைக்காரிக்குக்‌ 
கொடுத்த பழையதைச்‌ சாப்பிட்டாள்‌. மாதம்‌ இருபது ரூபாய்க்கு 
பிள்ளைகளை கான்வென்ட்களுக்கு இட்டுச்‌ சென்ற ஆயாவிற்கு, 
நான்‌ மாற்று ஆயாவானேன்‌. தங்கை கல்யாணி துணிமணிகளைத்‌ 
துவைப்பதிலிருந்து கடைகண்ணிகள்்‌ வரை போய்க்‌ 
கொண்டிருந்தாள்‌. நீ அலுவலகம்‌ போனதும்‌ அறைக்குள்‌ போகும்‌ 
அண்ணி, மத்தியானம்‌ சாப்பிடமட்டூம்‌ ஹாலுக்குள்‌ வருவாள்‌. 
சாப்பாடு மோசம்‌ என்று பாதியில்‌ வைத்துவிட்டு, கல்யாணியைப்‌ 
பழம்‌ வாங்கிகொண்டு வரச்‌ சொல்வாள்‌. ஜாடைமாடையாகத்‌ 
திட்டுவாள்‌. சுயமரியாதைக்காரியான அம்மா, எங்களின்‌ 
எதிர்காலத்திற்காகவும்‌, உன்‌ மனம்‌ நோகக்கூடாது என்பதற்காகவும்‌ 
பொறுத்துக்‌ கொண்டாள்‌. அண்ணி, எங்க பப்பிக்கு வாரவன்‌ 
கலெக்டரா இருப்பான்‌. இல்லன்னா சயன்டிஸ்டா இருப்பான்‌”, 
என்று வயதுக்குவராத பெண்ணைப்‌ பற்றிக்‌ கனவு காணும்போது, 
கனவுகள்‌ நனவாகாமல்‌ நசித்துப்‌ போயிருந்த வயதுக்கு வந்த 
நாங்கள்‌, கொஞ்சம்‌ பொறாமைப்பட்டதும்‌ உண்மைதான்‌. 
அம்மாவிடம்‌ இதை இலைமறைவு காய்மறைவாகக்‌ காட்டும்போது, 
அவள்‌ எங்களை ஏசிய ஏச்சை இங்கே எழுத முடியாது. 

பெஸண்ட நகரில்‌ உள்ள வரசித்தி விநாயகர்‌ கோவிலை 
அதிகாலையில்‌ ஒன்பது தடவை சுற்றினால்‌, கல்யாணம்‌ கூடும்‌ 
என்று அம்மாவிடம்‌ ஒரு மாமி கூறியதை ஒட்டுக்‌ கேட்ட நான்‌, 
மறுநாளிலிருந்து பிள்ளையாரைச்‌ சுற்றினேன்‌. அதற்கு 
ஏற்றாற்போல்‌, ஒரு வரன்வந்தது உனக்கு ஞாபகம்‌ இருக்கும்‌. 
வெள்ளிக்கிழமை நல்ல நாள்‌. நிறைந்த பெளர்ணமி நாள்‌. 
ஞாபகம்‌ இருக்கா அண்ணா? 


காகித உறவு 9 


அ அத டட அலம்ப ப பபப ப ப்ப பப பய வவ விட்டிடு மப்பு படப்பட பிட பப்பட்‌ பலவ பப்டி 

(நாலாயிரம்‌ ரொக்கம்‌. நகை போட்டா போதுமாம்‌. 
திருவான்மியூ்ர்ல மளிகைக்கடை வச்சிருக்கற பையனுக்குக்‌ 
கேட்டாக' என்று அம்மா சென்னாள்‌. 

உடனே, நாலாயிரம்‌ ரூபாய்க்கு எங்க போவ? ஸ்கூட்டர்‌ 
கடன்‌, பெஸ்டிவல்‌ கடன்‌, ஜி.பி.எப்‌. கடன்‌, பரீட்சை பீஸ்‌, பால்‌ 
கார்டு அது இது என்று போக பைசா மிச்சமில்லை...' என்று நீ 
. இழுத்தாய்‌. அம்மாவாவது சும்மா இருந்திருக்கலாம்‌ மனம்‌ இருந்தா 
மார்க்கம்‌ இல்லாமலா போகும்‌?' என்று சொல்லிவிட்டூ, நாக்கைக்‌ 
கடித்தாள்‌. உன்‌ மனைவி, தன்‌ பங்குக்கு நாக்கை நீட்டிவிட்டாள்‌. 
(இந்த சனியங்க வந்ததிலிருந்து எனக்கு நிம்மதியில்லாமப்‌ போச்ச'. 
போன பிறவியில்‌ செய்த கர்மம்‌ எவ எவளுக்கெல்லாமோ இங்கு 
அழணுமாம்‌; வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தா இப்படி 
வாய்க்‌ கொழுப்பு இருக்குமா? கிழவிக்கு மாப்பிள்ள பார்க்க 
முடியுமா? மனதிருந்தாலும்‌, கிழடா போனவளுக்கு வாலிபன்‌ 
கிடைக்கறது லேசா?” என்று கொட்டினாள்‌. 

நீயாவது அண்ணியைத்‌ தடுத்துக்‌ கேட்டிருக்கலாம்‌ 
அண்ணன்‌ தடுக்கவில்லையே என்ற ஆத்திரத்தை நானாவது 
அடக்கியிருக்கலாம்‌. என்னால்‌ இயலவில்லை. 

நானும்‌, “அம்மா சொன்னதுல என்ன அண்ணி தப்பு? 
மனம்‌ இருந்தா மார்க்கமும்‌ தானாக வரும்‌. நீங்க போட்டிருக்கிற 
நகைய எனக்குப்‌ போடப்படாதா? சின்னப்‌ பொண்ணு 
ஸ்டெல்லாவின்‌ சங்கிவியைத்‌ தரப்படாதா. ஜடமா இருக்கிற ஸ்கூட்டர 
வித்து இந்த ஜடங்கள கரையேத்தக்‌ கூடாதா? அப்படியே 
இல்லாவிட்டாலும்‌ பி.ஏ. படிச்ச நீங்க. கொள்ச நாளைக்கு 
வேலைக்குப்‌ போயி எங்களுக்கு வழி பண்ண முடியாதா? 
அண்ணன்‌ ஒரு நாளைக்கு மூணு ரூபாய்க்கு மூணு பாக்கெட்‌ 
சிகரெட்‌ பிடிக்காரு. தங்கச்சிக்குக்‌ கல்யாணம்‌ பண்ணனும்‌ என்கிற 
வைராக்யத்துல அத. விட்டா மாசம்‌ நூறு ரூபாய்‌ தேறும்‌. போகட்டும்‌. 
பப்பிக்கு முப்பது ரூபாய்‌ செலவுல டான்ஸ்‌ முக்கியமா? பதினைஞ்சு 
ரூபாய்‌ தந்தா டைப்ரைட்டிங்‌ கத்து, நான்‌ வேலைக்குப்‌ போயி), 
. எனக்கு நானே ஒரு வழி பண்ணியிருப்பேன்‌. முடியாததுன்னு 
உலகத்துல எதுவுமே இல்ல அண்ணி. மனசுதான்‌ வேணும்‌' என்று 
ஏதோ ஒரு வேகத்தில்‌ கேட்டுவிட்டேன்‌. 

நான்‌ அப்படிப்‌ பேசியிருக்கக்‌ கூடாதுதான்‌. ஆனால்‌ அதற்கு 
நஷ்டஈடு கொடுப்பதுபோல்‌, அம்மா என்‌ தலைமுடியைத்‌ தன்‌ 
கைக்குள்‌ சுற்றி வளைத்துக்கொண்டூ முதுகிலும்‌ பிடரியிலுமாகக்‌ 
கொடுத்தாள்‌. என்னைக்‌ கோபத்தோடு பார்த்த உன்‌ காலைத்‌ 


10 காகித உறவு 





தொட்டு அம்மா கும்பிட்டதுடன்‌, “திமிர்‌ பிடிச்ச கழுத பேசுறத 
தப்பா நினைச்சிக்காதப்பா பால்‌ குடுக்கிற மாட்ட பல்லப்‌ பிடிக்கிற 
ஜென்மம்‌ இவா' என்று சொல்லிவிட்டு மீண்டும்‌ என்னை 
அடித்தாள்‌. எனக்கு அவள்மேல்‌ அனுதாபந்தான்‌ ஏற்பட்டது. : 

. போதாத வேளை - பப்பிக்கு ஜுரம்‌ வந்துவிட்டது. சீஸன்‌ 
கோளாறுதான்‌. ஆனால்‌ அண்ணியோ, “எந்த வேளையில இந்த 
முண்ட நீ பெத்த பொண்ணுக்கு டான்ஸ்‌ எதுக்குன்னு கேட்டாளோ 
என்‌ பொண்ணு உடம்பெல்லம்‌ ஆடுது. இந்த நிமிஷத்துல இருந்து 
இவளுக இங்க இருக்கப்படாது. ஒண்ணு அவளுக போகணும்‌... 
இல்லன்னா நான்‌ போகணும்‌' என்றாள்‌. 

இரண்டூ மூன்று நாட்களில்‌ நீ மூன்று டிக்கெட்டுகளை 
வாங்கி, மெளனமாக எங்களிடம்‌ நீட்டினாய்‌. 
கிராமத்திற்கு வந்த நாங்கள்‌ மனமிரங்கி லெட்டர்‌ போட 
மாட்டாயா என்று ஏங்கினோம்‌. போஸ்ட்‌ மேனிடம்‌ உன்‌ கடிதம்‌ 
வருகிறதா என்று உனக்காக அவரிடம்‌ பேசி, இறுதியில்‌ 
அவருக்காகவே பேசத்‌ துவங்கினேன்‌. முப்பது வயது ப்‌ ரம்மசாரி 
அவர்‌. என்னைப்போல்‌ எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. வரசித்தி விநாயகர்‌ 
ஏமாற்றவில்லை. எப்படியோ எங்கள்‌ உள்ளங்கள்‌ ஒன்றிப்‌ 
போய்விட்டன. அவர்‌ நல்லவர்‌. ஏனென்றால்‌ பேனாவைப்‌ 
பிடிக்காமல்‌, உத்தியோகம்‌ பார்ப்பவர்‌. நம்பிக்கையானவர்‌. 
ஏனென்றால்‌ அதிகம்‌ படிக்காதவர்‌, இன்னும்‌ ஒரு வாரத்தில்‌ 
எங்கள்‌ திருமணம்‌ தோரணமலை முருகன்‌ கோவிலில்‌ 
நடக்கப்போகிறது. 
எப்படியோ, நீ கல்யாணத்துக்கு வந்தால்‌, தாரை வார்த்துக்‌ 
கொடுக்க வேறு ஆள்பார்க்க வேண்டிய அவசியம்‌ இருக்காது. 
பணம்‌ இல்லை யென்றாலும்‌, எப்படியாவது வருவதற்கு டிக்கெட்டு 
வாங்கிவிடு. போகும்போது அவர்‌ டிக்கெட்‌ வாங்கிக்‌ கொடுப்பார்‌. 
அன்புள்ள ஒன்றுவிட்ட தங்கை, 
- தமயந்தி 
கடிதத்தைப்‌ பாதி படிக்கும்‌ போதே பல்லைக்‌ கடித்த 
மாடசாமி, முழுவதும்‌ படித்ததும்‌ அதிர்ந்து போனான்‌. தமயந்தி 
மீது கோபம்‌ வந்தது. 
மாலையில்‌ வீட்டுக்கு வந்ததும்‌, மனைவியிடம்‌ கடிதத்தைக்‌ 
கொடுத்தான்‌. 


காகித உறவு 11 


“லெட்டரா எழுதியிருக்கா? அந்தக்‌ காலத்துல பில்லி 
சூன்யம்‌ வைக்கறதுக்காக, மந்திரச்‌ சொல்ல இப்படித்தான்‌ மறச்ச] 
வைப்பாங்களாம்‌. நாம நாசமா போகணுமுன்னு சாபமிட்டிருக்கா.” 

நாலைந்து நாட்கள்‌ நடந்தன. தமயந்தியின்‌ கடிதத்தை 
மறந்தேவிட்டார்கள்‌. ஆனால்‌ ஜி.பி.எப்‌ லோனை மட்டும்‌ 
மறக்கவில்லை. மாடசாமி மனைவியிடம்‌, லோனுக்கு 
அத்தாட்சியோடு கூடிய காரணத்தை எப்படிக்‌ கற்பிக்கலாம்‌ என்று 
கேட்டபோது, அவள்‌ சளைக்காமல்‌ பதில்‌ சொன்னாள்‌. 

“தமயந்தி கல்யாணமுன்னு சொல்லுங்க. அவள்‌ ஒங்கள 
அண்ணன்னு நினைக்கலன்னாலும்‌, நீங்க அவளை தங்கச்சிங்‌ கறத 
மறக்காமத்தான்‌ இருக்கீங்க... கல்யாண நோட்டீஸ்‌ வச்சி அனுப்புங்க...” 

“அதெப்படி முடியும்‌? அது நியாயமில்ல.”” 

“எது நியாயமில்ல? இன்னையோட உறவு போயிடப்‌ போறதா, 
என்ன? நாளைக்கி, அவள்‌ வாயும்‌ வயிறோட இருக்கையில்‌ 
நாம கவனிக்க வேண்டியது இருக்குமே. அவகிடக்கட்டும்‌. 
கவனிக்காண்டாம்‌. அத்தையையும்‌, கல்யாணியையும்‌ அவா அடிச்சி 
விரட்டமாட்டாங்கறது என்ன நிச்சயம்‌? அப்போ நாமதான 
கவனிக்கணும்‌. 

அவன்‌ ஒருநாள்‌ யோசித்தான்‌; மறுநாள்‌ பிகு செய்தான்‌. 
அதற்கு அடுத்த நாள்‌ கல்யாண அழைப்ப தழழமுடன்‌, விண்ணப்பத்தை 
அனுப்பினான்‌. அருமைத்‌ தங்கைக்குத்‌ தன்னை விட்டால்‌ 
வழியில்லை என்று விளக்கமாக எழுதியிருந்தான்‌. மூவாயிரம்‌ 
ரூபாய்‌ நாலு நாளில்‌ சாங்கஷனாகி பி.ஏ.ஒ ஆமீசுக்குப்‌ போய்‌ 
பணமும்‌ வந்து, “பப்பி” பேரில்‌ ப1க்ஸாகிவிட்டது. 

மிஸஸ்‌ மாடசாமிக்கு இன்னும்‌ திருப்தியில்லை. 
ஸ்டெல்லாவுக்கும்‌ ஒரு வழி பண்ண வேண்டாமா? அரசாங்க 
கஜானாவில்‌ அவன்‌ பேரில்‌ உள்ள அடிஷனல்‌ கிராக்கிப்படி 
இரண்டாயிரம்‌ ரூபாய்‌ தேறும்‌. சார்ந்திருக்கும்‌ உறவினர்களில்‌ 
ஒருவருக்குத்‌ தீரா நோய்‌ இருப்பதாக மருத்துவ அத்தாட்சியுடன்‌ 
காட்டினால்‌ அவ்வளவு பணத்தையும்‌ கொடுத்துவிடுகிறார்களாம்‌. 
கணவனை நம்பியிருக்கும்‌ அவனது சிறிய தாயாருக்கு - 
அவளின்‌ மாமியாருக்கு - தீராத வாத்‌ நோய்‌, ஏற்கனவே 
அவளுக்குச்‌ சென்னையிலிருந்து வாங்கி மெடிக்கல்‌ ரி 
எம்பர்ஸ்மெண்ட்‌' செய்த “பில்லுகள்‌' நிறைய வருகின்றன. 
அவற்றை அத்தாட்சியாகக்‌ காட்டி இரண்டாயிரம்‌ ரூபாயையும்‌ 
வாங்கிவிடலாம்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருக்கிறாள்‌. 


்‌ெே்‌்‌ூ ௨ 9 


குக்காத போதை 


ஊளருக்குச்‌ சற்றுத்‌ தொலைவில்‌, ஹிப்பி மாதிரி ஒதுங்கிய 
இடம்‌. சுற்றிலும்‌ கருவேல மரங்கள்‌ இரும்புக்‌ கம்பிகள்‌ மாதிரியும்‌ 
அவற்றிற்கு இடையே இருந்த வேலிக்காத்தான்‌ செடிகள்‌, முட்கம்பி] 
வலைகள்‌ மாதிரியும்‌ இருந்த இடம்‌. மொத்தத்தில்‌ அது ஒரு 'மாதிரி! 
இடமல்ல. “ஒரு மாதிரியான? இடம்‌. இந்த இடத்தைச்‌ சுற்றிக்‌ 
கரைவரை மணல்‌ புரளும்‌ ஓடை :அகழி' மாதிரி மூன்று பக்கமும்‌ 
சுற்றி இருந்தது. கிட்டத்தட்ட காடு, தலைகீழ்‌ பரிணாமத்தால்‌ 
தோப்பானது போலவும்‌, தோப்பு காடாகப்‌ பரிணாமமாகிக்‌ 
கொண்டிருப்பது போன்றும்‌ தோன்றும்‌ பகுதி. 

இந்தப்‌ பகுதியில்‌ ஒர்‌ ஓரத்தில்‌, பாழடைந்த கட்டிடம்‌. அந்தச்‌ 
செங்கல்‌ கட்டிடத்தில்‌, இன்னும்‌ இடியாமலே விழுந்து 
கொண்டிருந்த ஒரு சுவருக்குப்‌ பக்கத்தில்‌, இரும்பு அடுப்பிற்கு ' 
மேலே, பத்து “பிளாடர்‌' அளவுக்கு அதாவது ஐம்பது லிட்டா்‌ 
கொள்ளளவு கொண்ட டிரம்‌. டிரம்மிற்கு மேலே பதினைந்து 
லிட்டர்‌ சரக்கைப்‌ பிடிக்கும்‌ தவலைப்‌ பாத்திரம்‌. அதற்கு மேலே 
டேங்கா' - அதாவது ஒரு சின்னப்பாத்திரம்‌. இந்த மூன்று 
உபகரணங்களும்‌ காற்றுப்‌ புகாதபடி, எதையோ வைத்துக்‌ 
கட்டப்பட்டிருந்தன. உச்சியில்‌ இருந்த பாத்திரம்‌, அலுமினியத்‌ 
தகட்டால்‌ மூடப்பட்டு, பிரிக்க முடியாத பிராண சிநேகிதர்கள்‌ 
போல்‌ இறுக்கப்பட்டிருந்தது. 

மேலே இருந்த :டேங்கா'வில்‌ முழுக்க முழுக்கத்‌ தண்ணீர்‌ 
இருக்கிறதாம்‌. அதற்குக்‌ கீழே இருந்த “டிரம்மில்‌” ஊறப்போட்ட 
வெல்லமும்‌, பட்டைகளும்‌ கொட்டைகளும்‌ கொஞ்சம்‌ சல்போட்டா 
வகைகளும்‌ இன்னும்‌ பல :கிக்‌' வகையறாக்களும்‌ 
இருக்கின்றனவாம்‌. இரும்படுப்பில்‌ எரியும்‌ செந்த்‌ அனலைக்‌ 
கக்கியதால்‌, டிரம்மிற்குள்‌ இருப்பவை பொங்கி எழுந்து, “ஆவியாகி” 
'டேங்காவில்‌” பட்டுக்‌ குளிர்ச்சியாகி, ஜீவாத்மாவான அந்த ஆவி), 
பரமாத்மாவாகி', நடுவில்‌ இருந்த தவலைப்‌ பாத்திரத்திற்குள்‌, 
சொட்டோ சொட்டென்று சொட்டிக்‌ கொண்டிருப்பதாகக்‌ கேள்வி. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்‌, ஜில்லா கலெக்டரை 
விட பலமடங்கு சர்வவல்லமையுள்ள, மாவட்டக்‌ காய்ச்சும்‌ 
அதிகாரியிடம்‌ தாலுக்கா சப்ளை அதிகாரியாக இருந்தவன்‌ 


காகித உறவு 13 





காளிமுத்து. அவருடைய பல கார்களில்‌ ஒரு கார்‌ இவனிடமே 
எப்போதும்‌ இருக்கும்‌. இந்த அளவுக்கு, மா.கா. அதிகாரியிடம்‌, 
தா.௪. அதிகாரியாகப்‌ பணி புரிந்தவன்‌. சொந்தத்தில்‌ “தொழில்‌” 
செய்ய நினைத்து, கொஞ்ச காலத்திற்கு முன்புதான்‌, இந்தக்‌ 
காய்ச்சும்‌ தொழிலில்‌ இறங்கினான்‌. சப்ளை அதிகாரியாக 
இருந்தபோது, தெரிந்து கொண்ட தொழில்‌ நுட்ப விவரங்களை 
வைத்து, இந்தக்‌ குடிசைத்‌ தொழிலைத்‌ துவக்‌ஃ. போது, பல 
கார்களையும்‌ பல அரசியல்‌ தலைவர்களையும்‌, பல 
அதிகாரிகளையும்‌ கைக்குள்‌ போட்டுக்‌ கொண்டிருந்த மாவட்டக்‌ 
காய்ச்சும்‌ அதிகாரி, அவனைச்‌ சொந்தத்‌ தொழில்‌ வேண்டாம்‌ 
என்று கெஞ்சினார்‌. அதற்கு அவன்‌ மசியாததால்‌, அடியாட்களை 
வைத்து மிஞ்சிப்‌ பார்த்தார்‌. *மாமூல்‌' ஆட்களை வைத்து மடக்கப்‌ 
பார்த்தார்‌. ஆனால்‌ எதற்கும்‌ காளிமுத்து கலங்கவில்லை. 
மாவட்ட காய்ச்சும்‌ அதிகாரியும்‌, புரொடெக்ஷன்‌ மானேஜர்‌, 
சப்ளை அதிகாரிகள்‌ முதலிய முக்கியப்‌ புள்ளிகளும்‌, அவனைப்‌ 
புள்ளி வைக்க முடியாது எனத்‌ தெரிந்து கொண்டு, சமாதான - 
சாராய - சகவாழ்வுக்‌ கொள்கையை, நேசக்‌ கரத்தோடுூ 
நீட்டினார்கள்‌. நீட்டிய கரத்தைப்‌ பிடித்துக்‌ கொண்ட காளிமுத்து, 
அவர்களிடமிருந்து *ஏரியா எல்லையை: வரையறுத்துக்‌ 
கொண்டதுடன்‌, ஆக்கிரமிப்புத்‌ தவிர்ப்பு ஒப்பந்தத்தையும்‌, பரஸ்பர 
ரகசியப்‌ பாதுகாப்பு உடன்பாட்டையும்‌ செய்து கொண்டான்‌. 
இப்படிப்பட்ட காளிமுத்துவை, அடியாளுக்கு அடியாளாக, 
அடியார்க்கும்‌ அடியானாக விளங்கும்‌ இதோ இந்த காளிமுத்துவை 
- ஒரு பொடிப்பயல்‌ மிரட்டுகிறான்‌ என்றால்‌, அதுவும்‌ *கிக்‌' 
கொடுக்கும்‌ இவனையே -கிக்‌' பண்ணப்‌ பார்க்கிறான்‌ என்றால்‌... ப 
அதே ஊரைச்‌ சேர்ந்த மூர்த்தி கொஞ்சம்‌ வசதியான 
வாலிபன்‌. கல்லூரியில்‌ முழுதும்‌ கால்‌ வைத்துவிட்டு, மழை 
இல்லாத சமயத்தில்கூட, அங்கே ஒதுங்கிய திருப்தியில்‌ அதற்கு 
அத்தாட்சியாக, ஒரு சர்ட்டிஃபி, கேட்டையும்‌ வாங்கிக்‌ கொண்டு, 
சமீபத்தில்‌ ஊருக்குள்‌' நிரந்தரமாக இருக்கிறான்‌. கல்லூரிப்‌ பேச்சுப்‌ 
போட்டிகளில்‌ பல கோப்பைகளை வாங்கியிருக்கிறான்‌. வாங்கட்டும்‌; 
அதுக்காக, அந்த ஊரில்‌ வழக்கமாக நடக்கும்‌ மதுவிலக்குப்‌ பொதுக்‌ 
கூட்டம்‌ ஒன்றில்‌, பல தாலுக்கா அதிகாரிகளும்‌ போலீஸ்‌ 
இன்ஸ்பெக்டரும்‌ கலந்து கொண்ட, பலர்‌ குடித்துப்‌ புரண்ட அந்தக்‌ 
கூட்டத்தில்‌, காளிமுத்துவை வாங்கு வாங்குன்னு வாங்க வேண்டுமா? 


14 குடிக்காத போதை 


கூடாதுதான்‌. காளிமுத்து யோசித்தான்‌. இவனை இந்தக்‌ 
கிறுக்குப்‌ பயல்‌ மூர்த்தியை, மாறுகால்‌, மாறுகை வாங்கினால்‌ 
என்ன? 

வாங்க முடியாது. ஏனென்றால்‌, மூர்த்தி வசதியானவன்‌. 
பங்காளி பலங்‌ கொண்டவன்‌. பெரும்பாலும்‌ குடியர்களாக 
இருந்தாலும்‌, அவனைத்‌ திட்டினாலே பொறுத்துக்‌ கொள்ளாத 
ஊரார்கள்‌, தீர்த்துக்‌ கட்டினால்‌ விடுவார்களா. மாட்டார்கள்‌. ஊரில்‌ 
முக்கால்‌ வாசிப்பேர்‌ எதிரியாவார்கள்‌? சமயத்தை எதிர்‌ நோக்கி 
நிற்கும்‌ மாவட்ட காய்ச்சும்‌ அதிகாரி, இவனைக்‌ கொக்குபோல்‌ 
கொத்தி விடுவார்‌. 'தொழில்‌' லாபத்தால்‌, மோட்டார்‌ பைக்கிலிருந்து 
மோட்டார்‌ கார்‌ வாங்கும்‌ அளவுக்கு முன்னேறிக்‌ கொண்டிருக்கும்‌ 
இந்தச்‌ சமயத்தில்‌, இந்தப்‌ பயலை எப்படி மடக்கலாம்‌ என்று 
காளிமுத்து தீவிரமாகச்‌ சிந்திக்கலானான்‌. ஓசிக்‌ குடிக்கு 
யோசனை கூறும்‌ சிலர்‌ ஒன்று கூடினார்கள்‌. ஒரு பெரிய வியூகம்‌ 
வகுக்கப்பட்டது. மூர்த்திப்பயல்‌ எப்படியும்‌ விழுந்துதான்‌ 
்‌- ஆகவேண்டும்‌! தனக்கு எல்லா வகையிலும்‌ பரிச்சயமான ஓர்‌ 
இளம்‌ பெண்ணை, மூர்த்திமேல்‌ ஏவினான்‌. இவள்‌ சிரித்துப்‌ 
பார்த்தாள்‌; கைகளை ஆட்டிப்‌ பார்த்தாள்‌. வாய்‌ வவித்ததும்‌, கை 
ஓய்ந்ததும்தான்‌ மிச்சம்‌. இது போதாதென்று காளிமுத்து தன்‌ 
ஒரே பெண்ணான மங்காத்தாவை நகை நட்டோடு, கட்டிக்‌ 
கொடுப்பதாக, மூர்த்தியின்‌ அப்பாவுக்கு முறைப்படி 
சொல்லவியனுப்பினான்‌. அப்பாக்காரர்‌ சம்மதித்தார்‌. ஆனால்‌ 
மகன்காரன்‌, “மங்காத்தா... தங்காத்தா! தாராளமாய்க்‌ கட்டிக்கிறேன்‌... 
அதுக்கு முன்னால்‌... அவளுக்கும்‌ குடிப்பழக்கம்‌ உண்டான்னு 
தெரிஞ்சாகணும்‌” என்று சென்னான்‌. இதைக்‌ கேள்விப்பட்ட, 
ஏற்கெனவே இன்னொருவனைக்‌ காதலிக்கும்‌ மங்காத்தா இதைச்‌ 
சாக்காக வைத்து, “குடிகார அப்பனுக்கு... பிறந்ததுனால... 
என்னையும்‌... குடிகாரின்னு, மூர்த்தி தடியன்‌ சொல்லிட்டான்‌. 
எல்லாம்‌ ஒங்களால... ஒங்களால...! கட்டுனால்‌ ராமதுரை 
மச்சானைத்தான்‌ கட்டுவேன்‌... ஆம்‌... ஆமாம்‌ கட்டுவேன்‌!” என்று 
காளிமுத்து வெட்டிய திட்டக்கிணற்றுக்குள்‌, ராமதுரை என்கிற 
பூதத்தைக்‌ கிளப்பி விட்டாள்‌. எல்லா விதத்திலும்‌ தன்னைப்‌ 
போல்‌ விளங்கும்‌ ராமதுரைக்கு மகளைக்‌ கொடுக்க முடியாமல்‌, 
காளிமுத்து - மெல்லவும்‌ முடியாமல்‌ விழுங்கவும்‌ முடியாமல்‌ 
திண்டாடினான்‌. 


காகித உறவு 15 





காளிமுத்துவுக்கு ஒன்று ஓடவில்லை. இந்தத்‌ தொழிலைத்‌ 
தவிர எந்தத்‌ தொழிலையும்‌ அவனால்‌ செய்ய முடியாது. மாவட்டக்‌ 
காய்ச்சும்‌ அதிகாரியும்‌ அவனை, மீண்டும்‌ தன்‌ 
டிபார்ட்மெண்டுக்குள்‌ எடுத்துக்‌ கொள்ள மறுத்து விட்டார்‌. இனி 
பொறுப்பதில்‌ நியாயமில்லை. என்ன வந்தாலுஞ்‌ சரி... 
மூர்த்திப்பயலை, தீர்த்துக்‌ கட்டியாக வேண்டும்‌... ஒரே வெட்டாக 
வெட்டியாக வேண்டும்‌... தலைவேறு... முண்டம்‌ வேறாக ஆக்கியாகி 
வேண்டும்‌. 

'வேலையை': முடிக்க, ஆட்களை அமர்த்துவதற்கு 
முன்னதாகவே, போலீஸ்‌ நிலையத்தில்‌ இருந்து, காளிமுத்துவுக்கு 
அழைப்பு வந்தது. போனான்‌. சப்‌ இன்ஸ்பெக்டர்‌ எரிந்து விழுந்தார்‌; 
காளிமுத்து, தன்னைக்‌ கொலை செய்யத்‌ திட்டமிட்டிருப்பதாகவும்‌, 
தனக்குத்‌ தக்க பாதுகாப்பு அளிக்கும்படியும்‌ கலெக்டரிடம்‌ 
கிரீவ்வன்ஸ்டே'யில்‌ (மனுநீதி திட்டநாள்‌) மூர்த்தி கொடுத்திருந்த 
விண்ணப்ப மனுவை, அவனிடம்‌, காட்டினார்‌. “மூர்த்தி மேல... 
ஒரு. சின்னக்காயம்‌ ஏற்பட்டாலுளு சரி... ஒன்‌ முதுகிலே... பெரிய 
காயம்‌ ஏற்படும்‌... ஜாக்கிரதை” என்று சப்‌ இன்ஸ்பெக்டர்‌, அவனைத்‌ 
திட்டினார்‌. லேசாகத்‌ தட்டிக்கூடப்‌ பார்த்தார்‌. “அவனை... எவன்‌ 
தாக்கினாலும்‌... நீ தாக்கியதாய்க்‌ கருதப்படும்‌” என்று தாக்கீதும்‌ 
கொடுத்தார்‌. 

இப்போது, மூர்த்திக்கு, வேறு விரோதத்தில்‌, வேறு எவனும்‌ 
'என்னக்காயங்‌' கூட விளைவிக்காமல்‌ இருப்பதைப்‌ பார்த்துக்‌ 
கொள்ள வேண்டிய பொறுப்பு காளிமுத்துவுக்கு வந்துவிட்டது. 
ஏற்கெனவே, மூர்த்திமீது, இன்னொரு *ஏரியா' ஆசாமிகள்‌ குறி 
வைத்திருப்பது தெரிந்ததும்‌, அவர்களின்‌ காலில்‌ விழாக்‌ குறையாக 
விழுந்து அழாக்‌ குறையாக அழுது அவர்களைத்‌ தடுப்பதற்குள்‌ 
காளிமுத்துவிற்குப்‌ போதும்‌ போதுமென்றாகிவிட்டது. 

இதற்கிடையே போலீஸ்காரர்கள்‌, “ரெய்ட்‌ பண்ண 
வரப்போவதாக, காளிமுத்துவுக்குத்‌ தகவல்‌ வந்தது. இந்தத்‌ 
தொழிலை எப்படிவிட முடியும்‌? இந்தச்‌ ச்ண்டாளனை, எப்படிச்‌ 
சமாளிக்க முடியும்‌, என்ன பண்ணலாம்‌.. ஒரே ஒரு வழிதான்‌... 
காளிமுத்து வெளியூருக்குப்‌ போய்விட்டு வந்தான்‌. அங்கே... 
தொழில்‌, சகாவின்‌ காதைக்‌ கடித்து விட்டூ, ஊருக்குத்‌ 
திரும்பினான்‌. இதிலாவது வெற்றி கிடைக்குமா? 


16 குடிக்காத போதை 





காதலியை கடைசி முறையாகப்‌ பார்ப்பவன்போல்‌, 
காளிமுத்து சாராயப்‌ பானையைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த போது, 
கையாட்கள்‌ கிளாஸ்களை நிரப்பிக்‌ கொண்டிருந்தார்கள்‌. 
காளிமுத்துவின்‌ பகுதிக்குள்‌ தைரியமாக வரும்‌ அந்த 
வாடிக்கைக்காரர்கள்‌ இப்போது போலீஸ்‌ எப்போது 
வேண்டுமானாலும்‌ வரலாம்‌ என்கிற பயத்தால்‌ அவசர அவசரமாக 
குடித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. நாளையிலிருந்து தொழிலை 
நிறுத்தப்போகும்‌ வேதனைச்‌ செயலை நினைத்து, வெம்பிக்‌ 
கொண்டே காளிமுத்து இருந்தபோது ஒருவர்‌ தலையில்‌ முக்காடு 
போட்டுக்‌ கொண்டு உள்ளே வந்தார்‌. காளிமுத்து அவரைக்‌ 
கோபமாகப்‌ பார்த்தான்‌. அது, வெட்டிக்‌ கோபமல்ல. வெற்றிக்‌ 
கோபம்‌. 

“என்ன ராமு மச்சான்‌! ஏது இந்தப்‌ பக்கம்‌” 

“அத ஏண்டா கேக்குற... சட்டாம்‌ பட்டிக்காரன்‌... கொடுக்க 
மாட்டேன்னு சொல்லிட்டான்‌... கேட்டால்‌ காரணமும்‌ சொல்ல 
மாட்டாக்கான்‌... சரி... ஒன்கிட்டேயே இனிமேல்‌... பத்து வச்சுக்கதா... 
தீர்மானம்‌ பண்ணிட்டேன்‌... நாலு கிளாஸ்‌ கொடு... சரக்கு நல்லா 
இருக்கணும்‌.” 

காளிமுத்து கோபமாகப்‌ பேசினான்‌. 

“தொட்டிலையும்‌ ஆட்டி... குழந்தையையும்‌... கிள்ளி விட்டால்‌ 
என்ன மச்சான்‌ அர்த்தம்‌?” 

“என்னடா சொல்றே?” 

“பின்ன என்ன மச்சான்‌? முளைச்சி... மூணு இலை 
விடல... இந்த மூர்த்திப்‌ பயலோட அட்டகாசம்‌ தாங்க முடியல... 
அவனை... கண்டிச்சுப்பேச... முடியாத ஒங்க... வாய்க்கு... சாராயம்‌ 
எதுக்கு... எதுக்குன்னேன்‌ ?...'” 

“அந்தக்‌ கதையை... அப்புறமா பேசலாம்‌... இப்போ... கிளாஸ்‌ 
எடு” 

“முடியாது... முடியவே முடியாது... மூர்த்திய... அடக்க முடியாத 
ஒங்க கையால கிளாஸை... பிடிக்க முடியாது.” 

“அவனை... அடக்குறதுக்கு நானாச்சு... கிளாஸ்ல... 
ஊத்துடா...” 

“முடியாது அடக்கிட்டு வாரும்‌... அப்புறமா... இந்தப்‌ 
பானையை ஒங்கிட்டத்‌ தந்துடூறேன்‌...” 


“ஒரே ஒரு கிளாஸாவது ஊத்துடா...” 
“முடியாது...” 


காகித உறவு 17 





“சரி... ஒரு அரை கிளாஸாவது ஊத்துடா...” 

“இந்த ஊர்ல மூர்த்தி இருக்கற வரைக்கும்‌, ஒரு சொட்டுக்கூட 
கிடையாது... மாரியாத்தா சத்தியமா... கிடையாது... ஆமாம்‌ ராமு 
மச்சான்‌... நீங்க... இங்க இருக்கறதுல... அர்த்தமில்ல...'” 

ராமு மச்சான்‌, வாசனை வீசும்‌ பானையைப்‌ பார்த்தார்‌. 
வாடிக்கைக்காரர்களைப்‌ பார்த்தார்‌. ஒரு பயலாவது... குடிக்கச்‌ 
சொல்றானா... இருக்கட்டும்‌... இருக்கட்டும்‌... கவனிக்கிற விதமா... 
கவனிச்சுக்கிறேன்‌. 

ராமுவுக்கு, குடித்தால்கூட, அவ்வளவு போதை 
இருந்திருக்காது. குடிக்காத போதை, முகத்தைச்‌ சிவப்பாக்க, 
குடிக்க முடியாதநிலை, அவரை நிலை குலையச்‌ செய்ய, “டேய்‌ 
மூர்த்தி... ஒன்னை... என்ன பண்றேன்‌ பாருடா” என்று உளறிக்‌ 
கொண்டே வெளியேறினார்‌. 

இரண்டே இரண்டு நாட்கள்தான்‌. 

காளிமுத்து வெற்றிக்‌ களிப்புடன்‌, மாமூலான 
வாடிக்கைக்காரர்கள்‌ வயிறார வாழ்த்த, தக்காரும்‌ மிக்காருமின்றி, 
தொழிலை “ஓஹோன்னு செய்து வருகிறான்‌. விரைவில்‌ காரும்‌ 
வாங்கப்‌ போகிறான்‌. 

குடிக்க முடியாமல்‌ போன கோபத்தில்‌, வீட்டுக்கு திரும்ப்‌1ய, 
மூர்த்தியின்‌ தந்தையான ராமுவும்‌, இதேபோல்‌ திட்டமிட்டபடி 
வெளியூரில்‌ குடிக்கக்‌ கொடுக்காமல்‌ திருப்ப) அனுப்பப்பட்ட அவன்‌ 
அண்ணனும்‌, “ஊர்ல... ஆயிரம்‌ நடக்கும்‌... உனக்கென்னடா 
வந்தது? பெட்டிஷன்‌ எழுதினியாக்கும்‌... பெட்டிஷன்‌... நம்ம குடும்ப 
கெளரவத்தைக்‌ காற்றிலே விட்டுட்டியேடா... காவாலிப்பயலே”' 
என்று செல்லிக்கொண்டு ஒருவர்‌, பெட்டிஷன்‌ எழுதிய 
மூர்த்தியின்‌ கைகளைச்‌ சாராயக்கிளாசைப்‌ பிடிப்பது போல்‌ 
பிடித்துக்‌ கொள்ள, இன்னொருவர்‌ அவனை அடிஅடியென்று 
அடித்து நொறுக்கினார்‌. இதுநாள்‌ வரைக்கும்‌, தன்னை “ஏடா! 
என்று கூடக்‌ கூப்பிடாத தந்தையும்‌, தமையனும்‌ இப்போது 
அடித்ததால்‌ ஏற்பட்ட நெஞ்சுவலி பொறுக்க முடியாமல்‌ எங்கேயோ 
ஒடிப்போய்விட்டான்‌. அநேகமாக, சென்னையில்‌ வசிக்கும்‌ அக்காள்‌ 
வீட்டில்‌ தங்கி வேலை தேடிக்‌ கொண்டிருப்பதாகக்‌ கேள்வி. 

எப்படியோ, பல்லோர்‌ அறிய, பகிரங்க ரகஸியமாகக்‌ 
காளிமுத்துவின்‌ பானைக்குள்‌, இப்போதும்‌ சொர்க்க! மழை 
பெய்து கொண்டிருக்கிறது! ்‌ 


்‌ெ்‌்‌்‌ மெ 9 


ஐஈ. ௯, 


அசைக்க முடியாது 


பாங்க்‌ மானேஜர்‌ நீட்டிய கவரை, பெருமாள்சாமி ஆவலோடு 
பிரித்தார்‌. அங்கே பணத்திற்குப்‌ பதிலாக டைப்‌ அடித்த காகிதம்‌ 
இருந்தது. 

“பணம்‌ இல்லீங்களா?” 

மானேஜர்‌ அவரை மெளனமாகப்‌ பார்த்தார்‌. பிறகு, “உமக்கு 
எதுக்குக்‌ கடன்‌?' என்றார்‌. 

பெருமாள்சாமி சளைக்கவில்லை. 

“விவசாயத்தை விருத்திசெய்து, உணவு உற்பத்தியைப்‌ 
பெருக்கி, நாட்டுக்குச்‌ சேவை செய்யணுங்கற நல்லெண்ணம்‌ 
தான்‌ காரணம்‌.” 

“அப்படின்னா சரி... இந்தப்‌ பத்திரத்தைத்‌ தயாராய்‌ 
வைத்திரும்‌... நாளைக்கு சப்‌-மானேஜரும்‌, ஒரு வெட்னரி டாக்டரும்‌ 
வருவாங்க... இதை அவங்ககிட்ட காட்டும்‌." 

“காட்டினதும்‌ பணம்‌ கொடுப்பார்களா?” 

“கையில ரூபாயை கொடுத்தால்‌, தரகர்கள்‌ மோசடி 
பண்ணிடுவாங்க... அதனால்‌... சப்‌-மானேஜரு சந்தைக்கு வந்து, 
மாடு வாங்கித்‌ தருவாரு...” 

“சப்‌- மானேஜருக்கு, மனுஷாள்‌ விவகாரந்தான்‌ தெரியும்‌. 
மாட்டு விவகாரம்‌ எப்படித்‌ தெரியும்‌.” 

“அதுக்காகத்தான்‌ வெட்னரி டாக்டரையும்‌ அனுப்பி 
வைக்கிறேன்‌. அவர்‌ அங்கீகாரம்‌ பண்ணுவார்‌." 

“அப்படின்னா... கையிலே நோட்டைத்‌ தள்ள மாட்டீங்களா?” 

“உமக்கு... மாடுதானே தேவ?... வாங்கித்தாறோம்‌...” 

“மேலத்தெரு சோணாச்சலம்‌... அவரேதான்‌ டிராக்டர்‌ 
வாங்கினாரூ...”” 

““மராக்டர்‌ கம்பெனிக்கு நாங்கதான்‌ லட்டர்‌ 
கொடுத்திருந்தோம்‌. பணம்‌ கட்டினோம்‌.” 

'அப்படிங்களா... போகட்டும்‌ போகட்டும்‌... அவரு 
விவசாயத்துக்கு உபயோகிக்கறதா, சலுகையில்‌ டிராக்டரை வாங்கி, 
லோடூ அடிச்சாரே... அதுக்கு என்ன பண்ணுனீங்க?" 


காகித உறவு 19 


“அது எங்க பாங்க்‌ வேலையில்லை”! 

“போகட்டும்‌... விவசாயத்துக்குன்னு சொல்லி, குறைஞ்ச 
விலையில்‌ வாங்கின டிராக்டரை... ஆந்திராக்காரர்களுக்கு 
மூவாயிரம்‌ லாபத்துல வித்துட்டாரு... லாப பணத்தை வட்டிக்கு 
விட்டு அதையே உங்களுக்குக்‌ கட்டுறாரு... இதை 
விசாரிச்சிங்களா?”” 

“அவரு வித்தாரோ விக்கவியோ... எனக்குத்‌ தெரியாது. 
மாசா மாசம்‌ பணம்‌ வந்துடுது... அதுபோதும்‌ எங்களுக்கு.” 

“அதத்தான்‌ நானும்‌ சொல்கிறேன்‌... பணத்தை என்‌ கிட்ட 
கொடுத்திடுங்க... நான்‌ மாசாமாசம்‌ திருப்பிக்‌ கட்டுகிறேன்‌. 
கட்டாட்டா, ஏன்னு கேளுங்க...” 

மானேஜர்‌ பொறுமை இழந்தார்‌. ஒரு கடனளிப்பு விழாவில்‌ 
ஒழுங்காய்‌ மனப்பாடம்‌ செய்து பேசியதை, இப்போது ஒப்ப த்தார்‌ 


“பெரியவரே... நான்‌ சொல்றதக்‌ கேளும்‌... அப்பாவி] 
விவசாயிகள்‌, அல்லும்‌ பகலும்‌ பாடுபட்டாலும்‌... உண்ண 
உணவில்லாமல்‌, உடுக்க உடையில்லாமல்‌, இருக்க இடமில்லாமல்‌, 
தவிக்கிறார்கள்‌. ஏன்‌ அப்படி? அவர்களிடம்‌ நல்ல மாடுகள்‌ 
இல்லை. தரமான விதைகள்‌ இல்லை. லேவாதேவிகாரரிடம்‌ கடன்‌ 
வாங்கி, மாடு வாங்குகிறார்கள்‌. சந்தையில்‌ மாட்டுத்‌ தரகர்கள்‌ 
கள்ளங்‌ கபடமில்லாத இவர்களை ஏமாற்றி, மலையாளச்‌ 
சந்தையில்‌ கசாப்புக்கு போகும்‌ மாடுகளை விற்றுவிடுகிறார்கள்‌. 
இந்த மாடுகள்‌ வழியிலேயே படுத்து விடுகின்றன. பிறகு கொஞ்ச 
நாளில்‌ உழைப்பின்‌ சுமையைத்‌ தாங்க முடியாமல்‌ மரித்து 
விடுகின்றன. மாடூ இறந்த கவலையில்‌, அப்பாவி விவசாயி, 
தவியாய்த்‌ தவித்து, புலம்பி அல்லலுற்று, துயரில்‌ மூழ்கியிருக்கும்‌ 
போது, வட்டிக்கு கடன்‌ கொடுத்த “வன்‌ நெஞ்சாளர்‌" வாட்டூகிறார்‌. 
இருக்கிற நிலத்தையும்‌ ஈட்டிக்காரனிலும்‌ கொடுமையான உள்ளூர்‌ 
_லேவாதேவிக்காரருக்குக்‌ கொடுத்து விட்டு, ஏழை உழவு மகன்‌ 
இதயம்‌ வேகக்‌ கலங்குகிறான்‌. ஏன்‌ இந்த நிலைமை? அறியாமை, 
அதிக வட்டி. இந்த இன்னல்களை அகற்றுவதற்காகத்தான்‌ எமது 
பாங்க்‌ முன்‌ வந்துள்ள து. லேவாதேவிக்காரரிடம்‌ போகாமல்‌ 
இருக்க எங்கள்‌ பணம்‌; தரகர்களிடம்‌ ஏமாந்து போகாமல்‌ இருக்க 
வெட்னரி டாக்டர்‌; மாடு இறந்தாலும்‌, உழவர்‌ நஷ்டப்படாமல்‌ இருக்க 


20 அசைக்க முடியாது 


இன்சூரன்ஸ்‌ கவர்‌. இத்தகைய அரிய திட்டத்தை நீங்கள்‌ 
பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டாமா?” 

பெருமாள்சாமி பணிந்து பேசினார்‌. “இப்போ 
புரிஞ்சுக்கிட்டேன்‌. இதுவரைக்கும்‌ ஏடாகூடமா பேசினதை, ஐயா 
மன்னிச்சுடுங்க... நாளைக்குப்‌ போய்‌ மாடு வாங்கிக்கிறேன்‌.” 

மறுநாள்‌, பெருமாள் சாமியும்‌, வெட்னரி டாக்டரும்‌, 
சப்‌-மானேஜரும்‌ மாடுபிடிக்கப்‌ போனார்கள்‌. முதலாவது பார்த்த 
ஜோடி காங்கேய மாடுகள்‌. இரண்டாயிரத்து ஐந்நூறு; 
வாங்கவில்லை. 

இரண்டாவது பார்த்த ஜோடி “ஹெல்தி புல்ஸ்‌' என்று 
வெட்னரியார்‌ கூற, சப்‌- மானேஜர்‌ வாங்கிவிடலாம்‌ என்றார்‌. 
பெருமாள்சாமியும்‌, நல்ல மாடுங்கதான்‌ என்று சொல்லி விட்டூ, 
மாடுகளை உற்றுப்‌ பார்த்தார்‌. பிறகு முகத்தைச்‌ சுழித்தார்‌. 
அவரைப்‌ பார்த்து, ஏன்‌ சுழிக்கிறீங்க என்றார்‌ சப்‌-மானேஜர்‌. 

“மாடுங்க நல்லாத்தான்‌ இருக்கு... ஆனால்‌... இந்த மாட்டோட 
பட்டத்தைப்‌ பாருங்க... ரெட்டைச்‌ சுழி...” என்றார்‌ பெருமாள்சாமி. 

“ரெட்டைச்‌ சுழின்னா என்ன?” என்றார்‌ வெட்னரி. 

“இதுக்குத்தான்‌, பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவாதுங்கறது... 
இதோ இந்த ரெட்டைச்‌ சுழி மாட்ட வாங்குறதைவிட, ஒரு எரும 
மாட்டையும்‌, அதோட எனனையும்‌ சேர்த்து வாங்கலாம்‌... போன 
வருஷம்‌... என்‌ மச்சினன்‌ மவன்‌ ரெட்டைச்‌ சுழியை வாங்குனான்‌... 
வாங்குன ரெண்டு மாசத்துல... சாவு..." 

“மாடு செத்துடுச்சா?” 

“இல்ல. மச்சினன்‌ மவன்‌ செத்துட்டான்‌.'” 

அந்த ஒன்றரை ஜோடிகளும்‌ வேறு ஜோடிகளைப்‌ பார்த்து 
விட்டு, இன்னொரு ஜோடி மாடுகளிடம்‌ வந்தனர்‌. விலை ரூபாய்‌ 
1800: வாங்கிவிடலாம்‌. 

(இதை வாங்கிடலாம்‌' என்று சொல்லிக்‌ கொண்டே 
பெருமாள்சாமி மாட்டை நெருங்கினார்‌. பிறகு, “ஐயையோ... 
இதுங்க... மயிலக்காளைங்க... :மயிலயை வாங்கறதைவிட, 
மரணத்தை வாங்கலாமுன்னு' எங்க தாத்தா சொல்லிட்டுூச்‌ 
செத்தாரு...” 

“நிறத்துல என்னய்யா இருக்கு!” 


காகித உறவு 21 


“என்ன அப்படிச்‌ சொல்லிட்டிங்க... மாடு யாரு? லட்சுமி. 
பார்த்துத்தான்‌ வாங்கணும்‌... போன மாசம்‌, எங்க பெரிய மயினி 
மவன்‌... மயிலக்காளைய வாங்கி... பார வண்டியை ஓட்டினான்‌. 
லாரியில்‌ அடிபட்டு... துள்ளத்‌ துடிக்கப்‌ போயிட்டான்‌...” 

வேறு வழியில்லாமல்‌, வேறு ஜோடிகளைப்‌ பார்த்தார்கள்‌. 

ஒரு வழியாக, ஒரு ஜோடி மாடுகளை நிச்சயித்தார்கள்‌. 
விலையும்‌ சகாயம்‌. வாங்கிட வேண்டியதுதான்‌' என்று சொல்லிக்‌ 
கொண்டே பெருமாள்‌ சாமி மாட்டுக்காரரிடம்‌ “இதுல, எது இடத்தை... 
எது வலத்தை'' என்றார்‌. 

“டுரண்டுமே வலத்தைதான்‌” என்றார்‌ மாட்டுக்காரர்‌. அவர்‌ 
மாட்டின்‌ சொந்தக்காரர்‌ அல்ல. அவரிடம்‌ மாட்டிக்‌ கொண்ட 
வேலைக்காரர்‌. 

“அய்யய்ய... ஏய்யா... ரெண்டு வலத்தையும்‌ மாட்டி ஜோடி 
சேர்க்கலாமா?” என்றார்‌ பெருமாள்‌ சாமி. 

“வலத்தை இடத்தைன்னா என்ன?” என்றார்‌ வெட்னரி. 

“இதுகூடத்‌ தெரியாதுங்களா? மாடூங்கள வண்டியிலேயாவது 
உழவிலேயாவது பூட்டும்போது ஸ்டிராங்கா இருக்கிற மாட்டை... 
இடது பக்கமா பூட்டணும்‌. இல்லன்னா... முக்கு, முடங்கலே .திரும்ப 
முடியாது." 

“அதாவது கிரெடிட்‌ சைட்‌ இடது பக்கமும்‌, டெபிட்‌ சைட்‌ 
வலது பக்கமும்‌ எழுதுற மாதிரி” என்றார்‌ சப்‌-மானேஜர்‌, 
வெட்னரியைப்‌ பார்த்து. 

வேறு வழியின்றி, அந்த மூவரும்‌ வேறு ஜோடிகளைப்‌ 
பார்ப்பதற்காக நடந்தார்கள்‌. கத்தரி வெயில்‌ வேர்வை ஆறாக 
ஓடியது. கடைசியாக ஒரு ஜோடியைப்‌ பார்த்துட்டு “இதை நீர்‌ 
வாங்கித்தான்‌ ஆகணும்‌'” என்றார்‌ வெட்னரியார்‌. 

“இந்த ஜோடில... இந்த செவலக்‌ காளை கருமயிலயை 
விட ரெண்டு விரக்கட குள்ளம்‌... ஜோடி மாட்ல... ஏதாவது ஒண்ணு 
ஒரு விரக்கடதான்‌ குள்ளமா இருக்கலாம்‌. ரெண்டூ விரக்கட... 
கூடவே கூடாது.” 

அந்த இருவராலும்‌, பெருமாள் சாமியை விட முடியவில்லை. 
பல்வேறு மாடுகளைப்‌ பார்த்துக்‌ கொண்டே நடந்தார்கள்‌. சில 
மாடுகளோ அவர்களைப்‌ பார்த்து வைக்கோலைத்‌ தின்னாமல்‌ 


22 அசைக்க முடியாது 





ஆச்சரியமாகப்‌ பார்த்தன. வேறு சில மாடுகள்‌, கிண்டல்‌ செய்வது 
போல்‌ கனைத்தன. வெட்னரியும்‌, சப்‌-மானேஜரும்‌, அலுத்துக்‌ 
களைத்துக்‌ கீழே விழப்போனபோது, “*இந்த மாடூங்களை 
வாங்கலாம்‌... வாய்ப்பான மாடுக: என்றார்‌ பெருமாள்சாமி 
உருப்படாத ஒரு ஜோடியைச்‌ சுட்டிக்காட்டி. 

“இதுலேயும்‌ ரெட்டச்சுழி இருக்கேய்யா?'' என்றார்‌ 
சப்‌-மானேஜர்‌. வெட்னரி, அவர்‌ வாயைக்‌ கையை வைத்து 
அடைக்க முடியாததால்‌, கையைக்‌ கிள்ளினார்‌. “எப்படியாவது 
வாங்கித்‌ தொலைக்கட்டுமே! உமக்கென்னவே?” 

பெருமாள்சாமி சமாதானம்‌ கூறினார்‌. 

“இரட்டச்சுழி இருந்தாலும்‌ முகத்துல மச்சம்‌ இருக்கத 
பாத்தியளா? மச்சத்துல சுழி அடக்கம்‌." 

இறுதியில்‌, பெருமாள்சாமி காட்டிய மாடுகள்‌ ஆயிரம்‌ 
ரூபாய்க்கு வாங்கப்பட்டன. நிம்மதி, மகத்தான நிம்மதி. 

பெருமாள்சாமி தனது மாடுகளையே சந்தைக்கு 
இன்னொருவர்‌ மூலம்‌ அனுப்பி “வாங்கிக்‌” கொண்டார்‌ என்பது 
வெட்னரி டாக்டருக்கும்‌, சப்‌-மானேஜருக்கும்‌ தெரியாது. 

பாங்க்‌ மானேஜர்‌ மட்டும்‌ சப்‌-மானேஜரிடம்‌ பீற்றிக்‌ 
கொண்டிருந்தார்‌ : “பார்த்தியா... அந்தப்‌ பெருமாள்சாமி என்னை 
எப்படியெல்லாம்‌ மடக்கப்‌ பார்த்தான்‌? முடிஞ்சுதா? கடைசில... 
மனுஷன்‌ நாம்‌ சொன்னதைக்‌ கேட்டுட்டானே இதுக்குத்தாய்யா... 
டெக்னிக்‌ வேணுங்கிறது... நாம்‌ சொல்ற விதத்துல சொன்னால்‌, 
அவங்க புரிஞ்சுக்குவாங்க... நல்ல ஜனங்க... சர்க்காரும்‌ 
பாங்குகளும்‌ வழங்குகிற சலுகைகளை அயோக்கியங்கதான்‌ 
தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னு நீரு சொல்றது தப்பு.” 


்‌ ெ ஸர்‌, 


சமூகப்‌ புயாலில்‌ ஒரு காதல்‌ கூடு 


(ரூப்பமும்‌, கூடவே மாளிகைகளும்‌ பரவிக்‌ கிடந்த சென்னை 
நகரில்‌ ஒரு கடலோரப்‌ பகுதி. 

கடல்‌ மண்ணின்‌ மினுக்கத்தைப்‌ போல்‌ பெண்களும்‌, அந்தக்‌ 
கடல்‌ மண்ணின்‌ நெருக்கத்தைப்‌ போல ஆண்களுமாக, புதிதாகப்‌ 
பிரதிஷ்டை செய்திருந்த காவல்‌ கன்னியம்மனின்‌ கோவிலுக்கு 
முன்னாலும்‌, பின்னாலும்‌ பக்கவாட்டிலுமாய்ப்‌ பரவியிருந்தனர்‌. 

கண்கொள்ளாக்‌ கடலின்‌ அலையோசை, கண்‌ நிறைந்த 
பொய்க்கால்‌ குதிரையாட்டத்தாலும்‌, விசைப்படகு முதலாளிகள்‌ 
அமர்த்திய கல்யாணி” ராக மேளத்தாலும்‌, கட்டூமரக்காரர்கள்‌ 
அமர்த்தி இழு” வோசை மேளத்தாலும்‌, கோவில்‌ குலுங்கிக்‌ 
கொண்டிருந்தது. 

மூன்றாண்டுகளுக்கு முன்னர்‌, ஒருவரை ஒருவர்‌ அடித்துத்‌ 
தாக்கிக்‌ கொண்ட இவர்களா இப்படி என்னும்படி அத்தனை 
மீனவரும்‌ கடந்ததை மறந்து, நடப்பதை நினைத்துக்‌ களித்துக்‌ 
கொண்டிருந்தனர்‌. 

இருப்பினும்‌ விசைப்படகு முதலாளிகள்‌ கெழுத்தி மீன்‌ 
போலவும்‌, கட்டூமரக்காரர்கள்‌ காஞ்சான்‌ மீன்‌ போலவும்‌ கெழுத்தி 
கெழுத்தியோடும்‌, காஞ்சான்‌ காஞ்சானோடும்‌ சேர்த்திருப்பதுபோல்‌ 
அந்தக்‌ கூட்டத்தோடு சேர்ந்தும்‌, அதே சமயம்‌ கும்பலாகப்‌ பிரிந்தும்‌ 
தோன்றினார்கள்‌. 

கோவில்‌ சந்நிதிக்கு முன்னால்‌ போடப்பட்டிருந்த வி.ஐ.பி 
நாற்காலிகளில்‌, விசைப்‌ படகுக்காரர்களின்‌ பெரியதனக்காரர்‌ 
முனுசாமி மீசையை முறுக்கிக்‌ கொண்டும்‌, அவருக்கு அருகே 
அமர்ந்திருந்த அந்தக்‌ குப்பத்தின்‌ பெரியதனக்கார இளைஞன்‌ 
கண்ணன்‌, தன்‌ நொண்டிக்காலைச்‌ சுருதி சேர்ப்பது போல்‌ 
தட்டிக்கொண்டும்‌, தடவி விட்டுக்‌ கொண்டும்‌ இருந்தபோது- 

விசைப்‌ படகுபோல்‌, வேக வேகமாகக்‌ கண்கள்‌ சுழல, 
கட்டுமரம்‌ போல்‌ கால்கள்‌, மரத்துப்‌ போய்‌ நடக்க, நாலடி 
நீளமுள்ள “மாவலரசி' என்னும்‌ மீனை அமுக்க முடியாமல்‌ 
அமுக்கி வைத்திருக்கும்‌ நைலான்‌ வலைபோல்‌ கொண்டையை 
அடக்க முடியாமல்‌ அடக்கிய வலை ஜொலிக்கும்படி மல்லிகைப்‌ 


24 சமூக புயலில்‌ ஒரு காதல்‌ கூடூ 


பூ பந்தலிட, விறால்‌ மீனின்‌ வாளிப்போடு, கெண்டை மீன்‌ 
கண்களோடு ஒரு வாலிபனுடன்‌ ஜதையாக வந்தாள்‌ 
முனுசாமியின்‌ மகள்‌ மச்சகாந்தி. 

நாற்காலியில்‌ உட்கார்ந்திருந்த முனுசாமி எழுந்து “உட்காரு 
மாப்பிள்ளை' என்று சொல்லிக்‌ கொண்டே, சரியாக இடத்தை 
காலி செய்யு முன்னாலேயே, மாப்பிள்ளைக்காரன்‌ உட்கார்ந்தான்‌. 
.. மச்சகாந்தி எங்கே உட்கார்வது என்று யோசிப்பதுபோல்‌ கைகளை 
நெறித்து, கண்களைக்‌ குலுக்கியபோது, “இதுல... குந்து 
ம்ச்சகாந்தி...” என்று சொல்லிக்‌ கொண்டே, கண்ணன்‌ நாற்காலி 
முனையில்‌ சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலை எடுத்துக்‌ 
கொண்டே எழுந்தான்‌. பின்னர்‌ பழைய கதையை நினைத்து, 
அவள்‌ பெயரை உரிமையோடு அழைத்ததை, அப்பாக்காரனும்‌, 
இப்போது அவளை உரிமையாள் பவனும்‌ தப்பாக எடுத்துக்‌ 
கொள்ளக்‌ கூடாதே என்ற எண்ணத்தில்‌, ஒருவித தப்பிப்பு 
மனோபாவத்தில்‌, வேகமாக நகரப்போனான்‌ ஒற்றைக்‌ காலாலும்‌, 
ஊன்றுகோலாலும்‌ நகர முடியாமல்‌ அவன்‌ தவித்தபோது, 
எங்கிருந்தோ வந்த ஓர்‌ இளம்‌ பெண்‌, ஓடோடிவந்து அவனை 
அணைத்துப்‌ பிடித்துக்‌ கொண்டு, '*ந... ஏன்‌ எழுந்தே,” என்று 
கடுமையாகச்‌ சொல்லி, அந்தக்‌ கடுமை படர்ந்த கண்களால்‌, 
மச்சகாந்தியை உஷ்ணத்தோடு பார்த்தாள்‌. மச்சகாந்திக்குச்‌ 
சுருக்கென்றது. கண்ணில்‌ சுரந்த ஈரத்தைத்‌ துடைத்துக்‌ 
மகொகொண்டாள்‌. 

அவன்‌ அமர்ந்திருந்த நாற்காலியில்‌ தான்‌ 
அமர்ந்திருக்கிறோம்‌ என்ற ஏதோ ஓர்‌ இன்ப துன்ப எல்லைப்‌ 
பரப்பை ஊருடுவிய உணர்வு உந்த, தான்‌ உட்கார்ந்திருக்கும்‌ 
நாற்காவியையும்‌, எதிரே ஒரு திட்டுச்சுவரில்‌ உட்கார்ந்திருந்த 
கண்ணனையும்‌ மச்சகாந்தி மாறி மாறிப்‌ பார்த்தாள்‌. 

இதைப்‌ போன்ற ஒரு நாற்காலிதான்‌, அவள்‌ காதல்‌ 
வயப்படவும்‌ காரணமாக இருந்தது. மூன்றாண்டுகளுக்கு 
முன்னால்‌- 

ஒரு லட்சம்‌ ரூபாய்க்கும்‌ அதிகமான ஒருவிசைப்படகைச்‌ 
சொந்தமாகவும்‌, சினிமா நடிகைகளும்‌ ஓர்‌ ஆலை (முதலாளியும்‌ 
வாங்கிப்‌ போட்டிருந்த மூன்று விசைப்‌ படகுகளை வாடகைக்கு 
வைத்துக்‌ கொண்டும்‌, அவள்‌ தந்‌ைத முனுசாமி கடலாட்ச। செய்த 
சமயத்தில்‌, விசைப்‌ படகு ஒட்டத்‌ தெரிந்த கட்டுமஸ்தான கண்ணன்‌, 


காகித உறவு ்‌.._ 2 





அவரிடம்‌ வேலைக்குச்‌ சேர்ந்தான்‌. இரண்டு மாத காலம்‌ 
ஆகியிருக்கும்‌. 

முதலாளி வீட்டின்‌ வெளித்தாழ்வாரத்தில்‌ போடப்பட்டிருந்த 
நாற்காலிகளில்‌, சகாக்களுடன்‌ கண்ணன்‌ அமர்ந்திருந்தபோது, 
செல்லமாகவும்‌ சிணுங்கும்படியாகவும்‌ வளர்க்கப்பட்ட மச்சகாந்தி 
அந்தப்‌ பக்கமாக வந்தாள்‌. உடனே, கண்ணன்‌ தவிர எல்லோரும்‌ 
எழுந்து நின்றார்கள்‌. கண்ணன்‌ மட்டும்‌ அசையாமலும்‌ அவளைப்‌ 
பாராமலும்‌ உட்கார்ந்திருந்தபோது, அவன்‌ சகாக்களில்‌ ஒருவன்‌, 
“டேய்‌ சோமாறி! காலு ஒடிஞ்சா பூட்டு...? எழுந்திருடா...” என்று 


புதியவனான அவனை மிரட்டுவதுபோல்‌ கேட்டான்‌. 


“ஏண்டா... இப்படி குட்டுறதுக்கு முன்னாடியே தலையக்‌ 
குனியுறீங்க... உங்கள மாதிரி உருப்படி இல்லாத பசங்களால்‌ 


தான்‌ நம்ம சமூகமே உருப்படி இல்லாம்‌ துண்டு துக்கடாவா 
போயிட்டு... நாமும்‌ மனுஷங்கதாண்டா...” என்றான்‌ கண்ணன்‌. 
மச்சகாந்தி, கோபமாக முகத்தைத்‌ திருப்பிக்‌ கொண்டாள்‌. 
“கோவிச்சுக்காதே பாப்பா... இவன்‌ இப்படித்தான்‌... இம்மாந்‌ தொலவு 
பேசுறானில்லே, இவன்தான்‌ நீ பஜாருக்கு போகச்சே எவனோ 
ஒரு சோமாறி கிண்டல்‌ பண்ணுனப்போ... அவன்‌ வாயில 
குத்தினான்‌” என்று சமாதானம்‌ சொன்னான்‌ ஒருவன்‌. மச்சகாந்தி 
கண்ணனை நேருக்கு நேராகப்‌ பார்த்தாள்‌. ஆணவம்‌ இல்லாத 
சுயமரியாதைத்‌ தோரணை. கபடமில்லாத கண்கள்‌. கட்டுமஸ்தான 
உடல்‌. மச்சகாந்தி திருப்தியோடு சிரித்துக்‌ கொண்டு உள்ளே 
போய்விட்டாள்‌. 

அப்புறம்‌ இன்னொரு நாள்‌ 'லாஞ்சுக்கு' டீஸல்‌ பிடிப்பதற்காக 
முதலாளியிடம்‌ பணம்‌ வாங்க வந்த கண்ணன்‌, அவர்‌ இருக்கிறார்‌ 
என்ற அனுமானத்தில்‌ தாழ்வாரத்தைத்‌ தாண்டி உள்ளறைக்கு 
வந்துவிட்டான்‌. தனியாக இருந்த அவள்‌ சிரிப்பை முந்தானையால்‌ 
அணைகட்டிக்‌ கொண்டே வெளியே ஓடிப்போய்‌, ஒரு நாற்காலியை 
எடுத்துக்‌ கொண்டுவந்து, அவன்‌ பக்கத்தில்‌ ' போட்டுவிட்டுச்‌ 
சமையல்றைக்குள்‌ ஒடினாள்‌. 

.கிண்டலைப்‌ பாரேன்‌:... தனக்குள்ளேயே சொல்லிக்‌ 
கொண்டு கண்ணன்‌ கோபமாக நின்றான்‌. மச்சகாந்தி, சூடான 
காபி டம்ளரைக்‌ கையிலும்‌, சுவையான ரசனைச்‌ சிரிப்பை 


26 சமூக புயலில்‌ ஒரு காதல்‌ கூடு 


வாயிலும்‌ சுமந்துகொண்டு வந்தாள்‌. “நாற்காலியில்‌ 
உட்கார்ந்தால்தான்‌ காப்ப”, என்றாள்‌. இருவரும்‌ தங்களை 
அறியாமலே சிரித்தார்கள்‌. தங்களை மறந்து ஏதேதோ 
அளவளாவினார்கள்‌. 


பழைய நினைவுகளை, அசை போட்டுக்‌ கொண்டும்‌, நீர்‌ 
முட்டும்‌ கண்களுடன்‌ நிலைகுலைந்தும்‌ நிமிர்ந்து பார்த்தாள்‌ 
மச்சகாந்தி. அவளையே பார்த்துக்‌ கொண்டிருப்பதுபோல்‌ தோன்றிய 
கண்ணன்‌, அவள்‌ பார்வையின்‌ வெப்ப தாகத்தில்‌ உருகிப்‌ 
போனவன்‌ போல்‌, எங்கேயோ பார்த்தான்‌... 

கூத்தை ரடத்தப்‌ போகும்‌ கோவிந்தன்‌, சபையோருக்கு, 
சகலவித வணக்கங்களையும்‌ தெரிவித்துவிட்டு, 'சப்ஜெக்டுக்கு” 
வந்தான்‌. 

“சபையோர்களே... இந்த! காவல்‌ கன்னியம்மன்‌, 
நூறாண்டுகளுக்கு முன்னர்‌, மதுரையம்பதிக்கு அருகே 
ஜனித்தவள்‌. இவள்‌, நம்‌ ஜாதியான மீனவ ஜாதியைச்‌ சேர்ந்தவள்‌ 
அல்ல, அல்ல, அல்ல; ஆயினும்‌ வலையபோட்டு மீன்பிடிக்கும்‌ 
பாவாடராயனை, தன்‌ அழகிய கண்வலையிலே பிடித்தவள்‌. 
உள்ளூர்‌ உறவினரைத்‌ துறந்து, கடலோரத்திலேயே, காதலுக்காகத்‌ 
தங்கியவள்‌. கடலில்‌, வலம்புரிச்‌ சங்கெடுத்தான்‌ பாவாடராயன்‌. 
நம்‌ முன்னோர்‌ வழக்கப்படி வலம்புரிச்‌ சங்கெடுத்தால்‌, கடல்‌ 
மாது மூன்று நாள்‌ தீட்டுப்பட்டவள்‌ ஆவாள்‌. அப்போது, மீனவர்கள்‌, 
கடலுக்குப்‌ போகலாகாது. ஆனால்‌ ஓடூறபாம்பைப்‌ பிடிக்கிற 
வாலிபனான பாவாடராயன்‌, காதலியாள்‌ அறிவுரையை மீறி, 
கடலுக்குள்‌ போய்‌, சுறாமீன்களால்‌ சுக்குநாறானவன்‌. இதனால்‌ 
மயங்கி, தயங்கி, மனக்‌ கிலேசப்பட்ட காதலியானவள்‌, தன்னுயிரை 
மாய்த்துக்‌ கொண்டாள்‌. பின்னர்‌, மனைவி மக்களைக்‌ காக்கும்‌ 
காவல்‌ அம்மனாக இருப்பேன்‌' என்று ஒருத்தி மேல்‌ ஆவேசமாகி 
அறிவித்தாள்‌. அந்தத்‌ தர்மபத்தினி, ஒரு மீனவக்கண்ணகி. 
ஆகையால்‌ பெரியோர்களே, கன்னிமை கழியா அந்தக்‌ காவல்‌ 
அம்மணின்‌ கதையை... அடியேன்‌...” 

கண்ணன்‌ அவஸ்தை தாங்க முடியாதவன்போல்‌ எழுந்தான்‌. 
கடலை நோக்கி நொண்டிக்‌ கொண்டே நடந்தான்‌. 


காகித உறவு 27 





சினிமாத்‌ தியேட்டர்களிலும்‌ விசைப்படகுகளுக்குள்‌ ளேயும்‌, 
உலர்த்திப்‌ போடப்பட்டிருக்கும்‌ அல்பேஷா மரக்கட்டைகளுக்கு 
அருகேயும்‌ அவனுடன்‌ களிப்புடன்‌ விளையாடி, அளவில்லாக்‌ 
காதலுணர்வை அளவோடு டழகுவதன்‌ மூலம்‌ காட்டி, அவன்‌ உருவம்‌ 
முழுவதும்‌ கண்களை உறுத்த, உள்ளமெல்லாம்‌ அவனைப்‌ பற்றிய 
உணர்வே வியாபிக்க, மாலையில்‌ நடந்த காதற்பேச்சை காலையில்‌ 
ரசித்துக்‌ கொண்டிருந்த ஒரு நாள்‌, கண்ணன்‌ வந்தான்‌... 
வேலையில்‌ இருந்து விலகி விட்டதாகவும்‌, இன்னொரு 
குப்பத்திற்குப்‌ போய்‌ அங்கே விசைப்படகு மீனவர்களால்‌ 
அல்லல்படும்‌ கட்டூமரக்காரர்களுக்கு உதவப்‌ போவதாகவும்‌, 
தெரிவித்தான்‌. அவள்‌ தந்‌ைத, கட்டுமரங்களை மின்விசைப்‌ படகால்‌ 
மோதும்படி அவனுக்குச்‌ சொல்வதும்‌, அவன்‌ “இனத்தை இனமே 
கொல்வதைவிட, நானே என்னை சாகடித்துக்‌ கொள்ளலாம்‌' 
என்று பதிலடி கொடுப்பதும்‌ அவளுக்குத்‌ தெரிந்ததுதான்‌. 
இருந்தாலும்‌, “ஒன்‌ நய்னா ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால 
கடல்ல மீன்‌ பிடிக்கணுமுன்னு -லாஞ்சுக்கு” வச்சுருக்கிற 
வழக்கத்தை மீறி... அப்பாவி கட்டு மரங்களோட... வலைங்கள, 
அறுக்கச்‌ சொல்றாரு... நம்மளால ஒரு நொடிகூட இருக்க முடியாது" 
என்று சொல்லிவிட்டு, அவள்‌ எவ்வளவோ மன்றாடியதையும்‌ 
பொருட்படுத்தாமல்‌ கண்ணன்‌ போய்வீட்டான்‌. 

பின்னர்‌ முனுசாமி, “ஒன்னோட கைதொட்டுப்‌ பழகிட்டு 
அந்த காலிப்பய ஏற்கனவே கீப்‌ பண்ணுனவளோட குடித்தனம்‌ 
பண்ணப்‌ போயிட்டான்‌. நம்ம காவல்‌ கன்னியம்மன்‌ எதை 
வேணுமுன்னாலும்‌ சகிச்சுக்குவா. ஆனால்‌ காதல்‌ துரோகத்தை 
மட்டும்‌ சகிச்சுக்க மாட்டாள்‌. வேணுமுன்னா பாரேன்‌... இன்னும்‌ 
மூணு நாளையில்‌... அவனை... ஆத்தா என்ன பாடூ படூத்தப்போறா 
பாரு!” என்று பக்குவமாகப்‌ பேசினார்‌. அவர்‌ சொன்னது போல்‌, 
கண்ணன்‌, கட்டுமரத்தில்‌ மீன்‌ பிடிக்கப்போன போது, சுறா மீனால்‌ 
தாக்கப்பட்டு ஒரு காலை இழந்து விட்டதாக அவளுக்கு சேதி 
போனது. 

கண்ணனின்‌ காதல்‌ துரோகத்திற்கு, கன்னி காவலம்மன்‌ 
தண்டனை கொடுத்துவிட்டதாக, அப்பனால்‌ நம்ப வைக்கப்பட்ட 


"மச்சகாந்திக்கு, திருமணம்‌ முடிந்தது. 


26 ச்மூக புயலில்‌ ஒரு காதல்‌ கூடு 


மச்சகாந்தி இருப்புக்‌ கொள்ளாமல்‌ தவித்தாள்‌. கடல்‌ 
பக்கம்போன கண்ணன்‌, மீண்டும்‌ தன்னைப்‌ பார்க்கத்‌ திரும்பி 
வருவான்‌ என்று நினைத்தும்‌, வருகிறானா என்ற ஆவலுடன்‌ 
நாற்காலியின்‌ மேல்‌ சட்டத்தில்‌ கையூன்றி, கண்களைத்‌ தொலை 
நோக்கி போல்‌ வைத்துக்‌ கொண்டிருந்தாள்‌. அவன்‌ வரவில்லை, 
கணவனும்‌ தந்தையும்‌ கூத்தில்‌ அழ்ந்திருக்க மெல்ல நழுவினாள்‌ 
மச்ச.காந்தி. 

மையிருட்டு மொய்த்த கடலோரத்தில்‌ கட்டுமரம்‌ ஒன்றில்‌ 
ஓர்‌ உருவம்‌ இருப்பதை பார்த்துவிட்டு, அவள்‌ ஓடினாள்‌. இளைக்க 
'இளைக்க ஓடினாள்‌, அவள்‌ அனுமானம்‌ பொய்க்கவில்லை. 

கண்ணன்‌, அவளைப்‌ பாராமலே “வா... காந்தி...” என்றான்‌. 
மச்சகாந்தியால்‌, அந்தக்‌ காலைப்‌ பார்த்ததும்‌ தாள முடியவில்லை. 
அதைக்‌ கட்டிக்‌ கொண்டு, “ஒனக்கா இந்தக்கதி... ஒனக்கா இந்தக்‌ 
கதி...” என்று கடலலை ஒலி குறையும்படி புலம்பினாள்‌. “நான்‌ 
சொன்னதைக்‌ கேட்டிருந்தால்‌ ஒனக்குக்‌ காலு போயிருக்குமா? 
தொட்டுப்‌ பேசின பெண்ண ஏறிட்டுப்‌ பார்க்காமலே போயிட்டே. 
கடைசில... நயினா சொன்னது மாதிரி கன்னி காவலம்மன்‌.. 
சுறாமீனா வந்து ஒன்‌ காலை எடுத்துட்டாள்‌. நான்தான்‌ பாவி... 
என்னாலதான்‌... இப்படி ஆயிட்டே!” 

கண்ணன்‌, நிதானமாகப்‌ பேசினான்‌ : 


“கன்னி காவலம்மன்‌... காலை வாங்கல... ஒன்‌ அப்பன்‌ 
தான்‌ வாங்குனான்‌.'” 

“என்ன சொல்ற...” 

“நடந்ததச்‌ சொல்றேன்‌ நீ யாருகிட்டேயும்‌ சொல்ல 
மாட்டேங்கற நம்பிக்கையில்‌ சொல்றேன்‌. கட்டுமர மீனவர்கள்‌ 
ஒண்ணாச்‌ சேர்த்து போலீஸ்‌ ரிப்போர்ட்‌ கொடுத்து ஜனங்கள, 
ஒண்ணு திரட்டுன என்மேல்‌ ஒப்பனுக்குத்‌ தீராத கோபம்‌. நானும்‌ 
ஒன்னை எப்படியாவது கூட்டிக்கிட்டு வாரத்துக்காக ஒரு திட்டம்‌ 
போட்டிருந்தேன்‌. என்னோட ஆள்‌ ஒருவனை ஒன்‌ நயினா 
லாஞ்சுக்கு அனுப்புனேன்‌. இதைத்‌ தெரிஞ்சுக்கிட்ட ஒன்‌ நயினா 
நான்‌ கடலுல கட்டு மரத்துல இருந்து வலைய விட்டுகிட்டு 
இருந்தப்போ, “லாஞ்சு' கொண்டு வந்து மோதுனாரு. 
ஆஸ்பத்திரிலதான்‌ கண்விழிச்சேன்‌... ஒரு காலைக்‌ காணல...” 


காகித உறவு 29 





“இதை நீ ஏன்‌ போலீஸ்ல சொல்லல!” 

“மீண்டும்‌ கலாட்டா வந்திருக்கும்‌. என்‌ ஒரு காலுக்காகப்‌ 
பல தலையுங்க உருள்றத நான்‌ விரும்பல. இந்த காலு பலருக்கு 
காலனா மாறுறத விரும்பல." மச்சகாந்தி, ஆவேசத்துடன்‌ எழுந்து, 
ஆவேசமாகக்‌ கேட்டாள்‌. “ஒன்னை மொச்சிக்கிட்டு இருந்த 
பொண்ணு யாரு?” 

“என்னோட தங்கை” 

கரி, புறப்படு” 

“எங்கே” 

“இந்த நொடியில்‌ இருந்து, நான்‌ ஒன்‌ சம்சாரம்‌. புறப்படு 
காவலம்மன்‌ சந்நிதியில்‌ போய்‌... கல்யாணம்‌ பண்ணிக்கிட்டதா 
சொல்லுவோம்‌... ஏன்‌ பயப்படூற...” ்‌ 

“நான்‌ பயப்படல... நீ இல்லாம என்னாலயும்‌ வாழ முடியல. 
இருந்தாலும்‌ நீயும்‌ நானும்‌ ஒண்ணு தெரிஞ்சுக்கணும்‌. நாம 
குடித்தனம்‌ பண்ணலாம்‌. ஒப்பணால ஒண்ணும்‌ பண்ண முடியாது. 
ஒன்‌ நயினா ஒதுங்குறது மாதுரி பாவலா பண்ணிட்டு... ஆள்பலம்‌ 
உள்ள என்கிட்ட நேரடியா மோதாமல்‌ கடலுல கட்டூமரத்தோட 
போறவங்க மேலே மோட்டார்‌ படகை விட்டுப்‌ பழி வாங்கப்‌ பார்ப்பார்‌. 
இதனால்‌ அவருக்கும்‌ ஆளு சேரும்‌ பாரு... நம்ம தனிப்பட்ட 
காதலுக்காக நம்ம சமூகம்‌ ரத்தக்‌ காட்டேரியா மாறப்படாது. 

“நீ மவராசியா இருக்கணும்‌, ஒப்பன்‌ எனக்கு பண்ணுன 
அக்கிரமம்‌ வெளில வரப்படாது, இல்லன்னா, இன்னும்‌ பல 
அக்கிரமம்‌ நடக்கும்‌... போயிட்டுவா... என்‌ ராசாத்தி...” 

கண்ணனின்‌ குரல்‌, தழுதழுத்தது, கன்னி காவலம்மனுக்கு 
கற்பூர ஆராதனை. நடந்தது. அவளுக்கு அவனுக்கே ஆராதனை 

செய்ய வேண்டும்‌ போலிருந்தது. 
௨ ூெூ 


- லாரிக்‌ சிங்கி 


புகழ்மிக்க மலைக்கோவில்‌ ஒன்றின்‌ அடிவாரத்திற்கு அருகே 
ஒரு பூங்கா. மரம்விட்டு மரந்தாவும்‌, காட்டின்‌ ஜோக்கர்களான 
பத்துப்பதினைந்து குரங்குகள்‌, எட்டடி நீளமும்‌, மூன்றடி அகலமும்‌, 
மூன்றடி உயரமுங்‌ கொண்ட கம்பி வலையால்‌ பின்னப்பட்ட 
இரும்புக்‌ கூண்டுக்குள்‌, கும்பலாக இருந்தாலும்‌, ஒவ்வொன்றும்‌ 
தனிமைப்பட்டது போல்‌ தவித்துக்‌ கொண்டிருந்தன. வானத்தை 
மோனமாக வெறித்துக்‌ கொண்டிருந்தவை, வாலைச்‌ சுருட்டிக்‌ 
கொண்டிருந்தவை, குட்டிகளைப்‌ பிடித்துக்‌ கொண்டிருந்தவை, 
பிடித்த குட்டிகளை தள்ளிக்‌ கொண்டிருந்தவை - இப்படி பல்வேறு 
நிலையில்‌ பல குரங்குகளும்‌, ஒரு குரங்கே, பல்வேறு 
நிலையிலுமாக, போராடி ஓய்ந்த களைப்பில்‌, புரியாத 
எதிர்காலத்திற்குப்‌ பயந்தவை போலவும்‌, களிப்பான கடந்த 
காலத்திற்கு ஏங்குபவை போலவும்‌, மெளனமே கொடூரமாக, 
மனிதனை எமனாக நினைத்து மயங்கிக்‌ கொண்டிருந்தன. 

_. இதற்கு முரணாக, ஏழெட்டு நரிக்குறவர்களும்‌, குறத்திகளும்‌ 
கூண்டுக்கு அருகே குதூகலமாகப்‌ பேசிக்‌ கொண்டிருந்தார்கள்‌. 
கிழிந்த பிரம்புப்பாய்‌ ஒன்றில்‌, ஓர்‌ இளங்குறத்தி டப்பாவுக்குள்‌ 
கையைவிட்டு, டப்பாபோல்‌ இருந்த தன்‌ வயிற்றுக்குள்‌ ஆகாரத்தை 
வாரி விட்டுக்‌ கொண்டிருந்தாள்‌. ஒரு கிழவி, தன்‌ பெரிய 
உடம்புக்குள்‌ சின்னப்‌ பாவாடையை, அகலப்படுத்திக்‌ 
கொண்டிருக்க, இன்னொரு இளங்குறத்தி ஒருத்தி, எந்த டாக்டரோ 
கொடுத்த வெள்ளைக்கோட்டை போட்ட ஜோரில்‌, இரண்டூ வயதுக்‌ 
குழந்தையாக ஆன மாதிரி, தன்‌ இரண்டூ தோள்களையும்‌ மாறி 
மாநி பார்த்துக்‌ கொண்டு, புருஷன்‌ தன்னைக்‌ கவனிக்கிறானா 
என்ற நாணங்‌ கலந்த பார்வையை வீசிக்‌ கொண்டே, பாவாடை 
முனையை லேசாகப்‌ பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தாள்‌. இரண்டு 
மூன்று நடுத்தர வயதுப்‌ பெண்கள்‌, முழங்கை வரைக்கும்‌ 
வியாபித்த, சட்டையா அல்லது ஜாக்கெட்டா என்று கண்டுபிடிக்க 
முடியாத அல்லது அவை இரண்டுஞு்‌ சேர்ந்த புதிய உடுப்புக்களுக்கு 
“மேலே, சூரிய காந்தி பூவைப்போல, அடுக்கடுக்காக, 
வட்டத்திற்குமேல்‌ வட்டமாக படர்ந்திருந்த கருகுமணி மாலை, 
வெள்ளைப்பாகி மாலை, சிவப்புப்பாசி மாலை, மஞ்சள்‌ மணி 
மாலை முதலிய மாலைகள்‌ சகிதமாய்‌, காவிப்பற்கள்‌ மாலை 
வெயிலில்‌ பட்டு, வானவில்‌ போல்‌ ஜெஜொலிக்க 


உட்கார்ந்திருந்தார்கள்‌. 


காகித உறவு 31 


குறவர்களோ, குடியும்‌, குடித்தனமுமாக விதிக்கப்பட்ட 
வேலைகளைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. ஒரு கிழவன்‌, 
தேக்குக்‌ கம்பு ஒன்றில்‌ அரத்தினால்‌ பலவித கோடூகளை 
அறுகோணம்‌ போலவும்‌, முக்கோணம்‌ போலவும்‌, தீட்டிக்‌ 
கொண்டிருந்தார்‌. இருந்தவர்களிலேயே எடுப்பாகத்‌ தெரிந்த 
செங்கோடன்‌ கூண்டைத்‌ திறந்து, குரங்குகளுக்கு, 6 றி கடலை, 
நெல்லுப்பொறி போட்டுக்‌ கொண்டிருந்தான்‌. பொறி வைத்து 
பிடித்துவிட்டு, பொறிகடலைபோடும்‌ அவனை, சில குரங்குகள்‌ 
குரைத்தபோது, டப்பாவையே சாப்பிடப்‌ போகிறவள்போல்‌, இன்னும்‌ 
உண்ட வேலையை மட்டும்‌ கருதியவளாய்‌, அந்த உணவுக்கு வழி 
செய்யும்‌ வேலையை செய்ய மறந்தவளாய்‌ இருந்த டப்பாக்காரியை 
அதட்டினான்‌ செங்கோடன்‌. 

“ஹே...ஹே...முட்டக்‌ கண்ணு... முட்டக்கண்ணு... எத்தனோ 
தரம்‌ சாப்புட்றது... ஏய்ந்திரு கழுதெ... கழுதெ... கொரங்கோ... 
அடைப்பியா... தின்னுப்புட்டே... வயிறுபுடக்க... கெடப்பியா...” 

.முட்டக்கண்ணு' என்ற இடுகுறிக்கு ஆளான டப்பாச்‌ 
சோற்றுக்காரியான ஷோக்காட்டாளுக்கு ஆத்திரம்‌ பீறிட்டது. 

.£மன்ஷல்லே... பலா அந்தஸ்துண்டு... நீ... ஏதோ ஒரு 
அந்தஸ்த காட்டுறியா... காட்றா. பாக்கோலாம்‌... காட்டுறியா... காட்றா 
பாக்கோலாம்‌...” 

செங்கோடன்‌, “மன்ஷூ அந்தஸ்துக்களாகக்‌ கருதப்படும்‌ 
வில்லில்‌ ஒரே கல்லால்‌, கெளதாரியை அடித்தல்‌, தன்னந்‌ தனியாக 
குரங்கைப்‌ பிடித்தல்‌, நரிபோல ஊளையி'டூதல்‌, “ஐந்தரை கிளாஸ்‌: 
சரக்கை அனாவசியமாகக்‌ குடித்தல்‌, மாரி மீனாட்ச! (மதுரை 
மீனாட்சி) மேல்‌ பாட்டுப்‌ பாடல்‌, எருமைக்‌ கிடாவின்‌ கழுத்துப்‌ 
பக்கத்தில்‌ தோலை உரித்து, புடைத்து நிற்கும்‌ இரண்டு 
நரம்புகளை வில்லால்‌ அடித்து, ரத்தத்தை நீருற்றுப்போல்‌ 
வரவழைத்தல்‌ - போன்றவற்றில்‌ எந்த அந்தஸ்தைக்‌ காட்டலாம்‌ 
என்று யோசித்துக்‌ கொண்டிருந்தபோது, டப்பாக்காரியான 
முட்டைக்கண்ணு மீண்டும்‌ 'காத்தறா... பாக்கோலாம்‌... காத்தறா 
பாக்கோலாம்‌' என்றாள்‌. 

செங்கோடன்‌ மிரளும்படி, டப்பாக்காரி மிரட்டுவது அவன்‌ 
மனைவி வெள்ளைக்‌ கோட்டுக்காரிக்கு கோபத்தைக்‌ கொடுத்தது. 
. 4*மன்ஷ” அந்தஸ்தைக்‌ காட்ட முடியாமல்‌ போன கணவனுக்காக 


32 லாரி சிங்கி 





வருத்தப்பட்டுக்‌ கொண்டிருந்தவள்‌, அவனால்‌ காட்ட முடியாது 
என்பதைக்‌ காட்டிக்‌ கொடுத்த களிப்பில்‌ கைதட்டிச்‌ சிரித்த 
முட்டக்கண்ணான டப்பாக்காரி மேல்‌ கோபம்‌ வந்தது அவளுக்கு. 
இவள்‌ சவாலிட்டாள்‌. 

“ஹே... ஹே... ஷோக்காரி... முட்டக்கண்ணோரய்‌... பொம்புள 
மேலே பலா அந்தஸ்துண்டு... நீ ஒண்ணே ஒண்ணு காட்டே... 
பாக்கலாம்‌... காட்டே பாக்கலாம்‌.” 

முட்டக்கண்ணுவின்‌ புருஷன்‌ சும்மா இருப்பானா? 
வரையாடு மாதிரி எங்கேயோ பார்த்துக்‌ கொண்டிருந்த அவனுக்கு, 
மனைவிக்கு ஒத்தாசை செய்ய வேண்டும்‌ போலிருந்தது. 
வெள்ளைக்‌ கோட்டுக்காரி, அவனுக்குக்‌ கூடப்‌ பிறந்த தங்கை, 
ஆகையால்‌ உரிமையோடு கையை ஓங்கிக்‌ கொண்டே *ஹே... 
ஹோ... லாரிச்‌ சிங்கி... அண்ணோனும்‌ தங்கோயும்‌ தொமாஷ்‌ 
பண்ணோனா ஒன்மேல எது வந்தோதுது' என்று அதட்டினான்‌. 
இந்த அதட்டலைப்‌ பார்த்ததும்‌ செங்கோடனுக்கு கோபம்‌ வந்தது. 
பின்னர்‌ அண்ணன்காரன்‌ தங்கைக்காரியை அடிக்கப்‌ 
போவதுபோல்‌ :பாச்சா' காட்டுவதில்‌ தப்பில்லை என்று 
உணர்ந்தவன்‌ போல்‌, திக்குமுக்காடிக்‌ கொண்டிருந்போது, 
கோவணம்‌ மட்டூமே கட்டியிருந்த இன்னொரு இளங்குறவன்‌, 
கையிலிருந்த டப்பாவை அடித்துக்கொண்டே தக்கா புக்கா... புக்கா 
தக்கா... தக்கா... தக்கா... புக்கா... புக்கா...' என்கிற மாதிரி ஒரு 
பாட்டைப்‌ பாடிக்கொண்டு டப்பாங்குத்து ஆடியதைப்‌ பார்த்து, 
எல்லோரும்‌ சிரித்தார்கள்‌. 

அப்போது கம்பீரமான தோற்றத்துடன்‌ ஒருவரும்‌, அவருக்கு 
அக்கம்பக்கமாக இருவரும்‌ பூங்காவிற்குள்‌ வந்தார்கள்‌. கம்பீரமான 
மனிதர்‌, அந்த பஞ்சாயத்தின்‌ தலைவர்‌. எம்‌.எல்‌.ஏ ஆகிவிடலாம்‌ 
என்று இப்போதே பெரிய துண்டை முழங்கால்‌ வரைக்கும்விட்டு, 
பழகிக்‌ கொண்டிருப்பவர்‌; “ஏய்‌... இன்னுமா போகலே? 
சைதாப்பேட்டை ஆளுங்க தேவல போலுக்கே' என்று அதட்டினார்‌. 
சைதாப்பேட்டையில்‌ குடியமர்த்தியிருக்கும்‌ நரிக்குறவர்கள்‌, 
சென்னை நகர சாவாச தோசத்தால்‌, குரங்குகளைப்‌ 
பிடிப்பதைவிட, மனிதர்களை “பிடிப்பதால்‌' அதிகபலன்‌ ஏற்படுவதை 
உணர்ந்து, குரங்கு பிடிப்பை விட்டூ விட்டபடியால்‌, பஞ்சாயத்துத்‌ 
தலைவர்‌ ஆற்காட்டில்‌ இருந்து, இந்த நரிக்குறவர்களை 


காகித உறவு 33 





வரவழைத்தார்‌, கோவிலுக்கு வரும்‌, பக்தர்களின்‌ வாழைப்பழம்‌ 
தேங்காய்‌ வகையறாக்களை தட்டிப்‌ பறித்து முன்னேறிய குரங்குகள்‌ 
இப்போது வரிசை வரிசையாக மட்டூமல்லாமல்‌ முன்வரிசை 
பின்‌ வரிசையாகவும்‌ இருந்த கடைகளில்‌ உள்ள 
வாழைப்பழங்களையும்‌, தேங்காய்களையும்‌ பகிரங்கமாகத்‌ 
திருடுவதோடு, மாலைகளையும்‌ எடுத்துக்‌ கொண்டு போய்‌, 
பல்லைக்‌ காட்டின. இதனால்‌ மேலும்‌ பல்லைக்கடிக்க முடியாத 
கடைக்காரர்கள்‌ சங்கம்‌, குரங்குகளிடமிருந்து தங்கள்‌ 
பொருளாதாரத்தைத்‌ காக்க வேண்டுமென்றார்கள்‌. 
பஞ்சாயத்துக்காக கட்டப்படுவதாக இருந்த லைசென்ஸ்‌ பணம்‌, 
கடைவரி தொழில்வரி முதலிய வரித்தொகையை பஞ்சாயத்துக்குப்‌ 
பதிலாக, “குரங்குகளுக்கு' கட்டுவதாகக்‌ கூக்குரவிட்டார்கள்‌. 
அவர்களிடம்‌ வரிபாக்கி இருப்பதுபோல்‌, ஒட்டு இருப்பதையும்‌ 
உணர்ந்த பஞ்சாயத்துத்‌ தலைவர்‌, இந்த நரிக்குறவர்களை 
ஆற்காட்டிற்குப்போய்‌ கூட்டி வந்தார்‌. ஒரு குரங்குக்கு மூன்றரை 
ரூபாய்‌; பெரும்பாலான குரங்குகள்‌ பிடிபட்டதும்‌, அவற்றை லாரியில்‌ 
ஏற்றி அவை திரும்பி வரமுடியாத தொலைவில்‌ உள்ள ஏதாவது 
ஒரு காட்டில்‌ கொண்டு விடூவதாக ஏற்பாடு. 

சூரியன்‌ மலையுச்சிக்கு நேர்கோடு போல்‌ வந்துவிட்டது. 
இன்னும்‌ அவர்கள்‌ வேலையைக்‌ கவனிக்காமல்‌ இருப்பதைப்‌ 
பார்த்து உறுப்பினர்கள்‌ சகிதமாக வந்த தலைவர்‌ ஆத்திரப்பட்டார்‌. 

ஏய்‌... செங்கோடா... இந்தாடா பணம்‌: 

“அல்லா கொரங்கோயும்‌... பிட்ச பொறவு தாங்கோ சாமி! 

“இது குரங்குக்கு இல்லேடா... ஒங்களுக்கு... மரியாதயாய்‌... 
இந்தப்‌ பணத்துல... உடனே பஸ்‌ பிடிச்சி... ஆற்காட்டுக்கு... போய்ச்‌ 
சேருங்க. 'டான்ஸ்‌' ஆடுற நேரமாடா இது... 

அப்போதுதான்‌ நரிக்குறவர்கள்‌ சுதாரித்தார்கள்‌. 
ஷோக்காட்டாள்‌ எம்டியாக போனதோடுூ, அடிவாரமும்‌ தேய்ந்து 
போன டப்பாவை, முந்தானையால்‌ டப்பாவுக்குள்‌ துடைத்துவிட்டு, 
அவசர அவசரமாக கூண்டுப்‌ பக்கம்‌ போனாள்‌. இரும்பு கூண்டை 
சற்று நகர்த்தி, அதை இன்னொரு கூண்டின்‌ வாய்ப்பக்கம்‌ 
கொண்டு போய்‌ இடைவெளியைக்‌ குறைத்து, குரங்குகளை 
கம்பிவலைத்‌ துவாரங்கள்‌ வழியாக, ஒரு கம்பை விட்டூ லேசாக 
அடிக்க, குரங்குகள்‌ ஒன்றோடொன்று சண்டை போட்டுக்‌ 


ஜா: 3. 


34 லாரி சிங்கி 





கொண்டே அந்த கூண்டிற்குள்‌ ஓடின. அதன்‌ இரும்புக்‌ கதவை 
மூடிவிட்டு, அவள்‌ முதுகை நிமிர்த்தியபோது, செங்கோடனும்‌, 
இன்னும்‌ இரண்டு பேருமாக முதுகுகளைக்‌ குனிந்து, எம்டியாகப்‌ 
போன இரும்ப கூண்டைத்‌ தூக்கினார்கள்‌. இதரக்‌ 
கிழக்குறவர்களும்‌, குறத்திகளும்‌ பரபரப்பாக அல்லது பஞ்சாயத்துத்‌ 
தலைவர்‌ அப்படி நினைக்க வேண்டும்‌ என்பது போல, பம்பரமாகச்‌ 
சுற்றிக்கொண்டு, மீண்டும்‌ தத்தம்‌ இடத்தில்‌ தயாராக நின்றார்கள்‌. 
குரங்குகள்‌ சண்டை போட்டுக்‌ கொண்டிருப்பதை, “சேடிஸ்டிக்காக' 
ரசித்துக்‌ கொண்டிருந்த பஞ்சாயத்து உறுப்பினர்‌ ஒருவர்‌ தன்‌ 
சந்தேகத்தை வினாவாக்கினார்‌. 

டேய்‌ செங்கோடா... குரங்குக ஏண்டா - இப்படிச்‌ சண்டை 
போடுதுங்க: 

நம்ம பஞ்சாயத்துக்‌ கூட்டத்தை... அடிக்கடி பார்த்திருக்கும்‌” 
என்றார்‌ தலைவர்‌ “பொடி' வைத்து செங்கோடன்‌ விளக்கினான்‌. 

அதா சாமீ.. கொரங்கோ... *6கொம்பல்லோ! பீட்சா... கலாட்டா 
இல்லே... இதுங்க... பலாப்பலா கொம்பல்லோ பிட்சது... அதான்‌ 
கலோட்டா” 

.மன்ஷன்‌... தன்‌... '(கொம்பல்லோ' கலாட்டா பண்றான்‌... 
இன்னோர்‌... கொம்பல்லோ... பயத்துலே... சொம்மா... இருக்கான்‌... 
ஆனா... கொரங்கோ கொம்பல்லோ சொம்மா... வேற கொம்பல்லோ 
கலோட்டா...' என்றாள்‌ வெள்ளைக்‌ கோட்டுக்காரி. 

ஏய்‌... லாரிச்சிங்கி...கொரங்கோ... சொம்மா இருக்க மாட்டே 
என்று செங்கோடன்‌ மனைவியை அதட்டியபோது, “குற்றாலக்‌ 
குறவஞ்சில... சிங்கின்னு... படித்திருக்கோம்‌... இது என்னடா... 
லாரிச்‌ சிங்கி! என்றார்‌ இன்னொரு உறுப்பினர்‌. செங்கோடன்‌ 
தன்‌ மனைவியைப்‌ பற்றி பேச்சுத்‌ திரும்பியதில்‌ கோபப்பட்டு, 
நின்றபோது, ஷோக்காடாள்‌ விளக்கினாள்‌. 

“அதா... சாமி...இவளோட... அம்மா... ஆற்காட்ல... லாரி ஏறி... 
திருவண்ணாமலைக்கு போச்சோ... இந்த கொரங்கு லாரிலே 
பொறந்ததுங்கோ... லாரிச்சிங்கின்னு வச்சோம்‌... 

குறவர்கள்‌, உறுப்பினர்கள்‌ முகத்தைப்‌ பார்த்துப்‌ பேசுவதால்‌, 
தன்‌ முகம்‌ தன்னையறியாமலே எள்ளுங்‌ கொள்ளுமாக, 
பஞ்சாயத்துத்‌ தலைவர்‌ லேசாக அதட்டினார்‌. 


காகித உறவு | 3 





ஏய்‌... பஸ்ஸுக்குப்‌ பணம்‌ வேணுமா?” 
அய்யோ சாமீ...” 


“இந்நேரம்‌ பத்து குரங்குகள்‌... பிடிச்சிருக்கணும்‌... பேச்சுக்கு 
இதாடா நேரம்‌... நாலு நாள்ள - ஒரு குரங்கு கூட இந்தப்பக்கம்‌ 
இருக்கப்படாது... ஆமாம்‌ சொல்லிட்டேன்‌” 

பஞ்சாயத்து உறுப்பினர்‌ ஒருவர்‌ ஒத்திவைப்பு 
பிரேரணையை பஞ்சாயத்துக்‌ கூட்டத்தில்‌ கொண்டு வரப்போவதற்கு 
அங்கேயே ஒத்திகை பார்த்தார்‌. 

“குரங்குகளை... பிடித்துப்‌ பிரயோஜனமில்ல... அப்பாவிக்‌ 
குரங்குகள்தான்‌ அகப்படுதுங்க... திருட்டுக்‌ குரங்குங்க கூண்டைப்‌ 
பார்த்ததுமே... 'கூண்டோட' ஓடிருதுங்க பஞ்சாயத்துப்‌ பணந்தான்‌ 
வேஸ்ட்‌; இல்லியாடா செங்கோடா” 

்‌ “அதுவும்‌ நெயாயந்தான்‌ சாமி! 

பஞ்சாயத்துத்‌ தலைவருக்கு மகாக்‌ கோபம்‌. இந்த 
செங்கோட்டுப்‌ பயல்‌, பஞ்சாயத்துப்‌ பணம்‌ வேஸ்டூுன்னு 
சொல்றதை, வழி மொழிகிறான்‌ என்றால்‌ என்ன அர்த்தம்‌? 

'டேய்‌.... மலைப்பக்கம்‌ போறீங்களா... இல்ல பஸ்‌ ஸ்டாண்ட்‌ 
பக்கமா?” 

“அய்யோ சாமி! என்று சொல்லிக்கொண்டு, 
கோட்டுக்காரியான லாரிச்சிங்கி தவிர, இதர குறவர்கள்‌ 
புறப்பட்டார்கள்‌. அப்போது, அவள்‌ இரண்டு வயது பையன்‌, 
வாய்க்குள்‌ விட்டிருந்த ஆள் காட்டி விரலையும்‌, பெருவிரலையும்‌ 
எடுத்து, அருகே இருந்த்‌ ஒரு கோணி மூட்டைப்‌ பக்கம்‌ நீட்டினான்‌. 
நேரத்தை வீணடிக்க விரும்பாத பஞ்சாயத்து தலைவர்‌, “ஏன்‌ 
- ஒன்‌ பையன்‌... அப்படி நீட்டுறான்‌' என்றார்‌. லாரிச்சிங்கி 
மகிழ்ச்சியோடு சொன்னாள்‌. 

ஓ... அதா சாமீ அங்கோ... சாராயம்‌ இக்கு. சாயோங்‌ காலமா 
கொடுக்கோப்போறே... அரகிளாஸோ இப்போவோ... கேக்குறான்‌... 
சாமி” 


“என்ன... குழந்தைக்கா சாராயம்‌ கொடுக்கிங்க?” 
“குத்தா என்னோ தப்பு சாமீ?' 
'ஒங்களுக்கு சாராயம்‌... எங்கே கிடைக்குது?” 


£ஒங்கோட்கு... எங்கே கிடைக்கோ... அங்கோதான்‌” 


35 ப லாரி சிங்கி 





லாரிச்சிங்கி கைதட்டிச்‌ சிரிக்க, பஞ்சாயத்துத்‌ தலைவர்‌, 
அந்தப்‌ பதிலை ரசிப்பதுபோல்‌ அவளை ரசிக்க, பல குரங்குகளைப்‌ 
பார்த்திருக்கும்‌ செங்கோடன்‌, “ஏய்‌ லாரி சொம்மாகிட... இங்கோ... 
கொரங்குவரும்‌... உஷாரா இருவோ' என்று அறிவுரையை 
அதட்டுரையாக்கிவிட்டு பின்பு உள்ளூர்த்‌ தலைவர்களிடம்‌ 
வாங்கோ... சாமி' என்று சொல்லிக்‌ கொண்டு, அவர்களையும்‌ 
வலுக்கட்டாயமாக கடத்திக்‌ கொண்டும்‌ வெளியேறினான்‌. 

சகாக்கள்‌ போவது வரைக்கும்‌ அவர்களின்‌ முதுகு பக்கம்‌ 
பார்வையை கோணக்‌ கணக்கில்‌ வீசிக்‌ கொண்டிருந்த 
லாரிச்சிங்கி, அவர்கள்‌ ஒரு முனைக்குள்‌ திரும்பியதும்‌, 
பார்வையை கூண்டுப்‌ பக்கமாகத்‌ திருப்பினாள்‌. அங்கே, 
அதிகமாகச்‌ சண்டையில்லை. ஆனால்‌, கூண்டுப்‌ பக்கமாக இருந்த 
அரச மரத்தில்‌ உட்கார்ந்திருந்த ஒரு குரங்கு மெள்ள இறங்கி, 
கூண்டு பக்கமாக வந்து நின்றது. லாரிச்‌ சிங்கியை 
ஜாக்கிரதையாகவும்‌, கோபமாகவும்‌, பார்த்துவிட்டு, கம்பி 
வலைப்பக்கம்‌ முகத்தைக்‌ கொண்டூ போனது. உள்ளே ஒரு 
சின்னஞ்‌ சிறிய குரங்குக்‌ குட்டி, வெளியே நின்ற குரங்கிடம்‌ 
பேசத்துடிப்பது போல்‌ “கக்கீ...கீக்கீ' என்று கத்திக்‌ கொண்டே, 
எம்பி எம்பிக்‌ குதித்தது. கீரிப்பிள்ளையின்‌ அளவுக்கு ஓணான்‌ 
நிறத்தில்‌ அணிலின்‌ லாகவத்தில்‌ மழலையாகக்‌ கத்திக்‌ கொண்டும்‌, 
இருந்த அதைப்‌ பார்த்ததும்‌, வெளியே நின்ற தாய்க்‌ குரங்கு, 
கம்பி வலையை பிய்க்கப்‌ போவதுபோல்‌ அடித்தது. பின்னர்‌ 
வலி தாங்க முடியாமல்‌ போகவே, கைகளை முஷ்டியாக்கி பார்த்துக்‌ 
கொண்டது. தொலைவில்‌ குழந்தையை அணைத்தவாறு பால்‌ 
கொடுத்துக்‌ கொண்டிருந்த லாரிச்சிங்கியை பரிதாபத்தோடும்‌, 
பயங்கரமான கோபத்தோடும்‌ மாறி மாறிப்‌ பார்த்தது. அம்மாக்‌ 
குரங்கு தன்னை எப்படியாவது மீட்டுவிடும்‌ என்கிற நம்பிக்கையில்‌, 
குட்டிக்‌ குரங்கும்‌ விழிகள்‌ போலிருந்த கம்பி வலைக்குள்‌ விழி 
பிதுங்க, தாயின்‌ விழிகளைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தது. இதரக்‌ 
குரங்குகள்‌ கரங்களால்‌ மெளனமாகத்‌ தலையைப்‌ பிய்த்துக்‌ 
கொண்டிருந்தன. 

இவற்றைக்‌ கவனித்துக்‌ கொண்டிருந்த லாரிச்சிங்கி 
குழந்தையை இடுப்பில்‌ வைத்துக்‌ கொண்டூ கூண்டுப்‌ பக்கம்‌ 
வந்து தன்‌ பையனின்‌ இரண்டு கைகளையும்‌ பிடித்துக்‌ கொண்டு, 
பிடியை விடாமலே அந்த தாய்க்‌ குரங்கைப்‌ பார்த்து, பையனை 


காகித உறவு 37 





வீசினாள்‌. அவன்‌ கால்களை கம்புகளாக நினைத்துக்‌ கொண்டே, 
தாய்க்குரங்கு மரத்திற்குத்‌ தாவியது. லாரிச்சிங்கி சிரித்துக்‌ 
கொண்டே, மீண்டும்‌ தன்‌ இருப்பிடத்திற்கு வந்து, கூண்டைப்‌ 
பார்த்தாள்‌. 

சிறிது நேரந்தான்‌... 

மரத்தில்‌ ஏறிய தாய்க்குரங்கு, மீண்டும்‌ கூண்டுக்கருகே 
வந்தது. கூண்டு வாயை கடித்துப்பார்த்தது. கைகளால்‌ இடித்துப்‌ 
பார்த்தது, உடம்பால்‌ தள்ளிப்‌ பார்த்தது, அந்த வேகத்தில்‌ 
கூண்டுகூட ஆடியது. உள்ளே துடித்துக்‌ கொண்டிருந்த குட்டிக்‌ 
குரங்கு, தன்‌ முகத்தில்‌ படர்ந்த வேர்வையையோ, கண்ணீரையோ, 
வலைக்‌ கம்பிகளை, அம்மாவின்‌ ரோமக்கணைகளாக 
நினைத்துத்‌ தேய்த்தது. தாய்க்குரங்கோ குட்டியை அணைப்பதாக 
நினைத்து, அதன்‌ முகத்தைக்‌ காட்டிய கம்பி வலையை கையால்‌ 
அணைத்துக்‌ கொண்டிருந்தது. 

லாரிச்சிங்கிக்கு என்னவோ போலிருந்தது. திருமணமாகி 
சரியாக ஒன்பது மாதம்‌ இருபது நாட்களுக்குப்‌ பிறகு பிறந்து, 
இரண்டூ வருடங்கள்‌ அவளின்‌ மடிக்குள்‌ அடைக்கலமாகக்‌ கிடந்து, 
அதிக சாராயத்தாலோ என்னவோ ஒரு நாள்‌ இறந்து போன 
தன்‌ தலை மகனின்‌ நினைவு வந்தது. எமக்கூண்டுக்குள்‌ 
இப்படித்தான்‌ அவன்‌ தவித்துக்‌ கொண்டிருப்பானோ? 

தாய்க்குரங்கு, தன்‌ குட்டியைப்‌ பார்த்துக்கொண்டு சிறிது 
நேரமாவது இருக்கட்டும்‌ என்று நினைத்தவள்‌ போல்‌ மனசு 
கேட்காமல்‌, இடுப்பில்‌ தொட்டிலை மாட்டிக்‌ கொண்டு குழந்தையை 
அதில்‌ வைத்துக்கொண்டு, தெருப்பக்கமாகப்‌ போனாள்‌. பாசிகளை 
விற்ற காசில்‌, டப்பாவுக்குள்‌ இரண்டு இட்லிகளைப்‌ போட்டு 
பிசைந்து குழந்தைக்கு உணவை ஊட்டிக்‌ கொண்டே, ஒரு 
தெருவைத்‌ தாண்டி, ஊர்‌ முனைக்கு வந்து விட்டாள்‌. பையன்‌, 
தன்‌ இடுப்பைப்‌ பிடித்து அழுத்த அழுத்த, அவளுக்கு அன்னையின்‌ 
வயிற்றை அரவணைப்பாய்‌ பிடித்துக்‌ கொண்டிருக்கும்‌ குரங்கின்‌ 
ஞாபகம்‌ வந்தது; இந்த குரங்குளைப்‌ பிடிப்பதற்கு பெருமளவு 
காரணமாக இருந்தவளும்‌ இவளே. கூண்டுக்குள்‌, 
தின்பண்டங்களைப்‌ போட்டுவிட்டு, அதோடூ சேர்ந்த சன்னமான 
சுமார்‌ இருநூறு அடி நீளமுள்ள இரும்புக்‌ கம்பி முனையைப்‌ 
பிடித்துக்கொண்டு. புதர்ப்பக்கமாக இருந்தவள்‌ இவள்‌. மணலால்‌ 
மறைக்கப்பட்டிருந்த இரும்புக்‌ கம்பி)யைப்‌ பார்க்க முடியாமல்‌, 


36 லாரி சிங்கி 





தின்பண்டங்களைப்‌ பார்த்துக்‌ கொண்டூ குரங்குகள்‌ நுழைந்தபோது 
இரும்புக்‌ கம்பியை இழுத்து, கதவை மூடியவளும்‌ இவள்தான்‌. 
இப்படி பல தடவை, திறந்த கதவை மூடியவள்‌. அப்போதெல்லாம்‌ 
குரங்குகள்‌ போடும்‌ கூச்சலையும்‌, பிராணனை பிளப்பதுபோல்‌, 
பிரளயத்தை உண்டுபண்ணுவதுபோல்‌ சுழலும்‌ வேகத்தையும்‌ 
ரசித்துக்‌ கொண்டிருந்தவளுக்கு இப்போது என்னவோ மாதிரி 
இருந்தது. காடை, கெளதாரிகளைப்‌ பிடித்துதின்‌ றும்‌, பிடித்தவற்றை 
விற்றுத்தின்றும்‌ பிழைப்பு நடத்தும்‌ நாடோடிக்‌ கூட்டத்தில்‌ 
பழக்கப்பட்ட நாடோடியான இவளுக்கு, ஏனோ அந்தக்‌ குரங்கின்‌ 
முகமே கண்களில்‌ நிழலாடியது. 

ஊர்முனையிலிருந்து ஒரு மணி நேரத்திற்குப்‌ பிறகு 
பூங்காவிற்குத்‌ திரும்பி வந்தாள்‌. இவள்‌ வருகிறாள்‌ என்பதையும்‌ 
சட்டை செய்யாமல்‌, தாய்க்குரங்கு கம்ப்‌ வலைக்கு மேலே 
குப்புறக்கிடந்தது, உள்ளே குட்டிக்குரங்கு இன்னொரு பெரிய 
குரங்கின்‌ தோளில்‌ ஏறி, அண்ணாந்து பார்த்தது. தாயும்‌ குட்டியும்‌ 
கம்பி வலையின்‌ இடைவேவளிக்குள்‌ முகத்தோடு முகம்‌ உரச, 
ஒன்றும்‌ புரியாமல்‌ 'கனத்து'ப்‌ போன நெற்றியுடன்‌ நெற்றி உரச, 
தலைவிதியை நொந்ததுபோல்‌ தலையோடு தலைசேர, நிம்மதியற்ற 
வாழ்க்கையை நினைத்துப்‌ பார்ப்பதுபோல, கண்ணீருடன்‌ 
கண்ணீர்‌ கலக்க நிதர்சனத்தை பாசத்தால்‌ விழுங்கி, 
நெருக்கத்திற்குக்‌ குறுக்கே நின்ற கம்பி வலையை நெடுூமூச்சால்‌ 
தள்ள முடியாமல்‌ போனதால்‌ தள்ளாடிக்‌ கொண்டே, அகத்தோடு 
அகம்‌ சேர்த்தும்‌, முகத்தோடு முகம்‌ சேர முடியாமல்‌ போன 
நிரந்தரத்தை தற்காலிகமாக நினைத்து தற்காலிகமான 
இணைப்பை நிரந்தரமாக நிலைத்தவைபோல்‌ இன்னதென்று 
புரியாத, இனப்படுத்த முடியாத மோனத்தின்‌ முழுப்பாங்கில்‌ அவை 
சேர்ந்தும்‌ சோர்ந்தும்‌ கிடந்தன. லாரிச்சிங்கி அருகில்‌ வந்துநிற்பது 
கவனிக்காமலே அடித்தால்‌ அடி' என்பதுபோல்‌ தாய்‌, சேயைப்‌ 
பார்க்க, சேய்‌ தாயைப்‌ பார்க்க இதரக்‌ குரங்குகள்‌ அரக்கி 
வந்துவிட்டாள்‌ என்பதுபோல்‌ தாய்க்‌ குரங்கை உஷார்ப்படுத்தும்‌ 
விதத்தில்‌ கத்தின. 

திரும்பிப்‌ பார்த்த தாய்க்குரங்கு, நாலடி தூரம்‌ வரை 
துள்ளிக்குதித்து நின்றது. குறத்தியை சீறிப்பாய்ந்து பயமுறுத்த 
முடியாது என்பதை உணர்ந்ததுபோல்‌ அது தன்‌ கண்ணில்‌ சுரந்த 
நீரை, தோளில்‌ வைத்துத்‌ துடைத்தபோது லாரிச்‌ சிங்கியும்‌, தன்‌ 
கண்களைத்‌ துடைத்துக்‌ கொண்டாள்‌. கூண்டின்‌ உள்ளே குட்டிக்‌ 
குரங்கு முட்டி மோதியது. இறக்கும்போது, தன்‌ கைகளைக்‌ 
கெட்டியாகப்‌ பிடித்துக்‌ கொண்டு இறந்த தன்‌ மகனின்‌ சுரணையற்ற 


காகித உறவு 39 


கைவிரல்களை சகாக்கள்‌ வலுக்கட்டாயமாகப்‌ பிரித்தபோது, 
எந்தத்‌ துன்பம்‌ ஏற்பட்டதோ அந்தத்‌ துன்பம்‌ இப்போதும்‌ அவளுக்கு 
ஏற்பட்டது. 

லாரிச்சிங்கி ஒரு முடிவுக்கு வந்தாள்‌, 

குழந்தையை சற்று தொலைவில்‌ வைத்துவிட்டு, ஒரு கம்பை 
எடுத்து, குட்டிக்‌ குரங்கை லேசாகக்‌ குத்தினாள்‌. குட்டிக்‌ குரங்கை, 
கூண்டு வாசல்‌ பக்கமும்‌ இதர குரங்குகளை வேறொரு 
முனைக்கும்கொண்டு போனாள்‌. அவளை பயங்கரமாக நெருங்கிக்‌ 
கொண்டு வந்த தாய்க்‌ குரங்கைப்‌ பற்றிக்‌ கவலைப்படாமல்‌ 
குட்டிக்குரங்கை கம்பால்‌ அடித்தே, வாசல்பக்கம்‌ வலுக்கட்டாயமாகக்‌ 
கொண்டு வந்து, கட்டியிருந்த கதவை அவிழ்த்து, குட்டி மட்டும்‌ 
தாயோடூ சேரட்டும்‌ என்று எண்ணிக்‌ கொண்டே, லேசாகக்‌ 
கதவைத்‌ திறந்தாள்‌. இதற்குள்‌ பின்னால்‌ வந்த தாய்க்குரங்கு, 
அவள்‌ காலைக்‌ கடித்ததால்‌, நிலை குலைந்து அவள்‌ 
திரும்பியபோது வாசல்‌ கதவு முழுவதும்‌ திறக்க, எல்லாக்‌ 
குரங்களும்‌ மனிதர்கள்‌ 'பல்லவனுக்கு' முண்டியடிப்பதுபோல்‌ 
முண்டியடித்துக்‌ கொண்டு ஓடின. 

லாரிச்‌ சிங்கி என்ன செய்வதென்று புரியாமல்‌ 
குழம்பியபோது மேலே தெரிந்த மலைப்பகுதியில்‌ நடப்பதை 
தற்செயலாகப்‌ பார்த்த செங்கோடன்‌, “ஹே லாரிச்சிங்கி எதுக்கோ 
திறந்து... வாரேன்‌... வாரேன்‌...!' என்று கத்த குறக்கோஷ்டி, கத்திக்‌ 
கொண்டும்‌, திட்டிக்கொண்டும்‌, அங்கிருந்தே இவள்மீது அப்படியே 
குதிக்கப்‌ போகிறவர்கள்‌ போல்‌, நெஞ்சை முன்னால்‌ குவித்தும்‌, 
முதுகை பின்னால்‌ வளைத்தும்‌ கத்திகளை ஆடட்டிக்கொண்டும்‌ 
வேல்கம்புகளை ஒங்கிக்‌ கொண்டும்‌ வந்தார்கள்‌. 

லாரிச்சிங்கிக்கு விஷயம்‌ புரிந்து விட்டது. கதவைத்‌ திறந்த 
உண்மையைச்‌ சொன்னால்‌ உதைப்பார்கள்‌. சொல்லாவிட்டால்‌ 
பைத்தியம்‌ பிடித்ததாய்க்‌ கருதி பரிகாரம்‌ தேடூவார்கள்‌. பரிகாரம்‌ 
உதைகளைவிட பயங்கரமானது. இது, குறைந்தபட்சக்‌ கூலி 
விவகாரம்‌, இருபது குரங்குகளுடையது எழுபது ரூபாய்‌ விவகாரம்‌. 
பொது விவகாரம்‌. அல்லும்‌ பகலும்‌ பாடுபட்டதன்‌ அத்தாட்ச। 
விவகாரம்‌. அதுமட்டுமல்ல. இனிமேல்‌ இந்த ஆற்காட்டுூக்‌ 
குறவர்களை பஞ்சாயத்துத்‌ தலைவர்‌ கூப்பிடாமல்‌ போகிற 
விவகாரம்‌. இதர குறக்கோஷ்டிக்கு இளக்காரமாய்ப்‌ போன 
விவகாரம்‌. இந்த விவாகரங்களை கணக்கில்‌ வைத்துப்‌ பார்த்தால்‌, 


40 லாரி சிங்கி 





சகாக்கள்‌ அவளைத்‌ தள்ளி வைப்பார்கள்‌. தள்ளி வைக்கப்படும்‌ 
குறத்தியின்‌ நிலைமை (கும்பலில்‌ இருந்து தள்ளப்பட்ட குரங்கின்‌ 
நிலையைவிடப்‌ பரிதாபமானது. 

லாரிச்சிங்கி, இப்போது ஒரு முடிவுக்கு வந்தாள்‌. 

தள்ளப்படுமுன்னே, அவளே தன்னைத்‌ தள்ளிக்கொண்டால்‌ 
என்ன? ஒதுக்கப்படும்‌ முன்னே ஒதுங்கிக்‌ கொண்டால்‌ என்ன? 
சகாக்களின்‌ தண்டனையைத்‌ தாங்க முடியாது. அது எந்தத்‌ 
தண்டனையை விடவும்‌ மோசமாகத்தான்‌ இருக்கும்‌. 

குறவர்கள்‌ அடிவாரத்திற்கு வந்திருக்க வேண்டும்‌. கூக்குரல்‌ 
கேட்டது. லாரிச்சிங்கி, குழந்தையை எடுக்கப்போனாள்‌. பிறகு 
சிறிது யோசித்தாள்‌. தனிப்பட்டுப்‌ போன தன்னோடூ, அந்த 
குழந்தை இருக்க வேண்டாம்‌. அவன்‌ நன்றாக இருக்க வேண்டும்‌. 
வயிறார உண்வேண்டும்‌. குறவர்‌ உறவோடும்‌, ஊரோடும்‌ அவன்‌ 
ஒத்து வாழ வேண்டுமே அன்றி, செத்து வாழப்போகும்‌ அவளோடு 
இருக்கலாகாது. இனிமேல்‌ இவனைப்‌ பார்ப்போமோ... பார்க்க 
முடியுமோ என்‌ ராசா... மாரி மீனாட்சி தந்த மாரிக்கொழுந்தே... 
போறேண்டா... போறேண்டா. ஒன்ன பாக்கோ மொடியாட்டாலும்‌... 
ஒன்ன பெத்தோ இந்தோ வயிறு இருக்கோ... அதே அட்‌ சிக்கிட்டே 
இருப்போண்டோ... இருப்போண்டோ... 

குறவர்‌ கோஷ்டி நெருங்கிக்‌ கொண்டிருப்பது காலடிச்‌ 
சத்தத்தாலும்‌ வாயடி ஒசையாலும்‌ நன்றாகக்‌ கேட்டது. 

லாரிச்சிங்கி, பூங்கா சுவரில்‌ ஏறி பின்னால்‌ இருந்த 
சாக்கடைப்‌ பாதை வழியாக ஓடினாள்‌. குட்டியை அதற்கு வலி 
கொடுக்குமளவுக்கு அணைத்துக்‌ கொண்டே அவளைப்‌ 
பரிதாபமாகப்‌ பார்த்த அதே தாய்க்குரங்கைப்‌ பார்த்துவிட்டூ, அழாமல்‌, 
அழமுடியாமல்‌ ஓடினாள்‌. குரங்குகளை கும்பலில்‌ சேர்த்த 
திருப்தியிலும்‌ கும்பலில்‌ இருந்து பிரிந்த துயரமும்‌ குட்டியைக்‌ 
குரங்கோடு சேர்ந்த மகிழ்ச்சியும்‌, தன்‌ குட்டிச்‌ செல்வத்தை 
உயிருடன்‌ பறிகொடுத்த வேதனையும்‌, எதிர்காலம்‌ எப்படி இருக்கும்‌ 
என்ற அச்சங்கலந்த ஆவலும்‌, மொத்தத்தில்‌ மனிதனுக்கு 
எத்தனை உணர்ச்சிகள்‌ உண்டோ, அத்தனை உணர்ச்சிகளும்‌ 
அவளை ஆட்கொள்ள, செம்பவள நிறங்கொண்ட, செண்பகப்‌ பூ 
முகங்கொண்ட லாரிச்சிங்கி லாரியில்‌ பிறந்த அந்த குறப்பெண்‌, 
இப்போது லாரியைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறாள்‌. 


ெெ ௨ ௫ 


ஏழை - ஆப்பின்‌ - நா£சத்திறம்‌ 


பிறந்த நாள்‌ போஸ்டர்களைப்போல்‌ அமர்க்களமாக 
விளம்பரம்‌ செய்யப்பட்டு வரும்‌, எங்கள்‌ தர்மம்‌ - சமதர்மம்‌” 
என்ற அந்தப்‌ படத்தின்‌ முக்கியக்‌ காட்சிகளுக்கு, ஸ்டூடியோவில்‌ 
டைரக்டர்‌, காமிராமேன்‌, ஸ்டில்மேன்‌ உட்பட வரத்‌ தகுந்தவர்களும்‌, 
தகாதவர்களுமாகப்‌ பலர்‌ இருந்தார்கள்‌. 

காலை பத்து மணிக்கு ஷூட்டிங்‌ *ஷெடூல்‌' ஆகியிருந்தது. 
ஆனால்‌ கதாநாயக நடிகர்‌ கமலனையும்‌ நாயகி நடிகை நளினி 
குமாரியையும்‌, மணி 12 ஆகியும்‌ இன்னும்‌ காணோம்‌. 

மூவி] காமிரா கோணம்‌ எட்ட முடியாத தூரத்தில்‌ மூங்கில்‌ 
பரணில்‌ டூம்‌ லைட்டூகளோடு உட்கார்ந்திருந்த லைட்‌ பாய்களும்‌ 
கஷ்டப்பட்டார்கள்‌. அவர்களால்‌ ஷூட்டிங்‌ முடியும்‌ வரை கீழே 
இறங்க முடியாது. இதே போல்‌, ஸெட்டில்‌ ஒரு முனையில்‌ பத்து 
மணி படப்பிடிப்பிற்கு அஸிஸ்டெண்ட்‌ டைரக்டர்‌ உத்திரவுப்படி 
எட்டு மணிக்கே வந்த ஐம்பது அறுபது துணை நடிக-நடிகைகளும்‌ 
“டைரக்டரே' என்று உட்கார்ந்திருந்தார்கள்‌. 

மேலே பரணியில்‌ பத்தாம்‌ நம்பர்‌ டூம்‌ லைட்டைக்‌ 
கவனித்துக்கொண்டிருந்த லைட்பாய்‌ நாராயணனின்‌ உடம்பு 
வியர்த்தது. அவன்‌ குழந்தைக்கு வலிப்பு, அதற்கு மருந்து கொடுத்த 
ஒரு ஆர்‌.எம்‌.ப்‌]. டாக்டர்‌ ஆஸ்பத்திரிக்குப்‌ போனால்தான்‌ குழந்தை 
பிழைக்கும்‌ என்று கையை விரித்து விட்டார்‌. லைட்பாய்‌ கையில்‌ 
ஒன்றும்‌ இல்லாததால்‌ ஒன்றும்‌ செய்ய முடியவில்லை. படப்பிடிப்பு 
முடிந்ததும்‌ தயாரிப்பாளர்‌ கையைக்‌ காலைப்‌ பிடித்து... 

திடீரென்று ஸெட்டில்‌ ஒரு மயான அமைதி. தயாரிப்பாளர்‌ 
உட்படத்‌ துணை நடிக-நடிகைகள்‌ அனைவரும்‌ எழுந்து 
நின்றார்கள்‌. 

கதாநாயாக நடிகர்‌ கமலன்‌ காரிலிருந்து இறங்கி உற்ற 
நண்பர்‌ ஒருவர்‌ முன்னால்‌ வர, உயிர்த்‌ தோழர்‌ ஒருவர்‌ பின்னால்‌ 
வர, பத்திரிகை நிருபர்‌ பக்கத்தில்‌ வர, 'பந்தாவோடு” வந்தார்‌. 

“அவள்‌ இன்னும்‌ வரலியா?” 

“நளினி குமாரி தானே... இதோ வந்துக்கிட்டே இருக்காங்க.” 
டைரக்டர்‌ இழுத்தார்‌. 


42 ஏழை .- ஆப்பிள்‌ - நட்சத்திரம்‌ 


“ஐ காண்ட்‌ வேஸ்ட்‌ மை டைம்‌... அவள்‌ இப்படி அடிக்கடி 
லேட்டா வர்றாள்‌... நீங்‌ அவள்கிட்ட பங்சுவாலிட்டியைப்‌ புரிய 
வைக்கணும்‌. ஐ காண்ட்‌ வேஸ்ட்‌ மை டைம்‌” என்று சொல்லிக்‌ 
கொண்டே நடந்தவர்‌, (முகத்தில்‌ புன்னகை தவழத்‌ திரும்ப! வந்தார்‌. 
கதாநாயகி நடிகை நளினி குமாரி, ஓர்‌ இம்பாலா காரில்‌ தன்‌ 
அம்மாவோடும்‌, பணிப்‌ பெண்ணோடும்‌ ஒரு நாயோடும்‌ வந்து 
இறங்கியதே காரணம்‌. 

நடிகை நளினி குமாரி கமலனுக்கு அருகே தனது 
வீட்டிலிருந்து கொண்டு வந்த நாற்காலியில்‌ உட்கார்ந்து 
கொண்டே “சாரி லேட்டாயிட்டூது'” என்றாள்‌. 

“அதுக்கென்ன... அப்படி ஒண்ணும்‌ லேட்‌ இல்லை... நானும்‌ 
இப்பதான்‌ வந்தேன்‌'' என்றார்‌ கமலண்‌. 

“படப்பிடிப்பை ஆரம்பிக்கலாமா??? என்றார்‌ டைரக்டர்‌, 
வினயமாக. அதைக்‌ காதில்‌ வாங்கிக்‌ கொள்ளாமல்‌ “உங்களுக்கு 
ஆப்பிரிக்கா போக அழைப்பு வந்திருக்காமே?'' என்றார்‌ கமலன்‌ 
நளினியிடம்‌. அதற்குள்‌ புரொடக்ஷன்‌ மானேஜர்‌, “படப்பிடிப்பை 
துவக்கலாமா?'”” என்று கேட்டார்‌. 

“மிஸ்டர்‌ டைரக்டர்‌! இந்த ஆசாமி என்ன புதுசா? சும்மா 
தொண தொணத்துக்கிட்டு இருக்கான்‌. கொஞ்சம்‌ சொல்லி 
வையுங்க...” என்றார்‌ கமலன்‌. 

லைட்பாய்‌ நாராயணனுக்கு ஒரே ஆத்திரம்‌. படப்பிடிப்பு 
முடியுமுன்னால்‌ அவன்‌ கீழே இறங்க முடியாது. குழந்தைக்கு 
இப்போது எப்படி இருக்கிறதோ... 

ஒரு வாலிபன்‌ ஸெட்டை நெருங்கி வந்து, “ஐ ஆம்‌ ஸெண்ட்‌ 
பை ஐ.டி.ஓ."” என்றான்‌. இன்கம்டாக்ஸ்‌ ஆபீஸில்‌ இருந்து 
வருகிறான்‌? அட பாவி! கமலன்‌, நளினி எல்லோரும்‌ எழுந்து 
நின்றார்கள்‌. கமலனும்‌, நளினியும்‌ எழுந்து நின்றதால்‌ ஐ.டி.ஓ. 
விற்கு எந்த ஜென்மத்திலும்‌ சம்பந்தமில்லாத துணை நடிக 
நடிகைகளும்‌ எழுந்தார்கள்‌. - 

அந்த வாலிபன்‌ ஒரு அதிகாரிக்குரிய புருஷ லட்சணத்தோடு 
“நீங்க தான்‌ மிஸ்டர்‌ கமலனா? இவங்கதான்‌ மிஸ்‌ நளினியா?”! 
என்றான்‌. 

“ஸார்‌, ஏதாவது சாப்பிடுகிறீர்களா?”” நளினி தனக்கே உரிய 
பாணியில்‌ குழைந்தாள்‌. 


காகித உறவு ப 43 





“நோ, தாங்ஸ்‌, இப்போதான்‌ ஐ.டி.ஓ. அண்ணன்‌ வாங்கிக்‌ 
கொடுத்தார்‌." 

“நீங்க என்ன சொல்றீங்க? ஐ.டி... அண்ணனா?” 

அந்த வாலிபன்‌ கள்ளமின்றி சிரித்துக்கொண்டே 
ஐ.டி.ஒட்டக்கூத்தன்‌ அண்ணன்‌ தானே இந்த “எங்கள்‌ தர்மம்‌ 
சமதர்மம்‌' படத்தைத்‌ தயாரிக்கிறாங்க... எனக்கு ஷூட்டிங்‌ பார்க்க 
ஆசை... நான்‌ மதுரையில்‌ எம்‌.ஏ. படிக்கிறேன்‌... ஐ.டி.ஓ. 
அனுப்பினதா சொல்லு... ஸ்டூடியோவுக்குள்‌ விடூவாங்கன்னு 
சொன்னாங்க” என்றான்‌. 

ஈயாடாமல்‌ இருந்த பெரிய புள்ளிகள்‌ முகத்தில்‌ கோபம்‌ 
தாண்டவம்‌ ஆடியது. துணை நடிகர்‌ கூட்டம்‌ தங்களுக்குள்‌ சிரித்துக்‌ 
கொண்டது. 

ஐம்பது வயதைத்‌ தாண்டிய “ஆமீஸ்‌-பாய்‌' ஆடலழகன்‌ அவண்‌ 
கையைப்‌ பிடித்துத்‌ தரதரவென்று இழுத்துக்கொண்டு போய்‌ 
கூர்க்காவிடம்‌ விட்டுவிட்டு, அந்தக்‌ கூர்க்காவையும்‌ திட்டிவிட்டு 
வந்தான்‌. வெளியே கேட்டில்‌ கூர்க்காவுக்கும்‌ அந்த வாலிபனுக்கும்‌ 
சண்டை நடந்துக்‌ கொண்டிருந்தபோது, ஸெட்டில்‌ ஷூட்டிங்‌ 
ஆரம்பமாக்த்‌ துவங்கியது. 

வசனகர்த்தா, கமலனிடம்‌ ஸ்கிரிப்டைக்‌ கொடுத்தார்‌. 

டைரக்டர்‌ ஸ்டார்ட்‌ என்றார்‌. பிறகு கிளாப்‌ என்றார்‌ உடனே 
புரடெக்ஷன்‌ மானேஜர்‌, டென்‌-ஏ-டேக்‌ &போர்‌ என்றார்‌. ஷூட்டிங்‌ 
துவங்கியது. லைட்‌ பாய்கள்‌ டூம்களைப்‌ பல கோணங்களில்‌ 
துவக்கினார்கள்‌; மூவி] காமிரா சுழன்றது. 

கொத்து வேலை செய்யும்‌ தொழிலாளி உழைத்த களைப்பில்‌ 
உட்கார்ந்திருக்கிறான்‌. அவன்‌ முதலாளி, “ஏண்டா சோமாறி!... 
நான்‌ வரேன்‌... கண்ணு தெரியலியா?... பெரிய மனுஷன்‌ மாதிரி 
உட்கார்ந்திருக்கே”” என்கிறார்‌; உடனே அந்தத்‌ தொழிலாளி 
கொதித்தெழுகிறான்‌. “மூளைகெட்ட முதலாளியே! நான்‌ உனக்கு 
அடிமையல்ல... தேவைக்குக்‌ குறைவாய்க்‌ கொடுத்து, சக்திக்கு 
அதிகமாக உழைக்க வைக்கும்‌ உலுத்தனே!” என்று வசனத்தைப்‌ 
பொழிந்து கொண்டிருந்த நடிகர்‌ கமலன்‌, திடீரென்று மீதி 
வசனத்தைப்‌ பேசாமல்‌ ஒரு துணை நடிகரைக்‌ கோபமாகப்‌ 


44 ஏழை - ஆப்பிள்‌ - நட்சத்திரம்‌ 


பார்த்தார்‌. அவன்‌ சிகரெட்‌ பிடித்துக்‌ கொண்டிருந்தான்‌! 
விஷயத்தைப்‌ புரிந்து கொண்ட அனுபவசாலியான டைரக்டர்‌, 
.கட்கட்‌' என்று சொல்லிவிட்டுத்‌ திரையுலகிற்குப்‌ புதிய ஆசாமியான 
அந்தத்‌ துணை நடிகரின்‌ எச்சில்‌ சிகரெட்டைப்‌ பிடுங்கி, கீழே 
எறிந்தார்‌. அஸிஸ்டெண்ட்‌ டைரக்டர்‌ அவனைக்‌ கேட்டை நோக்கி 
இழுத்துக்‌ கொண்டு போனார்‌. 

அந்தக்‌ காட்சி முடிந்து அடுத்த காட்சி துவங்கியது. நடிகை 
நளினிக்கு எழுத்துவாசம்‌ தெரியாததால்‌ அஸிஸ்டெண்ட்‌ டைரக்டர்‌ 
அவளுக்குச்‌ சொல்லிக்‌ கொடுத்தார்‌. 

“நீங்க ஒரு ஏழைப்‌ பொண்ணு... கொத்து வேலை 
செய்துகிட்டு இருக்கீங்க.” என்று சொன்னபோது, புரொடக்ஷன்‌ 
மானேஜர்‌ ஒரு சின்னாளப்பட்டி புடவையை நீட்டினார்‌. 

“வாட்‌... நான்‌ சின்னாளப்பட்டி புடவையைக்‌ கட்டுறதா?... 
நோ... நோ... 'ஃபாரின்‌' நைலக்ஸ்‌ கொண்டுவாங்க” என்றாள்‌ நளினி. 

நடிகையின்‌ மம்மி, “என்‌ பொண்ணை என்ன 
நினைச்சிட்டீங்க? ஆயிரம்‌ ரூபா புடவைக்குக்‌ குறைஞ்சு அவள்‌ 
கட்டினதே கிடையாது!” என்றார்‌. 

டைரக்டர்‌ குழைந்தார்‌ “ஒண்ணு சொல்றேன்‌ கேளுங்க... 
அம்மா இந்த சேலையை சும்மா பத்து செகண்ட்‌ கட்டட்டும்‌. உடனே 
ஒரு ட்ரீம்‌ காட்சி வச்சு... ஒரு பாட்டை வச்சுடறேன்‌. “உன்னைக்‌ 
கண்டேன்‌' என்று பாடும்போது ஆகாய கலரில்‌ ஒரு புடவை... 
என்னைக்‌ கண்டாய்‌: என்று பாடும்‌ போது ஆரஞ்சு கலரில்‌ ஒரு 
புடவை... “இருவரையும்‌ அம்மா கண்டாள்‌” என்கிற வரி பாடூறப்போ 
ஒரு வைர நெக்லஸ்‌... இப்படி விதவிதமாக ஜோடிச்சு 
சமாளிச்சுடறேன்‌... ஆனால்‌ பத்தே செகண்ட்‌. இந்த சுங்கடி 
சாரியைக்‌ கட்டடட்டும்‌.”” என்றார்‌. 

ஐ ஆம்‌ சாரி... இந்த சாரியை கட்டிக்க மாட்டேன்‌. என்‌ 
வேலைக்காரிகூட இதைக்‌ கட்டிக்க மாட்டாள்‌?” என்றாள்‌ 
நளினிகுமாரி. 

டைரக்டர்‌ சிந்தித்தார்‌. பிறகு “ஆல்ரைட்‌... அந்தக்‌ காட்சியே 
வேண்டாம்‌'' என்றார்‌ தீர்மானமாக. உடனே புரொடக்ஷன்‌ 
மானேஜர்‌ துணை நடிகைகளிடம்‌ பேசினார்‌. “கமலாவும்‌ விமலாவும்‌ 
தவிர, மற்றப்‌ பொண்ணுங்க போயிடுங்க... நீங்க நடிக்க வேண்டிய 


காகித உறவு 45 





காட்சியை நீக்கிட்டோம்‌ உங்களைத்தானே, போகமாட்டீங்க... 
போங்க! போயிடுங்க... அட! எருமை மாடு மாதிரி நிக்கிறதைப்‌ 
பாரு! போங்கன்னா போங்க...” 

ஐந்து ரூபாய்க்காக ஐந்து மணி நேரம்‌ காத்திருந்த துணை 
நடிகைகள்‌ எழுந்து மலைத்துக்‌ கலைந்தார்கள்‌. 

டைரக்டர்‌ “ஸ்டார்ட்‌' என்று சொல்வதற்ச : .. உதடுகளை 
நீக்கினார்‌. 

நளினிகுமாரி ஒர்‌ ஆப்பிளை லேசாகக்‌ கடித்துவிட்டுக்‌ 
கீழே வைத்தாள்‌. 

படப்பிடிப்பு துவங்கியது. கதாநாயகியும்‌, அவள்‌ தோழியும்‌ 
பாட வேண்டும்‌. அப்போது கதாநாயகன்‌ வருவான்‌ : அதைப்‌ 
பார்த்துத்‌ தோழி ஒதுங்கிக்‌ கொள்ள வேண்டும்‌ உடனே டூயட்‌... 
இதுதான்‌ காட்சி. 

டைரக்டர்‌ “ஸ்டார்ட்‌” என்று சொல்லுகையில்‌ ன்‌ 
“ஒன்‌ மினிட்‌' என்று சொல்லிவிட்டு, .லைட்கன்ட்ரோலர்‌ காதை 
-மைக்‌' மாதிரி நினைத்து ஏதோ சொல்ல, கன்ட்ரோலரின்‌ வாய்‌ 
ஒலி பெருக்கியாகியது... “ஏய்‌ எட்டாம்‌ நம்பர்‌...௫ம்‌ லைட்டை 
ப்ரைட்டாக்கு.... ஏய்‌ ஒன்பது...டூுமை டல்லாக்கு.... ஏய்‌ பத்து! 
நாராயணா! உன்னைத்தான்‌! அட! உன்னைத்தாண்டா... லைட்டை 
லெப்டா திருப்பு... ஏய்‌ பேமானி... எங்க பார்க்கிற... திருப்பு... திருப்பு... 
லெப்டுக்கா... லெப்டுகக்கா... ஏய்‌...ஏய்‌...!” 

“ஐயோ!” லைட்பாய்‌ நாராயணன்‌ பரணிலிருந்து கீழே 
விழுந்தான்‌. டூமைத்‌ திருப்பும்போது நளினி கடித்துப்‌ போட்டிருந்த 
அந்த ஆப்பிளைப்‌ பார்த்ததால்‌, குழந்தை நினைவு வரவே, கால்‌ 
தவறிவிட்டது. அடித்துப்போட்ட அணில்போல்‌ கீழே விழுந்தான்‌. 
ஒரே ரத்தம்‌. பரட்டைத்‌ தலையை ரத்தம்‌ நனைத்தது. 

எல்லோரும்‌ ஓடி வந்தார்கள்‌. “பாழாய்‌ போற பயல்‌ விழுந்து 
படப்பிடிப்பைக்‌ கெடுத்திட்டானே... ஏய்‌ கார்‌! காரை எழு... கார்‌ 
எங்கே?” டைரக்டர்‌ கத்தினார்‌. 

“காரா... ஆபீஸ்‌ காரா.... அம்மா நாயை ஏத்திக்கிட்டு வெட்னரி 
டாக்டர்கிட்டே போயிருக்கு...” 

“அப்படியா! ஆம்புலன்ஸுக்கு போன்‌ பண்ணு...” 

கமலனின்‌ சவர்லட்‌ காரையோ, நளினியின்‌ இம்பாலா 
வையோ கேட்க யாருக்கும்‌ தைரியம்‌ வரவில்லை. லைட்பாய்‌ 


46 ஏழை - ஆப்பிள்‌ - நட்சத்திரம்‌ 
நாராயணன்‌ நாய்‌ கவ்வி உதறிய நண்டு போல்‌ துடித்தான்‌. 
நடிகை நளினி குமாரியும்‌, கமலனும்‌ தங்கள்‌ இடத்தில்‌ வந்து 
அமர்ந்தார்கள்‌. 

திடீரென்று நளினிகுமாரியின்‌ அம்மா கூப்பாடு போட்டாள்‌. 
“ஐயையோ... என்‌ பொண்ணைப்‌ பாருங்களேன்‌! அவள்‌ முகத்தில்‌ 
வேர்த்திருக்கே! அவளுக்கு ரத்தத்தைப்‌ பார்த்தால்‌ ஆகாதே அவள்‌ 
உடம்பு ஆடுதே! ஐயையோ!” 

நளினி குமாரி பொங்கி வந்த வேர்வையைக்‌ 
கைக்குட்டையால்‌ ஒற்றிக்‌ கொண்டே சிணுங்கினாள்‌. 

லைட்பாயைச்‌ சுற்றி நின்ற கூட்டம்‌ நளினியை நோக்கி 
ஓடி வந்தது. “ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை”, என்று 
சொன்னதைப்‌ பொருட்படுத்தாமல்‌, “நோ, நோ, நீங்க ட்ரீட்மெண்ட்‌ 
எடுத்துக்கணும்‌” என்று சொல்லிவிட்டு, நடிகர்‌ கமலன்‌, அவளை 
அணைத்தவாறு தம்‌ காரில்‌ ஏற்றிக்‌ கொண்டூ பறந்தார்‌. 
நடிகையின்‌ அம்மாக்காரியும்‌, படத்தயாரிப்பாளர்‌, டைரக்டர்‌ 
முதலியவர்களும்‌ இன்னொரு காரில்‌ ஏறிபின்னார்‌ போனார்கள்‌. 
லைட்பாய்‌ நாராயணனைச்‌ சுற்றி நின்றவர்வள்‌ ஆம்புலன்ஸ்‌ 
வண்டியை எதிர்பார்த்து நின்றார்கள்‌. 

ஒரு வழியாக “எங்கள்‌ தர்மம்‌ - சமதர்மம்‌” வெளியாயிற்று. 
வெற்றிகரமாக ஓடுகிறது. சோஷலிஸத்தை விளக்கும்‌ இந்தப்‌ 
படத்தை ஒரு மகத்தான சித்திரம்‌ என்று எல்லோரும்‌ 
பாராட்டினார்கள்‌. மனிதர்களுக்குள்‌ பேதமில்லை என்ற 
சித்தாந்தத்தை விளக்கும்‌ *தத்துவப்படம்‌' என்று பாமாலை 
சூட்டினார்கள்‌. நடிகர்‌ கமலனுக்கு “சோஷலிஸம்‌ கொண்டான்‌?” 
என்று நளினி குமாரிக்கு “சோஷலிஸத்தின்‌ தலைமகள்‌” என்றும்‌, 
டைரக்டருக்கு, “சோஷலிஸ திலகம்‌” என்று கலையன்பர்கள்‌ பட்டம்‌ 
சூட்டினார்கள்‌. 

தனக்கு விடிவு காலம்‌ பிறக்காதா என்று :லைட்பாய்‌” 
நாராயணன்‌ ஆஸ்பத்திரியில்‌ ஏங்கிக்‌ கொண்டிருக்கிறான்‌. 
முறிந்திருந்த அவன்‌ தொடை எலும்பிற்குப்‌ பிளாஸ்திரி போட்டு 
அந்தக்‌ காலை மேலே தாக்கி, நாலடி உயரத்தில்‌ ஒரு “ஸ்லிங்கில்‌” 
வைத்திருக்கிறார்கள்‌. 


்‌ ௫ ௦ 


சணிக்கிழமை 


அன்று வெள்கிக்‌ கிழமை, சனிக்கிழமை அல்ல. 

என்றாலும்‌, சனிக்கிழமை அன்றே வந்தது போல, கல்லூரி ' 
முதல்வர்‌ சுழற்‌ நாற்காலியைச்‌ சுற்றாமல்‌, உட்கார்ந்திருந்தார்‌. 
நாளை பல காரியங்கள்‌ நடப்பதற்கு, இன்றே பல நடவடிக்கைகள்‌ 
எடுத்தாக வேண்டும்‌. சென்னையில்‌ இருந்து கல்லூரி நிர்வாக 
டிரஸ்ட்‌, ஆடிட்டர்களை அனுப்புகிறார்கள்‌. அதற்காகக்‌ கணக்குப்‌ 
புத்தகங்களை “அப்‌-டூ-டேட்டாக்க' வேண்டும்‌. சாப்பாடு சரியில்லை 
என்று ஹாஸ்டல்‌ மாணவர்கள்‌ எழுத்து மூலமாக புகார்‌ 
கொடுத்திருக்கிறார்கள்‌. வார்டனிடம்‌ பேச வேண்டும்‌. ஏனென்றால்‌ 
இன்று மத்தியானமே சாப்பாடு சீர்திருந்தவில்லையானால்‌, பீஸ்‌ 
கட்ட வவேண்டியதில்லை என்று மாணவர்கள்‌ 
சபதமிட்டிருக்கிறார்கள்‌. 

கல்லூரி முதல்வர்‌ :பீஸான பல்ப்‌ போல்‌, களையிழந்து 
காணப்பட்டார்‌. எல்லாக்‌ காரியங்களையும்‌ செய்வதற்கு அன்றே 
ஏற்பாடு செய்ய வேண்டியது இருந்ததால்‌, அவுரால்‌ ஒரு 
காரியத்தையும்‌ உருப்படியாகச்‌ செய்ய இயலவில்லை 

பிரின்ஸிபால்‌, கலெக்டருக்குக்‌ கால்‌ போட்டார்‌. கலெக்டர்‌ 
எங்கேஜ்ட்‌,” “கால்‌” கிடைக்காமல்‌, கைகளை டயலில்‌ இருந்து 
எடுத்து விட்டு, வைஸ்‌-பிரின்ஸிபாலிடம்‌ ஏதோ சொல்லப்‌ 
போனார்‌. அந்தச்‌ சமயத்தில்‌ கல்லூரி மணி அடித்தது. காலையில்‌ 
எட்டு மணிக்கே வந்துவிட்ட முதல்வர்‌, அப்போதுதான்‌ நேரத்தை, 
உணர்ந்தவராய்‌ கையோடவே கொண்டு வந்திருந்த டிபன்‌ 
பொட்டலத்தைப்‌ பிரிக்கப்‌ போன போது, பாடம்‌ நடத்துவதற்காக 
வைஸ்பிரின்ஸிபால்‌ எழுந்த போது 

இரண்டு மாணவர்கள்‌ திடுதிப்பென்று உள்ளே வந்தார்கள்‌. 
ஒருவன்‌ அளவுக்கு மீறிய உயரம்‌. அவன்‌ சைட்பர்ன்‌. அதற்கேற்ற 
நீளம்‌, சட்டியைத்‌ தலைகீழாய்க்‌ கவிழ்த்தது போன்ற மீசை, 
தொளதொள பேண்ட்‌. இவன்‌ தன்‌ இனிஷியலைச்‌ சொல்லித்‌ 
தன்னை அறிமுகப்படுத்திக்‌ கொண்டான்‌. காலேஜ்‌ யூனியன்‌ 
பிரஸிடெண்ட்‌ கோபால்‌ என்றுதான்‌ சொல்வான்‌. மாணவர்களும்‌ 
அவனை செல்லமாக, சி.யூ.ப்‌ி. கோபால்‌ என்பார்கள்‌. 
இன்னொருவன்‌ குட்டை; ஆனால்‌ உடம்பு பக்கவாட்டில்‌ 


நீண்டிருந்தது. நாற்பத்தெட்டில்‌ வரக்கூடிய தொந்தி, இந்தப்‌ 


48 சனிக்கிழமை 





பதினெட்டிலேயே வந்துவிட்டது. யூனியன்‌ செயலாளர்‌ ராமு 
என்றால்‌, எல்லாருக்கும்‌ தெரியும்‌. இந்த இரண்டு பேரும்‌ 
அரசியல்வாதிகள்‌ கொடுத்த, ஆயிரம்‌ ரூபாய்க்கும்‌ போஸ்டர்‌ போட்டு, 
பிரசுரங்கள்‌ அடித்து, பல வாக்குறுதிகளை அள்ளி ஷீச), ஐம்பது 
ஓட்டுக்கள்‌ வித்தியாசத்தில்‌ காலேஜ்‌ யூனியன்‌ தேர்தலில்‌ 
ஜெயித்தவர்கள்‌. இவர்களைப்‌ பகைக்க முடியாது... கூடாது. 

பிரின்ஸ்பால்‌, “உட்கார்‌ கோபால்‌” என்று சொன்னபோது, 
செயலாளர்‌ ராமு உட்கார்ந்தான்‌. கோபால்‌ உட்காரவில்லை. 
அவன்‌ அரசியல்‌ மேடையில்‌ பேசுபவன்‌, நின்றால்தான்‌ பேச்சே 
வரும்‌! 

முதல்வர்‌ அமைதியாக முகத்தை வைத்துக்‌ கொண்டு அழாக்‌ 
குறையாகப்‌ பார்த்தார்‌, “எப்பா... வகுப்பு நடக்கும்‌ போதுதானா 
வரணும்‌? முன்னாலேயோ, பின்னாலேயோ வரப்படாதா?'? என்று 
கேட்கப்‌ போனவர்‌ வராண்டாவில்‌ நின்ற ஏழெட்டு மாணவர்களைப்‌ 
பார்த்ததும்‌, சுருதியை மாற்றினார்‌. 

வாட்‌ ஐ கேன்‌ டூ பார்‌ யூ... டெல்‌ மி... ப்ளீஸ்‌:... 

கோபால்‌ அவரை அரை மரியாதையோடும்‌ 
வைஸ்பிரின்ஸ்பாலை அரை அவமரியாதையோடும்‌ பார்த்துக்‌ 
கொண்டே கேட்டான்‌ : 

“ஸார்‌, இன்னைக்கு ரெண்டில்‌ ஒண்ணு தெரியணும்‌... ஒங்க 
பைனல்‌ டிஸிஷனைச்‌ சொல்லிடணும்‌...' 

முதல்வர்‌ மருண்டு கொண்டே கேட்டார்‌. 

“எது ரெண்டு...? எது ஒணன்று...? 

'இனிமேல்‌ சனிக்கிழமை கல்லூரி வைக்கக்‌ கூடாது. எந்த 
ஸிட்டி காலேஜும்‌, சாட்டர்‌ டேயில்‌ ஒர்க்‌ பண்ணல்லே. இந்த 
ஜில்லா காலேஜ்ல மட்டும்‌ ஏன்‌ வைக்கணும்‌? நாங்க என்ன, 
ஸிட்டி காலேஜ்‌ பையன்களைவிட மட்டமா? சொல்லுங்க ஸார்‌...?' 

முதல்வர்‌ சொன்னார்‌ : 

“கோபால்‌, ப்ளீஸ்‌, நான்‌ சொல்றதை தயவு செய்து கேளூ...” 

'கேக்குற ஸ்டேஜ்‌ தாண்டிட்டூது ஸார்‌...” 

“முதல்ல கேளுப்பா. ஒனக்கே தெரியும்‌, நான்‌ பிரின்ஸிபாலா 
வந்து, மூன்று மாசந்தான்‌ ஆகுது. இதுக்கு முன்னால இருந்த 
பிரின்ஸிபால்‌ சனிக்கிழமையைக்‌ கல்லூரி நாளாய்‌ ஆக்கி, 
யூனிவர்சட்டிக்குத்‌ தெரியப்படுத்திட்டார்‌. அதுக்கு ஏத்தாப்போல, 


காகித உறவு 49 





மற்ற நாட்களில்‌ லோகல்‌ விடுமுறைகளை அதிகமாய்‌ வச்சட்டார்‌. 
, இப்போ நான்‌ யூனிவர்சிட்டி பெர்மிஷன்‌ இல்லாமல்‌ விடுமுறை 
விடமுடியாது. யூனிவர்சிட்டிலேயும்‌ பெர்மிஷன்‌ கொடுக்க 
மாட்டாங்க. ஏன்னா கல்லூரி இத்தனை நாட்களுக்கு நடந்தாக 
வேணுமுன்னு ஒரு விதி இருக்கு... அதனாலதான்‌...” 
கோபாலுக்குக்‌ கொஞ்சம்‌ கோபம்‌ வந்தது. விதியை 
மாற்றத்தானே அவன்‌ தலைவனாகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டான்‌? 

“எங்களுக்கு அதெல்லாம்‌ தெரியாது. இனிமேல்‌ 
சனிக்கிழமை கல்லூரி நடக்கக்‌ கூடாது. 

“கோபால்‌... ப்ளீஸ்‌... நான்‌ சொல்றதைக்‌ கேளு. “இப்போ 
நாம்‌ ஒண்ணும்‌ பண்ணமுடியாது. அடுத்த கல்வி ஆண்டில்‌ 
இருந்து நிச்சயமாய்‌ சனிக்கிழமைகளை விடுூமுறையாய்‌ 
ஆக்கிடுறேன்‌. தயவு செய்து, என்‌ பிளேஸில்‌ இருந்து பாரு. 
அப்போ ஒனக்குப்‌ புரியும்‌. 

“ஒங்க வேலையைவிட எனக்கு நல்ல வேலை கிடைக்கும்‌ 
சார்‌...” 

கோபால்‌ இப்படிச்‌ சொன்னதும்‌, வராண்டாவில்‌ இருந்து 
முதல்வர்‌ அறைக்குள்‌ வந்துவிட்ட மாணவர்கள்‌, *கொல்‌“லென்று 
சிரித்தார்கள்‌. (வெல்‌ செட்‌” என்று விசிலடித்தார்கள்‌. 

“இந்த “சனிப்‌: பிரச்னையை உடனே தீர்த்திடுவேன்‌. 
மனமிருந்தால்‌ மார்க்கமுண்டு சார்‌” என்று ராமு முடித்தான்‌. 

நீயே ஒரு மார்க்கத்தைச்‌ சொல்லுப்பா? என்றார்‌ முதல்வர்‌; 
பாட்சையில்‌ மார்க்கே வாங்காத அந்த ராமுவைப்‌ பார்த்து, கோபால்‌ 
இடைமநறித்தான்‌. செயலாளரை அதிமாய்ப்‌ பேசவிடலாமா? கூடாது. 
அவன்‌ அவனைப்‌ பேச விடாமல்‌, தான்‌ மட்டும்‌ விடாமலும்‌, விட்டூக்‌ 
கொடுக்காமலும்‌ பேசினான்‌. 

“ஸார்‌: சனிக்கிழமை தோறும்‌ நாங்களே வராமல்‌ இருக்க 
எங்களுக்கு அதிக நேரம்‌ பிடிக்காது. ஒரு மரியாதைக்காக 
ஓங்களிடம்‌ கேட்டோம்‌. மரியாதையை காப்பாற்றிக்க வேண்டியது, 
இனிமேல்‌ உங்கள்‌ பொறுப்பு." 

முதல்வர்‌ மரியாதையாகவே பதில்‌ அளித்தார்‌ : “என்னால்‌ 
முடிந்தால்‌ விடாமல்‌ இருப்பேனா? யுனிவர்சட்டியில்‌ பெர்மிஷன்‌ 
கொடுக்க மாட்டாங்க... அதனாலதான்‌..." 


௯௩. 


50 சனிக்கிழமை 





“சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தால்‌ என்ன சார்‌ 
அர்த்தம்‌? இப்ப சொல்றது பைனல்‌. இனிமேல்‌ சனிக்கிழமை 
கல்லூரி நடக்கக்‌ கூடாது. நான்‌ என்‌, எலெக்ஷன்‌ அறிக்கையில்‌ 
சனிக்கிழமையை விடுமுறை நாளாய்‌ ஆக்குறதாய்‌ வாக்குறுதி 
கொடுத்திட்டேன்‌. என்‌ வாக்கை நான்‌ காப்பாற்றியாகணும்‌...' 

வைஸ்‌-பிரின்ஸிபாலால்‌ இதற்கு மேல்‌ தாங்க முடியவில்லை. 
இந்த கோபாலை சின்னப்‌ பையனாக இருக்கும்‌ போதே 
அவருக்குத்‌ தெரியும்‌. ஓர்‌ ஏழைப்பையன்‌. தங்கள்‌ எதிர்‌ 
காலத்தையே இவனிடம்‌ ஒப்படைத்திருக்கும்‌ ஒரு வறுமைக்‌ 
குடும்பத்தின்‌ மூத்த பையன்‌ - நல்ல நிலைக்குப்‌ போகத்‌ 
தகுதியுள்ள ஓர்‌ இன்டலிஜென்ட்‌ பாய்‌, கெட்டுப்‌ போவதைப்‌ 
பார்த்துக்‌ கொண்டிருக்க முடியவில்லை அவரால்‌. இருக்கையை 
விட்டூ எழுந்து, கத்தினார்‌ : 

';கோபால்‌, ஒன்‌ மனசில்‌ என்னதான்‌ நினைச்சிக்கிட்டு 
இருக்கே? காலேஜ்‌ யூனியன்‌ தேர்தலை, பார்லிமெண்ட்‌ தேர்தல்‌ 
மாதிரியும்‌, நீ ஏதோ பெரிய அரசியல்‌ தலைவராய்‌ ஆகிட்டது 
மாதிரியும்‌ பேசுறியே... இது நல்லா இல்லே. டோண்ட்‌ பி ஸில்லி... 
தேர்தல்‌ வாக்குறுதியாம்‌. நிறை வேற்றணுமாம்‌. பொல்லாத தேர்தல்‌. 
பொல்லாத வாக்குறுதி. ஐ...ஸே...கோ...டு.யுவர்‌...ஜிளாஸ்‌...? 

கோபாலுக்கு லேசான அதிர்ச்சி. அந்த அதிர்ச்ச, கோபத்தில்‌ 
அதிர்ந்தது. வைஸ்‌-பிரின்ஸிபாலை, கண்களை உருளைக்கிழங்கு 
மாதிரி வைத்துக்‌ கொண்டு, முறைத்தான்‌. வைஸ்‌-பிரின்ஸிபால்‌ 
அவன்‌ பார்வை தாளமாட்டாது, வேறு பக்கமாக முகத்தை 
வைத்தபோது, செயலாளர்‌ ராமு, கல்லூரி முதல்வரை நோக்கி, 
அமைதியாகச்‌ சிரித்துக்‌ கொண்டே சீரியஸாகக்‌ கேட்டான்‌ : 

“ஸார்‌ எங்களுக்கு ஒன்று தெரிஞ்சாகணும்‌. நீங்க 
பிரின்ஸிபாலா... இல்லே இவரா?... இவரு இப்போ மன்னிப்புக்‌ 
கேட்கணும்‌... இல்லைன்னா...” ்‌ 

உடனே அங்கே நின்று கொண்டிருந்த மாணவர்கள்‌, 'வைஸ்‌ 
பிரின்ஸிபால்‌ மன்னிப்புக்‌ கேட்கணும்‌? இல்லைன்னா, ஸ்டிரைக்‌. 
இல்லைன்னா ஸ்டிரைக்‌' என்று கத்தினார்கள்‌. சில மாணவர்கள்‌ 
வகுப்புக்களில்‌ இருந்த மாணவர்களைக்‌ கூப்பிடூவதற்காக 
ஓடினார்கள்‌. இதற்குள்‌ பாடங்களை நடத்திக்‌ கொண்டிருந்த 
ஆசிரியர்களும்‌, வகுப்புக்களில்‌ தூங்காமல்‌ இருந்த மாணவர்களும்‌, 
அங்கே ஓடி வந்தார்கள்‌. ஒரே பரபரப்பு ஒரே கத்தல்‌ 


காகித உறவு ௮1 





மன்னிப்புக்‌ கேள்‌... மன்னிப்புக்‌ கேள்‌... 

முதல்வர்‌ நிலைமையைப்‌ புரிந்து கொண்டார்‌. 
'ஐ...ஆம்‌...ஸாரி... அவர்‌ சார்பில்‌ நான்‌ மன்னிப்புக்‌ கேட்கிறேன்‌. 
ப்ளீஸ்‌ எக்ஸ்க்யூஸ்‌ மி.. எக்ஸ்க்யூஸ்‌ ஹிம்‌...” 

மாணவர்கள்‌ திருப்பிக்‌ கத்தினார்கள்‌ “வைஸ்‌' என்ற 
வார்த்தைக்கு அழுத்தம்‌ கொடுத்துக்‌ கத்தினார்கள்‌, “விட்டூடுங்கடா' 
என்று சொல்லப்‌ போன கோபாலால்‌ அப்படி ஒரு வார்த்தையை 
வாய்‌ வழியாக விட முடியவில்லை. 

ப “முடியாது, வைஸ்‌-பிரின்ஸிபால்‌ மன்னிப்புக்‌ கேட்கணும்‌ 
சம்பந்தப்படாத வைஸ்‌ பிரின்ஸிபால்‌ சம்பந்தமில்லாமல்‌ 
ஏச௫ினதுக்கு, பகிரங்கமாய்‌ மன்னிப்புக்‌ கேட்கணும்‌. இப்பவே 
கேட்கணும்‌... இல்லைன்னா...' 

கல்லூரி முதல்வர்‌ நிலைமையைப்‌ புரிந்து கொண்டார்‌. 
தலைக்குமேல்‌ வெள்ளத்தை விடக்கூடாது, விட்டால்‌ சேதம்‌ 
வெள்ளத்துக்கு அல்ல. 

“மிஸ்டர்‌ வைஸ்‌-பிரின்ஸிபால்‌, ஒங்களுக்கு சம்பந்தமில்லாத 
விஷயத்துல, நீங்‌ தலையிட்டது தப்பு. நீங்க வருத்தம்‌ 
தெரிவிக்கணும்‌. பொறுங்கப்பா. அவரு மன்னிப்புக்‌ கேட்பாரு...” 

வைஸ்‌-பிரின்ஸிப்பால்‌ முதல்வரைப்‌ பார்த்தார்‌. ௪க 
ஆசிரியர்களைப்‌ பார்த்தார்‌. ஒருவராவது ஏன்‌ கேட்கணும்‌!' என்று 
கேட்கவில்லை. மாணவர்களோ, பல்லைக்‌ கடித்துக்‌ கொண்டு 
நின்றார்கள்‌... “ஐ... ஆம்‌... ஸாரி... மன்னிச்சிடுங்க... என்று சொல்லி 
விட்டு தன்னையே தான்‌ மன்னிக்க முடியாதவர்‌ போல்‌ கைகளை 
நெறித்தார்‌. பின்னர்‌ கண்களைத்‌ துடைத்துக்‌ கொண்டார்‌. கூனிக்‌ 
குறுகி உட்கார்ந்தார்‌. மாணவர்கள்‌ “ஒன்ஸ்‌ மோர்‌: என்றார்கள்‌. 

சில நிமிடம்‌. மெளனம்‌. கோபால்‌ வெற்றி விழாக்‌ கூட்டத்தில்‌ 
பேசுபவன்‌ போல்‌ கேட்டான்‌ : 

“அப்புறம்‌ இந்த சனிக்கிழமை விவகாரம்‌... 

முதல்வர்‌ பரிதாபமாகப்‌ பதிலளித்தார்‌. 

“எனக்கு “பவர்‌' இல்லேப்பா. இருந்தால்‌ விட மாட்டனா?'* 

ராமு ஒரு யோசனை சொன்னான்‌ : 

“ஆல்ரைட்‌, நாளைக்குப்‌ புரட்டாச! சனிக்கிழமை அதனால 
நீங்க லீவ்‌ விடலாம்‌. அடுத்த திங்கட்‌ கிழமை பேசலாம்‌..." 


52 சனிக்கிழமை 





கல்லூரி முதல்வர்‌ எதை நினைத்தோ அல்லது 
தற்செயலாகவேோ தலையாட்டியபோது, அவர்‌, தங்கள்‌ 
கோரிக்கையை ஏற்றுக்‌ கொண்டதாக மாணவர்கள்‌ நினைத்து 
“வெற்றி வெற்றி...” என்று சொல்லிக்‌ கொண்டே கோபாலையும்‌ 
ராமுவையும்‌, ரெண்டு பேர்‌ தூக்கி வைத்துக்‌ கொண்டு 
போனார்கள்‌. இதரர்களில்‌ பலர்‌ விசிலடித்தார்கள்‌; சிலர்‌ நாட்டியம்‌ 
ஆடினார்கள்‌. வெற்றியாச்சே விடமுடியுமா? 

மாணவர்கள்‌ அட்டகாசமாய்ப்‌ போவதை ஆசனத்தில்‌ அட்டை 
போல்‌ ஒட்டிக்‌ கொண்டு பார்த்துக்‌ கொண்டிருந்த முதல்வரால்‌ 
வைஸ்‌-பிரின்ஸ்பாலை நேருக்கு நேராய்ப்‌ பார்க்க முடியவில்லை. 
எங்கேயோ பார்த்துக்கொண்டே அவருக்குச்‌ சமாதானம்‌ 
சொன்னார்‌ : 

ஐ ஆம்‌ ஸாரி மிஸ்டர்‌ வெங்கு. இவங்களுடைய போக்கு 
விசித்திரமா இருக்கு. நானும்‌ காலேஜ்ல ஸ்டூடண்ட்‌ லீடராய்‌ 
இருந்திருக்கேன்‌. பல ஸ்டிரைக்கை நடத்தி இருக்கேன்‌. அதுல, 
நாட்டுப்‌ பிரச்னை இருந்தது. ஒரு லட்சியம்‌ இருந்தது. எப்போதும்‌ 
ஆசிரியர்களுக்கு எதிராய்‌ நடந்தது கிடையாது. 

(இப்போ காலம்‌ மாறிட்டுது, ஆனாலும்‌ இந்த பையன்களை 
என்னால்‌ வெறுக்க முடியல. இவர்களின்‌ கொட்டம்‌, ஒரு நோயின்‌ 
அறிகுறியே தவிர, நோயல்ல. சமுதாய அமைப்பில்‌ ஏதோ ஒரு 
மூலையில்‌, எப்படியோ ஏற்பட்ட ஒரு ஒட்டை... இவன்‌ களையும்‌ 
பிடிச்சுக்கிட்டிருக்குது. அந்த ஒஓட்டையைக்‌ கண்டுபிடித்து 
அடைச்சால்தான்‌ இவங்களையும்‌ அடக்க முடியும்‌ - இல்லை 
மீட்க முடியும்‌. இப்போ, நாம்‌ பெற்ற பிள்ளைகளே, நாம்‌ நம்‌ 
அப்பா அம்மாவிடம்‌ நடந்தது மாதிரி நடக்குதா? டோன்ட்‌ டேக்‌ இட்‌ 
ஸீரியஸ்லி...! 

வைஸ்‌ பிரின்ஸிபால்‌ எழுந்தார்‌; விரக்தியோடூ பேசினார்‌. 

“இந்த நாட்ல, குறிப்பாக, இந்த ஊர்ல, ஒண்டக்கூட 
திண்ணை கிடைக்காமல்‌ எத்தனையோ ஏழைங்க ரோட்ல 
படுக்கறாங்க. :இந்த தரித்திர நாராயணர்களை நினைத்துப்‌ 
பார்க்காதது மாதிரி இவங்க ஆடுறதையும்‌, பாடுூறதையும்‌ 
நினைத்தால்‌, அந்த ஏழைங்களையே, இவங்க இன்ஸல்ட்‌ 
பண்ணுறதாய்‌ நினைக்கிறேன்‌. அதனால, என்னை இன்ஸல்ட்‌ 
பண்ணுனதை நான்‌ பெரிசா நினைக்கல. கருமாதி வீட்டுக்குக்‌ 
கல்யாண டிரஸ்ல போற பசங்க. ஐ டோண்ட்‌ கேர்‌.' 


காகித உறவு 53 





வைஸ்‌ பிரின்ஸிபால்‌ புறப்படப்‌ போனார்‌. அதற்குள்‌ 
டெலிபோன்‌ மணி அடித்தது. முதல்வர்‌ டெலிபோனை எடுத்துப்‌ 
பரபரப்பாகக்‌ கேட்டுவிட்டு “அப்படியா... நான்‌... வரேன்‌ ஸார்‌. தயவு 
செய்து ஒங்க காலை வேணுமுன்னாலும்‌ பிடிக்கறேன்‌ ஸார்‌. 
என்‌ பையன்கள்‌ சின்னு சிறிசுகள்‌ ஸார்‌. ஸார்‌... கண்டிக்கறேன்‌ 
ஸார்‌. இதோ புறப்பட்டுக்கிட்டே இருக்கேன்‌” என்று சொல்லி விட்டு, 
டெலிபோனை வைத்தார்‌. பிறகு அர்த்தபுஷ்டியாகப்‌ பார்த்த வைஸ்‌ 
பிரின்ஸிபாலைப்‌ பார்த்து நம்ம பாய்ஸ்‌... டவுன்‌ பஸ்‌ கண்டக்டர்‌ 
ஒருவனை அடிச்சிட்டாங்களாம்‌. அவங்க இவங்களை 
அடிக்கறத்துக்காக கத்தி கம்போடு புறப்படுறாங்களாம்‌. 
டிரான்ஸ்போர்ட்‌ மானேஜர்‌ சொன்னார்‌. நான்‌ அங்கே போய்‌ 
அவங்க காலுல விழுந்தாவது தடுக்கிறேன்‌. நீங்க, நம்ம 
பையன்களை உஷார்ப்‌ படுத்துங்க. நோ... நோ... வேண்டாம்‌ 
இவங்களுக்குத்‌ தெரிஞ்சால்‌, தப்பு. நான்‌ சமாளிச்சுக்கிறேன்‌' 
என்றார்‌. 

வைஸ்‌ பிரின்ஸ்பால்‌ படபடப்பாகப்‌ பேசினார்‌. “ஸார்‌... நம்ம 
பையன்மேலே கைவைச்சாங்கனா, விஷயம்‌ ஸீரியாஸாப்‌ 
போகுமுன்னு சொல்லுங்க. இந்தக்‌ கண்டக்டர்கள்‌; என்னதான்‌ 
நினைச்சுக்கிட்டாங்க...?' 

முதல்வர்‌ மேற்கொண்டு பேசுவதற்கு நேரமில்லாதவர்‌ போல்‌ 
ஓடினார்‌. வைஸ்பிரின்ஸிபாலான அந்தக்‌ குழந்தையோ கல்லூரி 
கேட்டை மூடவும்‌ ரோட்டிலேயே எதிரிப்பட்டாளத்தை வழி 
மறிப்பதற்காகவும்‌, ஓசைப்படாமலே ஓடினார்‌. 


ஒரு வாரம்‌ ஓடியது. 

கண்டக்டர்கள்‌ கல்லூரி முதல்வரின்‌ உருக்கமான 
வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வரவில்லை. “என்‌ 
பிள்ளைகளை அடிக்கறத்துக்கு முன்னால என்னை அடியுங்க' 
என்று முதல்வர்‌ முதுகைக்‌ காட்டியபோது, பஸ்‌ ஊழியர்கள்‌, 
புறமுதுகிட்டு” நின்றனர்‌. 

“பரவாயில்லையே... நம்ம பயலுக கலாட்டா பண்ணாமல்‌ 
இருக்காங்களே: என்று முதல்வர்‌ எந்த நேரத்தில்‌ நினைத்தாரோ, 
அந்த நேரத்தில்‌ - கோபால்‌ மீண்டும்‌ புடை சூழ முதல்வரிடம்‌ வந்தான்‌. 

“ஸார்‌ - நம்‌ காலேஜ்‌ யூனியனை, இனாகுரேட்‌ செய்யாமல்‌ 
இருந்தால்‌ என்ன அர்த்தம்‌ ஸார்‌...?” 

நான்தான்‌ ரெடின்னு சொல்லிட்டேனே. நீதான்‌ அந்த 
அரசியல்‌ தலைவரைக்‌ கொண்டு வரணுமுன்னு பிடிவாதமாய்‌ 


54 சனிக்கிழமை 





நிற்கிறே. மோகன்‌ கோஷ்டி, அவரு வந்தால்‌ கல்லெறிவோமுன்னு 
சொல்றாங்க. “இளமையில்‌ கல்‌' என்கிறதை நல்லாம்‌ புரிஞ்சு 
வச்சிருக்கீங்க...? 

“ஸார்‌... சுத்தி வளைச்சுப்‌ பேச வேண்டாம்‌. வெள்ளி விழாத்‌ 
தலைவர்‌ வெண்தாமரைதான்‌ வரணும்‌...' 

“இந்தா பாருப்பா. நீ அரசியல்‌ மேடையில்‌ பேசுறது எனக்குத்‌ 
தெரியும்‌. இப்போ, ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரர்கள்‌, உன்னைச்‌ 
சுற்நிவர்றதும்‌ தெரியும்‌. ஒன்றை மட்டும்‌ நினைச்சுக்கோ. நீ 
மாணவனாய்‌ இருக்கிற வரைக்கும்தான்‌ இந்தப்‌ பயல்கள்‌ உன்கிட்ட 
வருவாங்க, உன்மூலம்‌ மாணவர்களை, தங்கள்‌ அரசியல்‌ 
சுயநலத்துக்குப்‌ பயன்படுத்தப்‌ பார்க்கிறாங்க. நீ எப்போ 
கல்லூரியில்‌ இருந்து வெளியேறுகிறாயோ அப்பவே 'ஒன்னை 
வள்ளுவர்‌ சொல்ற மாதிரி, தலையிலிருந்து கழிந்த முடிமாதிரி 
நினைப்பாங்க. இன்னும்‌ ஒண்ணு... நீ பத்திசாவிப்பையன்‌; தனியாய்‌ 
இருந்தால்‌ நல்ல பையன்‌. வாழ்க்கை கல்லூரி இல்ல, நீ சந்திக்கப்‌ 
போற சகாக்கள்‌ மாணவர்கள்‌ மாதிரி, வெள்ளையுள்‌ ளமாய்ப்‌ 
பழக மாட்டாங்க. ஆபீஸர்‌, கல்லூரி முதல்வர்‌ மாதிரி இருக்க 
மாட்டார்‌. லைப்‌ இஸ்‌ நாட்‌ லைக்‌ காலேஜ்‌ மேட்ஸ்‌. பாஸ்‌ வில்‌ 
நாட்‌ பி லைக்‌ யுவர்‌ பிரின்ஸ்பால்‌. இதைப்‌ புரிஞ்சிக்கிட்டு, 
இப்பவே அரசியலில்‌ கலக்காமல்‌ படிக்கணுமுன்னா படி... அப்புறம்‌ 
உன்‌ இஷ்டம்‌. நான்‌ சொல்றது புரியும்னு நினைக்கிறேன்‌.” 

கோபாலனுக்குப்‌ புரியவில்லை. முதல்வரின்‌ அறிவுரையை 
மீறி, அவன்‌ தன்‌ அபிமானத்‌ தலைவர்‌ வெண்தாமரையைக்‌ 
கல்லூரிக்குக்‌ கொண்டு வந்தான்‌. அந்தத்‌ தலைவரை 
பேமானியாகக்‌ கருதிய, இன்னொரு தலைவரின்‌ பைக்குள்‌ கிடந்த 
மோகன்‌ கோஷ்டி கல்லெறிந்தது. அப்புறம்‌ போலீஸ்‌ வந்தது. 
லத்தி வந்தது. கல்லூரிக்கு கால வரம்பில்லாமல்‌ விடூமுறை 
வந்தது. பத்திரிகைகளில்‌ அதன்‌ பெயர்‌ வந்தது. சனிக்கிழமை 
விடுமுறை வேண்டுமென்று கேட்க முடியாத அளவிற்குக்‌ கல்லூரி 
மூடிக்‌ கிடந்தது. 

அப்புறம்‌... 

பரீட்சை வந்தது. அதற்குப்‌ பலர்‌ வந்தாலும்‌, ரிசல்ட்‌ 
தெரிவித்த பத்திரிகைகளில்‌ சிலரே வந்தார்கள்‌. கோபால்‌ 
மெஜாரிட்டியின்‌ பக்கம்‌ நிற்கும்‌ ஜனநாயகவாதி. ஆகையால்‌ அவன்‌ 
பலரில்‌ ஒருவனானான்‌. பள்ளிக்கூடத்தில்‌ முதலில்‌ வந்த அவன்‌ 
- பியூசியில்‌ முதல்‌ வகுப்பில்‌ தேறிய அவன்‌ சட்டப்படிப்பு படித்து 


காகித உறவு ப 99 





வழக்கறிஞராகப்‌ பணியாற்றிக்‌ கொண்டே, அரசியல்‌ வானில்‌ 
நட்சத்திரமாக ஜொலிக்க நினைத்த அந்த ஏழை கோபால்‌, எரி 
நட்சத்திரமாய்‌, ஒரு தாலுக்கா: அலுவலகத்தில்‌, கீழ்‌ நிலை 
எழுத்தாளராக, கீழே விழுந்தான்‌. 

அன்று வெள்ளிக்கிழமை; சனிக்கிழமை அல்ல. 

தாசில்தார்‌ முன்னால்‌ ஒரு பைலை வைத்துவிட்டு, 
நழுவப்போன கோபாலை, ஆபீசர்‌ கண்களால்‌ எடை போட்டுக்‌ 
கொண்டே, கோபால்‌ ஒன்னைத்‌ தாய்யா, தூங்குமூஞ் ச! 
கலெலக்டருக்கு அனுப்பணுமுன்னு சொன்னேனே, அந்த 
ஸ்டேட்மெண்ட்‌ எங்கே? அதை... டைப்‌ அடிச்சட்டியா...' என்றார்‌. 

“இல்ல ஸார்‌... இன்னும்‌ ரெவின்யூ இன்ஸ்பெக்டர்கள்‌, 
பர்ட்டிகுலர்ஸ்‌ தரல்லே...' 

நீங்கள்ளாம்‌ ஏன்யா வேலைக்கு வர்றீங்க? ரெண்டு 
எருமைமாட்ட மேய்க்கலாம்‌. எத்தனை தடவய்யா, ஒனக்குச்‌ 
சொல்றது? கலெக்டர்‌ 'டி-ஒ' லட்டர்‌ வேற எழுதிட்டார்‌. - இன்னும்‌ 
ஆக்ஷன்‌ எடுக்காமல்‌ இருக்கறீயே, சென்ஸ்‌ இருக்கா? 
ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கா? ரெவின்ய இன்ஸ்பெக்டர்களை 
வரச்சொல்லி, ஒரு மெமோ வைக்கிறதுக்கு என்ன? 
நான்சென்ஸ்‌...!” 

கோபால்‌, கோபமாக அவரைப்‌ பார்த்து விட்டு, பின்பு தன்‌ 
செல்லாக்‌ கோபத்தை பொறுமையாக்கிக்‌ கொண்டு உயரமான 
தன்‌ உடம்பை, கூனிக்‌ குறுக்கி, நெளித்தான்‌. எந்த அரசியல்‌ 
வாதிகளை நம்பி இருந்தானோ, அந்த அரசியல்வாதிகளால்‌ 
தலையினின்று கழிந்த முடிபோல்‌ கருதப்பட்ட அவனால்‌, ஒன்றும்‌ 
செய்ய இயலாது. அதோடு, ஏற்கெனவே ஏமாற்றத்திற்கு உள்ளாகி 
இருக்கும்‌ அவன்‌ அப்பா - அம்மாவையும்‌ தம்பி] தங்கைகளையும்‌ 
இதற்குமேல்‌ ஏய்க்கக்‌ கூடாது. போதாக்‌ குறைக்கு அவனுக்குக்‌ 
கல்யாணம்‌ வேறு நிச்சயமாகப்‌ போகிறது. 

கோபால்‌ அமைதியாகவும்‌ அழப்போகிறவன்‌ போலவும்‌ 
இருப்பதைப்‌ பார்த்துவிட்டு 'படூகளத்தில்‌ ஒப்பாரியைக்‌ கேட்கக்‌ 
கூடாது” என்ற பழமொழியை *பைல்‌ களத்தில்‌.நாகரீகமாகப்‌ பேசக்‌ 
கூடாது” என்று, புது மொழியாக்கிக்‌ கொண்ட தாசில்தார்‌ கூட 
இரக்கப்பட்டவர்‌ போல்‌ பேசினார்‌. 

“சரி சரி, நாளைக்குள்ளே, ஸ்டேட்மென்டை ரெடி பண்ணிடு. 
நாளைக்கே, மெசஞ்சர்‌ மூலம்‌ கலெக்டரிடம்‌ சேர்த்துடணும்‌...” 

கோபால்‌ திக்கித்‌ திணறிப்‌ பேசினான்‌. 


56 சனிக்கிழமை 


“ஸார்‌ நாளைக்கு செகண்ட்‌ சேட்டர்‌ டே. இரண்டாவது 
சனிக்கிழமை சார்‌...' 

“எனக்கு செகண்ட்‌ சேட்டர்‌ டேக்கு அர்த்தம்‌ சொல்லிக்‌ 
கொடுக்கிறாயா? இந்தா பாருய்யா, நீ அரசாங்க ஊழியன்‌. இருபத்து 
நான்கு மணி நேர ஊழியன்‌. பேய்க்கு வாழ்க்கைப்‌ பட்டால்‌, 
புளியமரத்தில்‌ ஏறித்தான்‌. ஆகணும்‌. நாளைக்கு வர முடியுமா 
முடியாதா? ரெண்டுல ஒண்ணைச்‌ சொல்லு...” 

“வரேன்‌ சார்‌. ஆனா நாளைக்குள்ள முடிக்க முடியாது 
சார்‌.” 

“முடியாவிட்டால்‌ ஞாயிற்றுக்‌ கிழமையும்‌ வா. முடியுமா 
முடியாதா?” 

“முடியும்‌ சார்‌. ஆனால்‌: இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும்‌...” 

“ஒங்களுக்கெல்லாம்‌ வேலை கொடுத்ததே தப்புய்யா. நீ 
எல்லாம்‌ இங்க வந்து என்‌ பிராணனை, ஏன்யா வாங்குறே? 
சொல்லுய்யா, வர முடியுமா? இல்ல வரவழைக்கணுமா?' 

வரேன்‌ சார்‌...' 

“போய்த்‌ தொலை-” 

கோபால்‌, தாசில்தார்‌ அறையை விட்டுத்‌ “தொலைந்தான்‌.” 
தொலைந்து போன தன்னைத்‌ தேடுவதுபோல்‌, தன்னையே ஒரு 
தடவை மேலும்‌ கீழுமாய்ப்‌ பார்த்துக்‌ கொண்டே வெளியே வந்தான்‌. 
வெளியே அவனது :சீனியர்‌' சகாக்கள்‌, பைல்களை எழுதிக்‌ 
கொண்டும்‌, அதே சமயம்‌ ஒருவர்‌ மற்றவர்களிடம்‌ பேசிக்‌ 
கொண்டும்‌ இருந்தார்கள்‌. இது சகஜம்‌ என்பது போல்‌, அவனை 
ஏறிட்டுப்‌ பார்த்தார்கள்‌. ஒருவன்‌ கூட ஒருத்திகூட, அவனை 
அனுதாபத்தோடு விசாரிப்பது இருக்கட்டும்‌, அப்படிப்பட்ட 
பாவனையில்‌ பார்க்கக்கூட இல்லை. ப 

“சனிக்கிழமை: புகழ்‌ கோபால்‌, கல்லூரித்‌ தேர்தலில்‌ 
“வாக்குறுதி, வழங்கிய கோபால்‌, படித்த வாழ்க்கையை இந்தப்‌ 
பாழும்‌ வாழ்க்கையுடன்‌ ஒப்பிட்டுப்‌ பார்த்தான்‌; கல்லூரி முதல்வர்‌ 
அப்போதுதான்‌ அவனுடன்‌ பேசுவது போல்‌ தோன்றியது. 

“வாழ்க்கை கல்லூரி இல்லே. சகாக்கள்‌ மாணவர்கள்‌ அல்ல. 
ஆபீசர்‌ பிரின்ஸிபால்‌ ஆகமாட்டார்‌. புரியுதா?” 

கோபால்‌, புரிந்து கொண்டான்‌. பிராயச்சித்தம்‌ செய்ய 
(ஓடியாத காலவெளி கடந்து, புரிந்து கொண்டான்‌. ்‌ 


்‌ெ்‌்‌்‌ ௨ இ 


ிறக்காத நாட்கள்‌ 


சர்வதேசக்‌ குழந்தைகள்‌ ஆண்டை முன்னிட்டு, அந்தப்‌ 
பையனின்‌ பிறந்ததினத்தை, அன்று பிறக்காத சொந்தக்காரர்கள்‌, 
சொந்தம்‌ கொண்டாடியவர்கள்‌ ஆகிய அத்தனை பேரும்‌ சீரியஸாக 
எடுத்துக்‌ கொண்டார்கள்‌. குடிசைகளின்‌ பிரச்னைகள்‌ பத்தி 
அதிக அக்கறை செலுத்தும்‌ பிரபல சமூக சேவகியின்‌ 
பிள்ளையாண்டான்‌ அவன்‌. ஒன்பது வயதில்‌ இத்தனை 
துருதுருப்பு, இத்தனை இன்டலிஜென்டாக யாரும்‌ இல்லை என்று 
அங்கு, வந்திருந்தவர்கள்‌ அத்தனை பேருமே சொன்னார்கள்‌. 
அதிலும்‌ தாஜ்‌ கோரமண்டல்‌ உட்பட பல நட்சத்திர ஹோட்டல்களில்‌, 
குடிசை வாழ்‌ மக்களின்‌ பிரச்னைகளை அலசி), 
புகைப்படக்காரர்களின்‌ வேலையில்லாத்‌ திண்டாட்டத்தைப்‌ 
போக்கும்‌ திருமதி. வளர்மதி நாகராஜனுக்கு அன்று சேவை செய்ய 
வந்தவர்கள்‌ போல்‌ அத்தனை முக்கியப்‌ புள்ளிகளும்‌ 
குழுமியிருந்தார்கள்‌. ஒரு சிலர்‌, தங்களின்‌ பிறந்த நாட்களும்‌ 
அன்றுதான்‌ என்றாலும்‌, குழந்தை ஆண்டை முன்னிட்டு 
வந்திருப்பதாகவும்‌ பீற்றிக்‌ கொண்டார்கள்‌. 

ஒருவகையில்‌ பார்த்தால்‌, இந்த நாட்டில்‌ வறுமை இல்லை 
என்று நினைப்பது போலவும்‌, இன்னொரு வகையில்‌ பார்த்தால்‌, 
. ஏழ்மையைக்‌ கிண்டல்‌ செய்வது போலவும்‌, கட்டிளம்‌ பெண்களின்‌ 
முகங்களைவிட பளபளப்பாக இருந்த மொஸாயிக்‌ தவிர, நிலத்தில்‌ 
மண்வெட்டும்‌ போது, தவறிப்‌ பட்ட மண்வெட்டியால்‌ நீருற்றுப்‌ போல்‌ 
ஒளிரும்‌ விவசாயியின்‌ ரத்தம்‌ போல்‌ பளிச்சென்று கண்சிமிட்டியது. 
கம்பீரமான காம்பவுண்ட்‌ சுவருக்கு உள்ளே, கன கம்பீரமான 
அந்த பங்களாவில்‌ (ஷாமியானா! பந்தல்‌. தேவையில்லாத அளவுக்கு, 
பலவிதமான :டேய்களுக்கென்றே”' அமைக்கப்பட்டது போல்‌ 
தோன்றிய முன்‌ பகுதியில்‌, ஆடும்‌ நாற்காலியில்‌ ஆடாமல்‌ சிலரும்‌, 
ஆடாத நாற்காலியில்‌ ஆடிக்கொண்டு சிலரும்‌ அமர்ந்திருக்க, 
மிஸஸ்‌. ராமநாதன்‌, மிஸஸ்‌. மார்த்தாண்டன்‌ உட்பட பலரின்‌ 
மிஸஸ்கள்‌, பையன்‌ கேக்‌: வெட்டப்‌ போவதை “மிஸ்‌: பண்ண 
விரும்பாதவர்கள்‌ போல்‌, நெருக்கியடித்து நின்றார்கள்‌. 

சுவர்க்‌ கடியாரம்‌ ஏழுதடவை ஒலித்தபோது, ஹேப்பி பர்த்‌ 
டே' “மெனி மெனி ரிட்டன்ஸ்‌ ஆப்தி டே' என்று கடியார ஒவிக்குப்‌ 
போட்டியாக பிரமுகர்களும்‌, பிரமுகிகளும்‌ சத்தம்‌ போட்டபோது, 


56 பிறக்காத நாட்கள்‌ 





ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை மூன்று மணிக்குப்‌ 
பிறந்தாலும்‌, பிரமுகர்களின்‌ வருகைக்குச்‌ சாதகமாகவும்‌ காலைக்‌ 
குளிரை முன்னிட்டும்‌, ஏழு மணிக்கு கேக்‌ வெட்டுவதற்காக, 
பாலியெஸ்டர்‌ துணியோடு பாதி வீங்கிப்‌ போனவன்‌ போல்‌ 
தோன்றிய குமார்‌, கேக்கில்‌ வைக்கப்பட்டிருந்த ஒன்பது 
மெழுகுவர்த்திகளையும்‌ ஊதிவிட்டு, ஒரு கத்தியை எடுத்து, 
வெட்டிய போது கரவொலி எதிரொலிக்க, அதற்கு 
சளைக்காதனபோல்‌ ரேடியோகிராமில்‌ “மன்னவன்‌ பிறந்தானடி' 
என்ற பாட்டு ஒலித்தது. 

மூன்று மணிக்குப்‌ பிறந்த பையனின்‌ பிறந்த நாளைக்‌ 
கொண்டாட ஏழு மணிக்கு வந்த உறவினர்களுக்கு உண்ணக்‌ 
கொடுக்க அதிகாலை இரண்டு மணிக்கே வந்துவிட்ட காத்தாயி, 
தன்‌ பத்து வயதுப்‌ பையன்‌ முனுசாமியுடன்‌ சற்று ஒதுங்கி 
நின்றாள்‌. - பங்களாவில்‌ மொஸைக்‌ தரையைப்‌ பெருக்கித்‌ 
துடைத்துவிட்டு, நாற்காவிகளை வரிசையாகப்‌ போட்டு விட்டு, 
எவர்சில்வர்‌ தட்டுக்களை கழுவிவிட்டு, சமையல்காரருக்கு 
மைதாவில்‌ இருந்து சர்க்கரை வரை எடுத்துக்‌ கொடுத்து 
ஒத்தாசை செய்தவள்‌. அவள்‌ பக்கத்துக்‌ குப்பத்தில்‌ வாழ்பவள்‌ 
என்றாலும்‌, அவளும்‌ ஒரு வகையில்‌ “பங்களாகாரிதான்‌” 
பயனற்றதாகக்‌ கருதப்படும்‌ இரவுப்‌ பொழுதை மட்டுந்தான்‌ 
குடிசையில்‌ கழிப்பவள்‌. பயனுள்ள பகல்‌ பொழுதை, பங்களாவில்‌: 
செலவிடூபவள்‌. பாத்திரம்‌ தேய்ப்பதிலிருந்து எஜமாணருக்கு 
அலுவலகத்திற்குச்‌ சோறு கொண்டூ போவது, மாவ ஆட்டப்போவது 
குழந்தைகளைத்‌ தள்ளு வண்டியில்‌ வைத்துத்‌ தள்ளுவது, 
துணிமணிகளைத்‌ துவைப்பது முதலியவை, அந்த அரைப்‌ 
பங்களா வாசியான காத்தாயியின்‌ பொழுதுபோக்குகள்‌. 
அப்படிப்பட்ட காத்தாயி, தான்‌ பெற்ற பிள்ளைக்கு இப்படி ஒரு 
விழா இருந்திருந்தால்கூட, அப்படி மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டாள்‌. 
வாயெல்லாம்‌ பல்லாக, தன்‌ பையனின்‌ வலதுகைப்‌ பெருவிரலை 
இடதுகையால்‌ நெருடி விட்டூக்‌ கொண்டே நின்றாள்‌. ' 

அவள்‌ அங்கே நிற்பதை அபசகுனமாக நினைத்தோ அல்லது 
ஆக வேண்டிய காரியங்கள்‌ ஆக வேண்டுமென்று நினைத்தோ 
மிஸஸ்‌. வளர்மதி '*காத்தா!... இப்படி நின்னா என்ன மீனிங்‌? 
போய்த்‌ தட்டுக்கள்‌ கொண்டு வா: என்று சொன்னதும்‌, காத்தாயி 
உள்ளே ஓடினாள்‌. 


காகித உறவு 99 





ஒட்டுப்போட்ட அன்ட்ராயருக்குள்ளே கால்களையும்‌ ஏதோ 
ஒரு “காடி'த்துணிச்‌ சட்டைக்குள்‌ கைகளையும்‌ விட்டூக்‌ கொண்டு 
நின்ற முனுசாமி, மிஸஸ்‌ வளர்மதி ஏன்‌ தன்னைக்‌ கோபமாகப்‌ 
பார்க்கிறாள்‌ என்று புரியாமல்‌, அதே சமயம்‌, அந்தப்‌ பார்வைக்குப்‌ 
பயந்தவன்‌ போல்‌, பால்கனியைத்‌ தாங்கிப்‌ பிடிக்கும்‌ ஒரு 
தூணுக்கருகே மறைய முயற்சீ! செய்தான்‌. 

அவனுக்கு ஒரே ஆச்சரியம்‌. நாற்காலியில்‌ கம்பீரமாக 
உட்கார்ந்திருக்கும்‌ அந்தப்‌ பையனை - குமாரை அதிசயமாகப்‌ 
பார்த்தான்‌. கையில்‌ மினுங்கும்‌ கடிகாரம்‌; கழுத்தில்‌ டாலர்‌ செயின்‌; 
கண்ணைக்‌ கூசவைக்கும்‌ சட்டை; வைர மோதிரம்‌, இவை 
போதாதென்று பலர்‌ கண்ணைக்‌ கவரும்‌ பார்சல்களில்‌ இருந்து 
பிரித்து எடுத்துக்‌ கொண்டிருக்க பொம்மைகள்‌; கஸ்டம்ஸில்‌ 
இருந்து வந்த துணிகள்‌ ஆகியவற்றை, கீழே விழப்‌ போவதுபோல்‌ 
தோன்றிய, தன்‌ அன்டிராயரைக்‌ கைகளால்‌ தூக்கிப்பிடித்துக்‌ 
கொண்டே கண்களைக்‌ குமார்‌ மீது நிறுத்தினான்‌. 

இதற்குள்‌ படகுக்கார்‌ ஒன்றில்‌ இருந்து ஒரு இளம்‌ 
பெண்ணும்‌, அவளின்‌ ஆண்‌ சோடியும்‌ இறங்கினார்கள்‌. ஒரு 
அழகான பார்சலை வைத்துக்கொண்டு அந்த நங்கை சிரித்தவாறு 
வந்தபோது குமார்‌, “குட்மார்னிங்‌ ஆன்டி: என்றான்‌. 

'ஆன்டிக்கும்‌' அவனிடம்‌ விளையாட ஆசை... 

குட்மார்னிங்‌ டியர்‌... கமாண்ட்‌ டெல்மா...ஒட்‌ இஸ்‌ இன்ஸைட்‌ 
தி பார்சல்‌?” 

“சாக்லேட்‌” 

இல்லே... டோன்ட்‌ ப்‌ ஏ கிளட்டன்‌.” 

“ஷாட்‌!” 

“நோ.” 

டாய்‌.” 

நோ... நோ...” 

யூ டெல்‌” 

. “நோ... யூ சுட்‌... டெல்‌ யுவர்‌ திங்‌. 

குமார்‌ யோசித்தான்‌. பிறகு “டாலர்‌ செயின்‌: என்றான்‌. 
ஆன்டி, கையைத்‌ தாக்கி “ஸரண்டர்‌' என்றாள்‌. உடனே 
எல்லோரும்‌ சிரித்தார்கள்‌. “குமார்‌ இஸ்‌ ஏ பிரில்யெண்ட்‌ பாய்‌” 


60 ப பிறக்காத நாட்கள்‌ 





என்று ஒருத்தி சொன்னபோது, மிஸ்டர்‌ நாகராசன்‌ *லைக்‌ ஹிஸ்‌ 
டாடி' என்றார்‌. உடனே மிஸஸ்‌ நாகராசன்‌ “நோபடி 'வில்‌ ப்‌லிவ்‌-” 
என்று சொல்ல எல்லோரும்‌ சிரித்தார்கள்‌. ஆன்டிக்காரி 
பார்சலைப்‌ பிரித்தாள்‌. அதற்குள்‌ ஒரு பார்சல்‌, அதைப்‌ பிரித்தால்‌ 
இன்னொரு பார்சல்‌; கடைசியில்‌ ஒரு ஆறுபவுன்‌ டாலர்‌ செயின்‌ 
கிடைத்தது. இவ்வளவு பெரிய பார்சலுக்குள்‌ ஒரு சின்னத்‌ தங்கச்‌ 
செயின்‌ இருப்பதைக்‌ கண்டுபிடித்த குமாரின்‌ இன்டலிஜென்சயை 
எல்லோரும்‌ பாராட்டிச்‌ சிரித்தபோது, ஒருவர்பின்‌ ஒருவராக, 
கார்களிலும்‌ ஸ்கூட்டர்களிலும்‌ வந்து கொண்டிருந்த “சிட்டி 
எலைட்கள்‌: குமாருக்கு, தந்தப்‌ பிள்ளையார்‌, செஸ்போர்ட்‌, “சிங்கிப்‌ 
பொம்மை: போன்ற சாமான்களை அவனிடம்‌ காட்டி, அவன்‌ 
அம்மாவிடம்‌ கொடுத்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. 

தூண்‌ மறைவில்‌ பாதி உடம்பை மறைத்துக்‌ கொண்டிருந்த 
முனுசாமிக்கும்‌ குமாருக்கு ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும்‌ 
என்று ஆசை. இந்த குமாரையும்‌ அவண்‌ இங்கிலீஸையும்‌ பார்த்து, 
கேட்டு, ரசிக்கும்‌ இந்தக்‌ கார்ப்பரேஷன்‌ பள்ளிப்பையன்‌ அவனை 
ஒரு செளக்கியதாருக்குரிய பெளவியத்துடன்‌ பார்ப்பான்‌. 
எதிர்காலத்தில்‌ ஐ.ஏ.எஸ்‌ ஆகிவிடுவான்‌ என்று இப்போதே 
அனுமானிக்கப்‌ பட்டிருக்கும்‌ குமாரும்‌, தன்‌ வயது ஏழைச்‌ 
சிறுவர்களை, அறிந்தோ அல்லது அப்பா அம்மாவால்‌ 
அறிவுறுத்தப்பட்டோ கம்பீரமாகத்தான்‌ பார்ப்பான்‌. ஒரு தடவை 
குடிசைப்‌ பையன்‌ கொடுத்த சாக்லேட்டை வாங்கியதற்காக, 
பெற்றோரிடம்‌ முதல்‌ முறையாக அடிபட்டிருந்தான்‌. இதனால்‌ 
ஏழைப்‌ பையன்களிடம்‌ பழகுவதற்கு அதுவே கடைசித்‌ 
தடவையாயிருந்தது. 

குமாரை, ஆச்சரியமாகப்‌ பார்த்த முனுசாமி தானும்‌ ஏதாவது 
கொடுக்க வேண்டும்‌ என்பதற்காக, லேசாக நகர்ந்தான்‌; நடந்தான்‌. 
பின்னர்‌ ஓடிப்போய்‌ நேற்றிரவு தம்பியிடம்‌ திருடிய ருந்த ஒரு 
நிலக்கடலை மிட்டாயை எடுத்து அதில்‌ படிந்திருந்த தூசியை 
வாயால்‌ ஊதிவிட்டு குமாரின்‌ கைக்குள்‌ திணித்தான்‌. எதிர்பாராத 
இந்நிகழ்ச்சியை மற்றவர்கள்‌ ஆதங்கத்துடன்‌ பார்த்தபோது, குமார்‌ 
அந்த மிட்டாயைத்‌ தூக்கி வீசி எறிந்துகொண்டே “டர்ட்டி 
&ஃபெல்லோ... கிவ்விங்‌ டர்ட்டி திங்‌' என்று சொல்லிவிட்டு 
அப்பாவைப்‌ பெருமையோடு பார்த்தான்‌. எந்தத்‌ 
தெருப்பிள்ளையாண்டானாவது எதையாவது கொடுத்தால்‌ 


காகித உறவு 61 





இப்படித்தான்‌ எறிய வேண்டும்‌ என்று ஒரு முறை செய்முறைப்‌ 
பயிற்சி மூலம்‌ விளக்கிக்‌ காட்டிய தந்தை இப்போது கைகளைப்‌ 
பிசைந்த போது, குமார்‌ தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற 
அவனநியாத பழமொழியை நிறைவேற்றிய திருப்தியில்‌ 
அம்மாவையும்‌ திருப்திப்படுத்த வேண்டும்‌ என்ற லட்சிய உந்தவில்‌ 
டர்ட்டிஃ்பெல்லோ... கெட்‌ அவுட்‌ மேன்‌” என்று கத்தியபோது, பலர்‌ 
புரியாமலும்‌ கொஞ்சம்‌ சங்கடமாகவும்‌ விழித்த போது, ஆன்டிக்காரி 
“ஐதிங்‌... நம்ம குமார்‌ ஐ.பி.எஸ்‌. சர்வீஸுக்குத்தான்‌, ஃபிட்‌', என்று 
சொன்னதும்‌ எல்லோரும்‌ சிரித்தார்கள்‌. பலர்‌ ஸ்டேட்மெண்டை 
வழிமொழிந்தார்கள்‌. 

“எஸ்‌...எஸ்‌ இவனுடைய டெம்பரமெண்டுக்கு போலீஸ்‌ 
வேலைதான்‌ லாயக்கு” 

“போலீஸ்லயும்‌... இவன்‌ லா அண்டு ஆர்டர்‌ பிராஞ்சுக்கு 
ரொம்பப்‌ பொருத்தம்‌... டர்ட்டி &பெல்லோன்னு எப்படி சவுட்‌ 
பண்றான்‌ பாருங்க!” 

“சவுட்‌ பண்ணும்போது... அவன்‌ முகத்தைப்‌ பார்த்தீங்களா? 
இப்பவே ஐ.பி.எஸ்‌. வாங்கிட்டவன்‌ போலில்ல?” 

எனக்கென்னவோ... ஹி வில்‌ மேட்‌ பார்‌ எ டாக்டர்னு” 
நினைக்கிறேன்‌?” 

்‌..... “பர்ட்டியா வரவங்களையே சகிச்சுக்க முடியலே இவனால, 
டர்ட்டி ஆபரேஷன்‌ களை பண்ண முடியுமா?” 

உடனே எல்லோரும்‌ சிரித்தார்கள்‌. குமாரைப்‌ பார்த்துப்‌ 
பெருமையோடு சிரித்தார்கள்‌. முனுசாமியைப்‌ பார்த்து எரிச்சலோடு 
சிரித்தார்கள்‌. முனுசாமிக்கு ஒன்றும்‌ புரியவில்லை. அவர்களது 
சொற்கள்‌ காதில்‌ விழுந்தாலும்‌ அவற்றின்‌ அர்த்தம்‌ மூளையில்‌ 
ஏறவில்லை. என்றாலும்‌ தன்னைப்‌ பரிகசிக்கிறார்கள்‌ என்பதைப்‌ 
புரிந்துகொண்டு தன்னைத்தானே தள்ளிக்கொண்டு, பொங்கிவந்த 
அழுகையை அடக்கிக்‌ கொண்டு சிறிது தூரம்‌ நடந்து, 
செர்வண்ட்ஸ்‌: குவார்ட்டர்ஸ்‌ அருகேபோய்‌ நின்று கொண்டான்‌. 

காத்தாயி வந்து விட்டாள்‌. அவளும்‌ இன்னும்‌ இரண்டும்‌ 
பேருமாகக்‌ கொண்டு வந்த தட்டுக்களை, விருந்தாளிகள்‌ 
வாங்கிக்கொண்டு, உதட்டில்‌ பட்டும்‌ படாமலும்‌ கடித்துக்‌ கொண்டு, 
ஜோக்குகளாக சிலவற்றைச்‌ சொல்லிக்‌ கொண்டு, சிரிப்புக்களாக 
உதடுகளைப்‌ பிதுக்கிக்‌ கொண்டு நின்றார்கள்‌. 

ஒரு மணி நேரத்துக்குப்‌ பிறகு, காத்தாயி, எஜமானியம்மாள்‌ 
கொடுத்திருந்த சில தின்பண்டங்களை முந்தானையில்‌ 


62 பிறக்காத நாட்கள்‌ 





வைத்துக்கொண்டு தீண்டப்படாதவன்போல்‌ ஏதோ ஒரு தார்மீகக்‌ 
கோபத்துடன்‌ நின்று கொண்டிருந்த முனுசாமியின்‌ அருகில்‌ வந்து 
இரண்டு லட்டூகளில்‌ ஒன்றை நீட்டினாள்‌. முனுசாமி அதை 
வாங்கி, குமார்‌ நின்ற திசையை நோக்கி வீசியடித்த போது, 
காத்தாயி ஒன்றும்‌ புரியாமல்‌ விழித்து விட்டுப்‌ பிறகு அதட்டினாள்‌. 

'ஒனக்குப்‌ பைத்தியமாடா' 

'அவன்‌ மட்டும்‌ நான்‌ கொடுத்த நிலக்கடலை மிட்டாய 
வீசலாமோ? அந்த லட்டையும்‌ வீசணும்‌” 

புரியும்படி சொல்டா? 

நானு ஆசையோட குமார்கிட்ட, மிட்டாய்‌ குடுத்தேன்‌. நீயே 
சொல்லும்மா எல்லாரும்‌ எதையோ கொடுத்தாங்கன்னு நானும்‌ 
குடுத்தா... அவன்‌... இங்லீசுல்ல திட்டிக்கிட்டு வீசுறான்‌... அல்லாரும்‌ 
என்னப்பார்த்து சிரிக்காங்கோ... அந்த லட்ட வீசும்மா' காத்தாயி 
புரிந்து கொண்டாள்‌. மகனிள்‌ ஆணைக்குக்‌ கட்டுப்பட்டவள்‌ போல்‌ 
எஞ்சியிருந்த எச்சிப்‌ பலகாரங்களை காக்கை, குருவி 
தின்னட்டும்‌ என்பது போல்‌, பங்களாவின்‌ காம்பவுண்ட்‌ சுவரில்‌ 
வைத்துவிட்டு மகனின்‌ தோளின்மேல்‌ கைபோட்டூக்‌ கொண்டே 
குடிசையைப்‌ பார்த்து நடந்தாள்‌. அழப்போவதுபோல்‌ இருந்த 
முனுசாமியின்‌ கன்னத்தை வருடிக்‌ கொண்டே, 

'கவலைப்படாதேப்பா... கண்ணு... ஒனக்கு அம்மா பிறந்த 
நாள்‌ வைக்கிறேன்‌: என்றாள்‌. 

“நிஜமாவா” 

“நிஜமாவே!' 

நான்‌ எப்பம்மா பிறந்தேன்‌?” 

மாசி மாதம்‌ மூணாந்தேதி' 

'மாசின்னா இங்கிலீஸுக்கு என்ன மாதம்மா?' 

ஏண்டா இல்லாத பொல்லாததைக்‌ கேக்குற...' 

“அடுத்த புதன்ல உன்னோட பிறந்த நாளு. 

“கேக்‌ வெட்டணும்மா' 

“வெட்டலாம்‌” 

புதுச்‌ சொக்கா! 


“கண்டிப்பா” 


காகித உறவு 63 





“ஏமாத்த மாட்டியே” 
“சும்மா வாடா! 


குடிசைக்குப்‌ போன காத்தாயி, சொன்னதை மறக்க 
முடியாத அளவுக்கு முனுசாமி அவகசைக்‌ குடைந்து 
கொண்டிருந்தான்‌. கொத்து வேலைக்குப்‌ போகும்‌ கணவனிடம்‌ 
கண்டிப்பாகச்‌ சொல்லிவிட்டாள்‌. “முனுசாமிக்கு. .றந்த 'நாள்‌ 
வைக்கணும்‌; கேக்‌ வாங்கிட்டு வா...” 


“ஒன்கு பைத்யமா மே” 
.பிள்ளக்கி பொறந்தநாள்‌ வைக்காட்டி பைத்தியம்‌ 
பிடிச்சடும்‌” ப 
.. அப்பன்‌ கோவணத்துல கிடக்கப்போ... பிள்ள இழுத்து 
மூடூன்னானாம்‌' 


“அந்தக்‌ கதயே வாணாம்‌. மொதலாளி கிட்ட என்னா 
சொல்லுவியே: - தெரியாது. குய்ந்தக்கி ஒரு ஷர்ட்‌ வாங்கணும்‌, 
கேக்‌ வாங்கணும்‌." 


“அப்புறம்‌.” 


“அப்புறமா? அப்புறம்‌ ஒனக்காச்சு... இல்லன்னா எனக்காச்சு... 
ஆமாம்‌!” 


மாசி மாதம்‌ இரண்டாம்‌ தேதி இரவில்‌ காத்தாயி புருஷன்‌ 
பதினைந்து ரூபாயைக்‌ கொண்டு வந்து கொடுத்து விட்டு, 
“இனிமேல்‌... பிறந்தநாள்‌... அது இதுன்னு சொன்னாக்கால்‌... 
மவளே.... அப்புறந்‌ தெரியுஞு்‌ சேசதி... பதினைஞ்சி ரூபாய 
குடுத்துக்கிட்ேடே மொதலாளி கேக்காத கேள்வில்லாம்‌ கேட்டுப்‌ 
புட்டான்‌? என்று எரிந்து விழுந்தான்‌. 


பேச்சு வார்த்தையைக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்த அவளின்‌ 
இரண்டாவது மகள்‌ காந்திமதி, “நான்‌ எப்போம்மா பிறந்தேன்‌! 
என்றாள்‌ சாதாரணமாக. காத்தாயியும்‌ சாதாரணமாகச்‌ 
சொன்னாள்‌. 


நீயா... இவன்‌ பிறந்து... சரியா... இரண்டாவது வருசத்துல... 
மாசி மாசம்‌ ஒண்ணாந்‌ தேதி பொறந்தே... ஒப்பன்‌ என்னை 
விட்டாத்தானே... ஏய்யா இப்படிப்‌ பார்க்கிறே வெக்கமா கீது... 
போய்யா... அந்தண்ட” 


64 பிறக்காத நாட்கள்‌ 





காந்திமதி அம்மாவின்‌ முன்னால்‌ வந்து ஒரு வெடிகுண்டை 
வீசினாள்‌. 

அப்படின்னா நேத்தே... எனக்கும்‌ பொறந்த நாள்‌ 
வச்சிருக்கணும்‌... ஏன்‌ வைக்கல... 

காத்தாயி, வாயடைத்து நின்றபோது, காந்திமதி கத்தினாள்‌. 

“எனக்கும்‌ வைக்கணும்‌, எனக்கும்‌ பாவாடை வாங்கணும்‌... 
அண்ணனுக்குச்‌ சொக்கான்னா... எனக்கு.. கவுன்‌ வேணும்‌.' 

இதற்குள்‌, இப்போதைக்குக்‌ கடைக்குட்டியான, ஆறு வயது 
வாண்டுப்‌ பயல்‌, “எனக்கும்‌... நாள்‌ வைக்கணும்‌' என்று 
சொல்லிவிட்டு செல்லமாகச்‌ சிணுங்கினான்‌. காந்திமதி, திட்ட 
வட்டமாகக்‌ கத்தினாள்‌. 

அண்ணனுக்கு முன்னாடி... நான்‌ பொறந்திருக்கேன்‌... 
எனக்குத்தான்‌ பொறந்த நாள்‌. 

காத்தாயியும்‌ அவள்‌ கணவனும்‌ வாயடைத்து நின்றார்கள்‌. 
எப்படியோ அழுத காந்திமதியும்‌, கம்பீரமாக தன்னைப்‌ பார்த்துக்‌ 
கொண்ட முனுசாமியும்‌, சிணுங்கிய வாண்டும்‌, இரவுக்குள்‌ 
அடைக்கலமானார்கள்‌. காலையிலேயே எழுந்து வேலைக்குப்‌ 
புறப்பட்ட கணவனை “இன்னிக்கு வீட்ல இருய்யா... முன்சாமி 
பிறந்த நாளும்‌ அதுவுமா' என்று இழுத்தபோது, “ஒனக்கு... 
பைத்யமா மே... இன்னிக்கு நாளக்கி மறுநாளக்கி காத்தாலயே 
வந்துடுறதாச்‌ சொன்னதால்தான்‌ - மொதலாளி கடன்‌ குடுத்தான்‌... 
சீக்கிரமாபோய்‌ லேட்டா வாரத... கடனுக்கு வட்டி... புரியுதாமே...” 
என்று சொல்லிவிட்டு, அதற்கு காத்தாயி பதில்‌ சொன்னபோது, 
அவன்‌ வீட்டில்‌ இல்லை. 

காத்தாயி, பதினைந்து ரூபாயை எடூத்துக்‌ கொண்டு 
புறப்பட்டாள்‌. “அடையாநில்‌ போய்‌, ஒரு ரெடி மேட்‌ சொக்கா 
வாங்கணும்‌, மூணு ரூவாய்க்கு... கேக்‌ வாங்கணும்‌... பத்து 
மெழுவர்த்தி வாங்கணும்‌ இந்த காந்திப்‌ வடர எப்படிச்‌ 
சமாளிக்கறது?' 

குழந்தைகளுக்கு, தெருமுனை ஆயாவிடம்‌ இருந்து ஆப்பம்‌ 
வாங்கிக்‌ கொடுத்துவிட்டு, குடிசைக்‌ கதவை முக்கால்வாசி 
சாத்திவிட்டு, அவள்‌ புறப்பட்டபோது, மோட்டார்‌ பைக்கில்‌ வந்த 
ஒருவர்‌, எஞ்ஜினை நிறுத்தாமலே கர்ஜிக்க வைத்துக்‌ கொண்டு, 


காகித உறவு 65 





“அமாம்‌ நீங்கள்லாம்‌ சோறுதான்‌ திங்கிறீங்களா?”” என்றார்‌, அவர்‌. 
அந்தக்‌ குடிசை மாதிரி பல குடிசைகளை வாங்கிப்‌ போட்டிருப்பவர்‌. 
காத்தாயியின்‌ வாடகைப்‌ பணத்தை வசூலிக்க வந்து அலுத்துப்‌ 
போனவர்‌. கண்ணடிக்குள்‌ விழாத அவளை வெளியேற்றிவிட்டு 
இன்னொரு :குடித்தனத்தை' கொண்டு வருவதில்‌ குறியாக 
இருக்கும்‌ அவர்‌, காத்தாயி வாடகை தரக்கூடாதென விரும்பினார்‌. 
அப்பதானே... விரட்டலாம்‌. 

உள்ளே இருந்து வெளியே வந்த முனுசாமி “பொறந்த 
நாள்‌ கேக்‌ வாங்க மறந்துடாதே... குமார்பய வெட்டுனதை விட 
பெர்சா இருக்கணும்‌' என்று சொன்னபோது, மோட்டார்‌ பைக்கர்‌ 
இடியெனச்‌ சிரித்துவிட்டு, “அடடே... நீங்க கூட பொறந்தநாள்‌... 
வச்சிட்டிங்களா? நாடு உருப்பட்டாப்லத்தான்‌... கேக்‌ வாங்க காசு 
இருக்கு... வாடகபாக்கியக்‌ கொடுக்க வக்கு இல்லியா... காத்தாயி... 
ஒன்னத்தான்‌... வாடகப்‌ பணத்தை தரப்போறியா... இல்லை... காலி 
பண்றியா?... இப்பவே ரெண்டுல ஒன்னு தெரியணும்‌.' என்றார்‌. 

காத்தாயி அந்த மனிதனை நிமிர்ந்து பார்த்தாள்‌. எட்டுத்‌ 
தெருவுக்கு கேட்கும்படியா கத்துற பயல்‌, ... *இவங்கிட்ட... எந்த 
வில்லங்கமும்‌... வேண்டாம்‌. 

“இந்தாங்க ஒங்க வாடகை! 

நான்‌ வந்துதான்‌ வாங்கணும்‌... நீ வந்து 
கொடுக்கப்படாதோ?”... 

“யோவ்‌; இத்தோட, நிறுத்திக்கோ இதான்‌ லிமிட்‌. 

மோட்டார்‌ சைக்கிளின்‌ முரட்டுத்தனத்திற்கு ஏற்றாற்‌ போல்‌ 
இருந்த அந்த ஆசாமி, அவளை ஒரு பொருட்டாக நினைக்காதவன்‌ 
போல்‌ சிரித்துக்‌ கொண்டே போய்விட்டார்‌. காத்தாயி உள்ளே 
வந்து முட்டிக்‌ கால்களில்‌ தலையைத்‌ தோய்த்தபோது, முனுசாமி 
கேக்‌ வெட்டணும்‌ வெட்டணும்‌ என்று அடம்‌ பிடித்தான்‌. 

அவ்வளவுதான்‌, காத்தாயிக்குக்‌ கண்மண்‌ தெரியாத கோபம்‌. 
முனுசாமியின்‌ முடியைப்‌ பிடித்துக்‌ கொண்டு, “நீ' கெட்ட 
கேட்டுக்கு... பொறந்த நாளா... பொறந்த நாள்‌...' என்று சொல்லிக்‌ 
கொண்டே முதுகிலும்‌ தலையிலும்‌ விளாசிய போது, அம்மாவின்‌ 
கவனம்‌ தன்‌ பக்கம்‌ விழாமல்‌ இருக்க, “எனக்கு பொறந்தநாள்‌... 
வாண்டாம்மா!... என்று காந்திமதி புலம்பினாள்‌. 


காக. 


66 ' ்‌ பிறக்காத நாட்கள்‌ 





்‌ அரைமணி நேரம்‌ ஆயிற்று. 

காத்தாயியின்‌ எஜமானியம்மாவின்‌ பங்களா வராந்தாவின்‌ 
எட்டில்‌ ஒரு பகுதி பரப்பளவுகூட இல்லாத அந்த குடிசையில்‌, 
வாசலில்‌ தலையை வைத்துக்‌ கொண்டு முனுசாமி தொலை 
தூரத்தை நோக்கிக்‌ கொண்டிருந்தான்‌. கன்னத்தின்‌ வழியாக 
வடிந்த கண்ணீர்‌ அங்கே சிறிது தேங்கி வண்டல்‌ மண்போல்‌ 
படிந்திருந்தது. அம்மாவிடமிருந்து ப்‌.றந்த நாள்‌ அடிகளை வாங்கிய 
நிகழ்ச்சிகளையும்‌. பங்களா: குமாருக்கு பலர்‌ கொடுத்த 
பரிசுகளையும்‌ ஒப்பிட்டுப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தானோ 
என்னவோ... எதையாவது கொளுத்த. வேண்டும்‌ என்று 
நினைத்தானோ என்னமோ... உலகம்‌ புரிந்துவிட்ட விவேகத்திற்கு 
அச்சப்பட்டு... அப்படி இருந்தானோ என்னமோ! கரங்களை மார்பில்‌ 
குறுக்கும்‌ நெடுக்குமாகப்‌ போட்டுக்கொண்டு, ஏதோ ஒன்று புரிந்தது 
போலவும்‌, புரியாதது போலவும்‌, ஒரு கண்‌ பருவத்தை மேலே 
தூக்கி இன்னொரு பருவத்தை கீழே சாய்த்து எதையோ சாய்க்கப்‌ 
போகிறவன்‌ போல்‌ உட்கார்ந்திருந்த அவனருகே - 

காத்தாயி போனாள்‌. அவன்‌ தலையைக்‌ கோதி விட்டாள்‌. : 
அம்மாவின்‌ நிலையைப்‌ புரிந்து கொண்டவன்‌ போல்‌ அந்த 
ஒன்பது வயதுப்‌ பையன்‌, அவள்‌ அப்படி தலையைக்‌ கோதிவிட 
அனுமதித்தபோது, காத்தாயியின்‌ கண்கள்‌ மேற்கொண்டும்‌ நீரை 
தங்களிடம்‌ இருக்க அனுமதிக்கவில்லை. அவள்‌ கண்ணீர்‌ 
முனுசாமியின்‌ பரட்டைத்‌ தலையை ஈரமாக்கியபோது, காத்தாய்‌ யால்‌ 
பேசாமலும்‌ விம்மாமலும்‌ இருக்க முடியவில்லை. 

“ரன்‌ ராசா... நம்பள மாதிரி ஏழைங்க... பொறந்த 
நாளுக்காவ சந்தோசப்படக்கூடாது. அழணும்டா... நமக்கு பொறந்த 
நாள விட... பிறக்காத நாளுதாண்டா முக்கியம்‌... கவலப்படாதடா 
என்‌ கண்ணா. நமக்கும்‌ ஒரு காலம்‌ பொறக்கத்தான்‌ போவுது. 
அது பிறந்தாதான்‌ நாம பிறந்ததுல அர்த்தம்‌ கீதுடா... அதுவரைக்கும்‌ 
நீ பொறக்கலன்னு நென்சி.... பொறுத்துக்கோடா.. என்‌ மவராசா.” 


௨ 9 


ஒரு ஏழைப்‌ வாண்ணின்‌ வாள்‌ 


அந்தச்‌ சிறுமி செல்லக்கிளிக்கு ஆங்கிலத்தில்‌ அதிர்ஷ்டம்‌ 
கெட்டதாகக்‌ கூறப்படும்‌ எண்ணளவு வயதிருக்கலாம்‌. குற்றால 
மலையில்‌ சற்று உயரத்தில்‌ மரக்‌ கொம்புகளை விறகுகளாக்கும்‌ 
பணியில்‌ அவள்‌ ஈடுபட்டிருந்தாள்‌. பாவாடையைக்‌ சற்றுத்‌ தூக்கி 
இடுப்பிலே சொருகியிருந்ததால்‌, அவள்‌ முழங்கால்களும்‌ சுள்ளி 
விறகுகளைப்‌ போலவே தோன்றின. ஜாக்கெட்‌ என்று கூறப்படும்‌ 
ஒட்டுக்‌ கந்தையின்‌ முன்‌ பக்கம்‌ இரண்டூ மூன்று 'ஊக்கு' களால்‌ 
பூட்டப்பட்டிருக்க, பின்‌ பக்கம்‌ பல பொத்தல்கள்‌; அவள்‌ விறகுகளை 
ஒடிக்கும்‌ கைகளைப்‌ பார்த்தால்‌ ஒரு கொம்பு இன்னொரு 
கொம்பை ஒடிப்பது போலவும்‌, அவள்‌ தனக்கு மாற்றுக்‌ கால்கள்‌ 
மாற்றுக்‌ கைகள்‌ தயாரித்துக்‌ கொண்டிருப்பது போலவும்‌ தோன்றும்‌. 
மனிதனுக்குப்‌ பயப்பட்டுப்‌ பதுங்கும்‌ புலியைப்‌ போல, புலிக்குப்‌ 
பயந்து தன்னை மறைத்துக்‌ கொள்ளும்‌ மானைப்‌ போல 
புதர்களுக்குள்‌ தன்னை மறைத்துக்‌ கொண்டே விறகுகளை 
ஒடித்தாள்‌. காட்டிலாகா அதிகாரிகள்‌ குறிப்பாக :ரேஞ்சர்‌' தான்‌ 
அவளுக்கு வேங்கைப்‌ புலி. ஒரு தடவை விறகுகளை 
ஒடிக்கும்போது விறகும்‌ கையுமாகப்‌ பிடிபட்டு, அந்த விறகுகளில்‌ 
ஒன்றாலேயே அடிபட்டு, அந்த விறகளவிற்கு முதுகில்‌ வீக்கம்‌ 
பெற்றவள்‌. ஆகையால்‌ ஒரு தடவை உணவைக்‌ கொத்தும்‌ காகம்‌, 
பல தடவைத்‌ திரும்பிப்‌ பார்ப்பது போல்‌ அவள்‌ ரேஞ்சரை 
எச்சரிக்கையாகப்‌ பார்த்துக்‌ கொண்டாள்‌. 

ஆயிற்று. கட்டு விறகு சேர்ந்து விட்டது. அவற்றைக்‌ காட்டுக்‌ 
கொடிகளால்‌ கட்டி மூன்று கிலோமீட்டர்‌ தொலைவில்‌ இருக்கும்‌ 
விறகுக்கடையாரிடம்‌ கொடுத்தால்‌ ஒரு ரூபாய்‌ கிடைக்கும்‌. அதை 
வைத்து அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில்‌ உள்ள வீட்டில்‌ 
படுக்கையில்‌ கிடக்கும்‌ அம்மாவுக்கு அரிசி .வாங்கிச்‌ சமைத்துப்‌ 
போடலாம்‌. 

மணி 11-30 ஆகிவிட்டது; இப்போது புறப்பட்டால்தான்‌ வீட்டிற்கு 
இரண்டூ மணிக்குப்‌ போய்‌ சேரலாம்‌. செல்லக்கிளி திடீரென்று 
சப்தம்‌ கேட்டுத்‌ திரும்பிப்‌ பார்த்தாள்‌. அய்யய்யோ ரேஞ்சரா?" 


66 ஒரு ஏழைப்‌ பெண்ணின்‌ வாள்‌ 


மருண்டு போன செல்லக்கிளி மகிழ்ச்சியடைந்தாள்‌ 
அழகான ஒரு கார்‌, டிரான்ஸிஸ்டர்‌ ஒலிக்க இரண்டூ குமரிப்‌ 
பெண்கள்‌ சிரிக்க, இரண்டு வாலிபர்கள்‌ குதிக்க, ஒர்‌ ஏழு 
வயதுப்‌ பாப்பா சிணுங்க, ஐம்பது வயதுக்‌ கண்ணாடி ஆசாமியும்‌, 
அவரை ஒரு காலத்தில்‌ கைப்பிடித்ததுபோல்‌ தோன்றிய நடுத்தர 
வயதுப்‌ பெண்மணியுடன்‌ இறங்குவதற்காகக்‌ குலுங்கி நின்றது. 
சீமை நாயும்‌ இருந்தது; இறங்கியது. 

செல்லக்கிளி கீழே நின்ற அவர்களையே பார்த்துக்‌ 
கொண்டுூ நின்றாள்‌. விறகைக்‌ கட்டினாள்‌. 

அருவிக்கு அப்பால்‌ ஒரு சிறு குன்றின்‌ அருகேயுள்ள 
பசும்‌ புல்தரையில்‌ வயதான அம்மாள்‌ ஒரு சிவப்புக்‌ கம்பளியை 
எடுத்துப்‌ போட்டாள்‌. கண்ணாடி மனிதர்‌ ஒவ்வொன்றாக எடுத்து 
வைத்தார்‌. கூடை நிறைய இருந்த ஆப்பிள்‌ பழங்கள்‌, தெர்மாஸ்‌ 
பிளாஸ்க்‌, உருளைக்‌ கிழங்கு, உப்புப்‌ புளி வகையறாக்களைக்‌ 
கொண்ட எவர்சில்வர்‌ பாத்திரம்‌; ஓர்‌ த டவ பாத்திரம்‌ - 
இன்ன பிற. 

பாத்திரங்களை வாங்கி வைத்த அம்மாவுக்குக்‌ கை 
வலித்திருக்க வேண்டும்‌. வாய்‌ வலிக்கும்படியாக கேட்போருக்கு 
காது வலிக்கும்படியாக ““ஏண்டி... அங்கேயே நின்னா எப்டி? 
கொஞ்சம்‌ ஒத்தாசை பண்ணுங்க...” என்று கத்தினாள்‌. 

வாலிபப்‌ பெண்களில்‌ குதிரை மாதிரி கொண்டையின்‌ 
பின்‌ பகுதி தூக்கி நிற்க, நின்றவள்‌ - மூத்தவளாக இருக்க 
வேண்டும்‌ - தன்‌ பங்குக்கு இரண்டூ எவர்சில்வர்‌ டம்ளர்களை 
எடுத்துக்‌ கொடுத்து :ஒத்தாசை' செய்தாள்‌. இன்னொருத்தி ஒரு 
பையனுடன்‌ உலவிக்‌ கொண்டிருந்தாள்‌. ஏழு வயதுப்‌ பாப்பா, 
அவர்களோடு போகலாமா அல்லது வயதானவர்‌ பக்கம்‌ போகலாமா 
என்று யோசித்து விட்டு, பின்பு கார்‌ பக்கம்‌ நின்ற நாயின்மீது 
லேசாக சாய்ந்து கொண்டு நின்றது. 

“ஸ்டவ்வ எடுத்துட்டு வாங்கோ!” 

கண்ணாடி மனிதரின்‌ முதுகு காருக்குள்‌ போனது. பிறகு 
டிக்கியைத்‌ திறந்தார்‌. ஸ்டவ்‌ இல்லை - இல்லவே இல்லை. “அங்க 
இருக்கான்னு பாரு” என்று டிக்கிக்குள்‌ இருந்தே குரல்‌ கொடுத்தார்‌. 


வயதான அந்தப்‌ பெரியம்மா பலங்கொண்ட மட்டூம்‌ கத்தினாள்‌ : 


காகித உறவு 69 


“ஒங்கள எடுத்து வைக்கச்‌ சொன்னேன்‌... வைக்கலியா? 
படிச்சிப்‌ படிச்சி" சொன்னேன்‌...!” 

வயதானவரும்‌ திரும்பிக்‌ கத்தினார்‌ : 

“நீ செக்‌! பண்றதுதானே?” 

ப ஆசைதீர சாப்பிடலாம்‌ என்ற தைரியத்தில்‌ உலவிக்‌ 
கொண்டிருந்த இளம்‌ “பெண்டுகள்‌: பாப்பாவின்‌ கையைப்‌ பீடித்து 
அதை நண்டு மாதிரி தூக்கிக்‌ கொண்டு முகாமருகே வந்தார்கள்‌. 

அதுக்குத்தான்‌... நான்‌ ரெண்டு ஸ்டவ்‌ எடுத்து வைக்கச்‌ 
சொன்னேன்‌... நீங்க ஒண்ணுகூட வைக்கல...” என்றாள்‌ இளம்‌ 
பெண்‌ ஒருத்தி. 

“பேசாம தென்காசில போய்‌ சாப்புடலாம்‌. இப்பவே பசிக்குது” 
என்றான்‌ ஒரு வாலிபன்‌. 

வயதான அம்மா, கண்ணாடிக்‌ கணவனை எரித்து விடுவது 
போல்‌ பார்த்தாள்‌. அவள்‌ வயிறு ஸ்டவ்‌ மாதிரி பற்றி எரிந்தது. 
என்ன செய்வதென்று எல்லோரும்‌ குழம்பிப்போய்‌ இருக்கையில்‌ 
செல்லக்கிளி விறகுக்‌ கட்டைச்‌ சுமந்துகொண்டு மலையிலிருந்து 
இறங்கிக்‌ கொண்டிருந்தாள்‌. 

கண்ணாடிக்காரருக்கு ஒரு ஐடியா உதித்தது. 

“அந்தப்‌ பொண்ணோட விறக வாங்கிச்‌ சமைக்கலாமா?” 

“விறகையா சமைக்கப்போறீங்க'' என்று ஒருத்தி “விட்‌' 
அடித்தாள்‌. வயதான அம்மா இந்த விட்டை ரசிக்கவில்லை. நல்ல 
பசி அவளுக்கு; அதோடு சமைக்கப்‌ போகிறவள்‌ அவள்‌ இல்லை. 

“ஆமா அதுதான்‌ நல்ல யோசன. விறகால சமையல்‌ 
பண்ணுனா ருசியா இருக்கும்‌.” 

பேச்சு மேற்கொண்டு நீள்வதற்கு முன்னதாக அந்தச்‌ சிறுமி 
அடிவாரத்திற்கு வந்துவிட்டாள்‌. அவர்களிடம்‌ ஏதோ பேச வேண்டும்‌ 
என்று நினைத்தாள்‌. பளபளப்பாக இருந்த அவர்களிடம்‌ 
பேசுவதற்குக்‌ கொஞ்சம்‌ வெட்கப்பட்டாள்‌. பின்னர்‌ விற்குக்‌ 
கட்டைச்‌ சிறிது தலைக்குள்ளேயே நகர்த்தி (பாலன்ஸ்‌: செய்து 
கொண்டே ஒரு தகவலை வெளியிட்டாள்‌. 

“பொழுது சாயறதுக்கு முன்னாலே போங்க. ஏன்னா, 
தண்ணி குடிக்க புலி, ஓநாயில்லாம்‌ அப்பவரும்‌. ஒரு தடவை 
குளிச்சிக்கிட்டிருந்த ஒரு ஆள ஒரு புலி கொன்னுட்டு...” 


70 ஒரு ஏழைப்‌ பெண்ணின்‌ வாள்‌ 





எல்லோரும்‌ ஒருவரையொருவர்‌ தள்ளிக்‌ கொண்டூ காரைப்‌ 
பார்த்து ஓடப்‌ போனார்கள்‌ சிறுமியால்‌ சிரிப்பை அடக்க 
முடியவில்லை. சிரித்து முடித்ததும்‌ சீரியஸாகப்‌ பேசினாள்‌ : 

“இப்ப வராது... பொழுது சாஞ்ச பொறவதான்‌ வரும்‌...” 

போன உயிர்‌ திரும்பியவர்களாய்‌ அந்தக்‌ கோஷ்டி மீண்டும்‌ 
உட்கார்ந்தாலும்‌ அனிச்சையாக மலைப்‌ பகுதிகளையும்‌ அருகே 
இருந்த ஒரு குகையையும்‌ பார்த்துக்‌ கொண்டு ஒருவரோடொருவர்‌ 
நெருங்கி நெருங்கி இருந்து கொண்டார்கள்‌. 

“ஏ” பொண்ணு, ஒன்‌ பேரு என்ன?” 

“சல்லக்கிளி” 

“ஒனக்கு சமைக்கத்‌ தெரியுமா?” 

“வீட்ல நான்தான்‌ சமைப்பேன்‌” 

“ஒன்ன கவனிச்சுக்கிறோம்‌. இந்த விறகுக்கும்‌ பணம்‌ 
கொடுத்துடுகிறோம்‌. இதோ அரிசி இருக்கு, எல்லாம்‌ இருக்கு... 
சமைச்சுக்‌ கொடுக்கிறியா?”' 

செல்லக்கிளி அந்த யோசனையைப்‌ பரிசீலனை செய்பவள்‌ 
போல்‌ தலைக்கு மேல்‌ இருந்த விறகுக்கட்டுக்கு மேல்‌ இரண்டு 
கைகளையும்‌ கொண்டு போய்ப்‌ பின்னிக்‌ கொண்டு நின்றாள்‌. 
அவள்‌ வீட்டில்‌ நாலு மணிக்குத்தான்‌ சாப்பாடு; இப்படி நாலு 
மணிக்குச்‌ சாப்பிடுவதால்‌ பகல்‌ சாப்பாட்டை முடித்தது மாதிரியும்‌ 
ராத்திரி சாப்பாட்டை முடித்தது மாதிரியும்‌ ஆகிவிடம்‌. “அம்மா 
பசியில துடிப்பா... இப்ப போனாதான்‌ நாலு மணிக்குச்‌ சோறு 
திங்கலாம்‌. ஏன்‌, இவியதான்‌ கவனிச்சக்குறேனு சொல்றாவள. 
நாமளுளு சாப்பிடலாம்‌, அம்மைக்கும்‌ கொண்டு போவலாம்‌. எதுல 
கொண்டுபோவ முடியும்‌? ஏன்‌ முடியாது? நாலு ஆல இலய 
எடுத்து ஈர்க்கால்‌ குத்திட்டா போச்சு. எனக்கும்‌ எங்கம்மாவுக்கும்‌ 
சாப்பாடு போட்டு விறகுக்கு ரெண்டு ரூவாயும்‌ சமையல்‌ கூலி 
ரெண்டு ரூவாயுமா நாலு ரூவா தருவியளான்னு கேக்கலாமா? 
சீச்சி... அதிகமா ஆசைப்படப்படாது. சமைக்கதுக்குச்‌ சாப்பாடு... 
விறவுக்கு மட்டும்‌ ஒண்ணர ரூவா தந்தாப்‌ போதும்‌. கண்டிஷனா 
பேசிக்கலாமா? சீச்சி...! பெரிய இடத்துல போயி கறார்‌ பேசுறது 
தப்பு. தருவாவ தருவாவ போயும்‌ போயும்‌ சோறு _போடுங்கன்னா 
பிச்சைக்காரி மாதிரி கேக்கது? ஏன்‌ கேக்கப்படாது?' 


காகித உறவு 71 





சிறுமி யோசித்துக்‌ கொண்டிருந்தபோது அவள்‌ 
வாயிலிருந்து வருவதை தேவ வாக்காக நினைத்துக்‌ கொண்டு 
அந்தப்‌ பசிக்‌ கோஷ்டி காத்து நின்றபோது கண்ணாடிப்‌ பெரியவர்‌, 
“சீக்கிரமா சொல்லு... நேரமாவுது'” என்றார்‌. 

அவள்‌ சீக்கிரமாகச்‌ சொல்லவில்லை. விறகுக்‌ கட்டை 
சீக்கிரமாக இறக்கி வைத்துவிட்டூக்‌ கொஞ்சம்‌ தொலைவில்‌ கிடந்த 
மூன்று பெரிய உருண்டையான கற்களை ஒவ்வொன்றாகக்‌ 
கொண்டு வந்து போட்டாள்‌ பிறகு மூன்றையும்‌ முக்கோண 
வடிவத்தில்‌ வைத்து “அண்டை'க்‌ கொடுத்து விட்டூ விறகுக்கட்டில்‌ 
இருந்த சுள்ளிகளை எடுத்து முருங்கைக்‌ காய்‌ அளவிற்கு ஒடித்து 
அடுப்புக்குள்‌ வைத்துவிட்டு அங்கேயும்‌ இங்கேயுமாகக்‌ கிடந்த 
சருகுகளைப்‌ பொறுக்கி சுள்ளிகளுக்கு மேலே வைத்துவிட்டுத்‌ 
“தீப்பொட்டி'” என்றாள்‌. ப 

61௱ ல்லாம்‌ ரெடி! 

ஏழு பேரடங்கிய அந்தக்‌ கோஷ்டியில்‌ அறுவர்‌ வட்டமாக 
உட்கார்ந்து கொண்டார்கள்‌. கண்ணாடிக்காரர்‌ வட்டத்துக்கு 
உள்ளே நின்றார்‌. சீமை நாய்‌ பெளவியமாகச்‌ சிறிது 
மரியாதையான தூரத்தில்‌ நின்றது. செல்லக்கிளி ஒவ்வொன்றாக 
எடுத்து வட்டத்திற்கு உள்ளே வைத்தாள்‌. எவர்சில்வர்‌ தட்டுக்கள்‌ 
வட்டமிட்டன. 

இதற்குள்‌ சாப்பாட்டுத்‌ தட்டிற்குள்‌ கையைக்‌ கொண்டு 
போன குதிரைக்‌ கொண்டைக்காரி, “அய்யய்யோ! என்‌ மோதிரம்‌... 
என்‌ மோதிரத்தைக்‌ காணல...'' என்று கத்தினாள்‌. 
உட்கார்ந்தவர்கள்‌ எழுந்தார்கள்‌. ஒவ்வொருவரும்‌ ஒவ்வோர்‌ 
இடத்தில்‌ தேடினாலும்‌ எல்லார்‌ கண்களும்‌ அருவிப்‌ பக்கம்‌ ஓடிப்‌ 
போய்த்‌ தேடிக்‌ கொண்டிருந்த சிறுமியையே சந்தேகமாகப்‌ 
பார்த்ததால்‌ அவர்களால்‌ சரியாகத்‌ தேடமுடியவில்லை. புலிக்குப்‌ 
பயந்து குறிப்பிட்ட தூரத்திற்கு மேல்‌ அவர்களால்‌ போகவும்‌ 
முடியவில்லை. 

“அய்யய்யோ... ஒரு பவுன்‌ மோதிரம்‌...ஆசையோட போட்ட 
மோதிரம்‌.” 

“லாட்ஜ்ல வச்சிட்டு வந்திட்டியா...?”” 

“இவா லாட்ஜ்ல கைய வச்சாலும்‌ வைப்பாளே தவிர... 
மோதிரத்தை வைச்சட்டு வரமாட்டா...” 


72 ஒரு ஏழைப்‌ பெண்ணின்‌ வாள்‌ 
“குமார்‌... இது விளையாட்டுக்குச்‌ சமயமா? அந்தப்‌ பக்கமாப்‌ 
பாரு.” 
“$ேவேலைக்காரக்குட்டி அமுக்கியிருக்கும்‌. அது முழியே 
சரியில்ல... தேடுகிறது மாதிரி பாசாங்கு பண்ணுது பாரு...” 
“அய்யய்யோ... என்‌ மோதிரம்‌... மோதிரம்‌ கிடைக்காம 
நகரமாட்டேன்‌.” 
“அதுக்குள்ள புலி வந்துட்டா...?'” 
சீ. என்ன விளையாட்டு இது? நல்லா தேடுங்க...” 
“அவாகிட்ட... இருக்கான்னு சோதனை போடலாம்‌...” 


அவர்கள்‌ செல்லக்கிளியைக்‌ கூப்பிட வேண்டிய அவசியமே 
எழவில்லை. அவளே, “பாறை மேல கிடந்தது'”' என்று 
சொல்லிவிட்டு மோதிரத்தை எடுத்துக்‌ கொண்டு வந்தாள்‌. 
குளிக்கும்போது மோதிரத்தைக்‌ கழற்றி வைத்ததை 
நினைவுபடுத்திக்‌ கொண்டே மோதிரக்காரி அந்தச்‌ சிறுமியைச்‌ 
சோதனைபோட யோசனை சொன்ன அவள்‌ ஒன்றும்‌ பேசாமல்‌ 
மோதிரத்தை வாங்கிப்‌ போட்டுக்‌ கொண்டாள்‌. _ 

பிக்னிக்‌ கோஷ்டி சாப்பாட்டில்‌ இறங்கியது. சிறுமி, 
பாத்திரத்தில்‌ இருந்த சோற்றைப்‌ பரிமாறப்‌ போனபோது அவள்‌ 
கைகளையும்‌ கால்களையும்‌ பார்த்து முகத்தைச்‌ சுழித்த பெரியம்மா, 
“ஐயாகிட்டே கொடு... அவரு பரிமாறுவாரு” என்று சொல்லிவிட்டுச்‌ 
செல்லக்கிளியின்‌ பொறுப்பைக்‌ கண்ணாடி ஐயாவுக்குப்‌ பதவிப்‌ 
பிரமாணம்‌ செய்து வைத்தாள்‌. 

உருளைக்கிழங்கு பொரியலாகவும்‌ முட்டைக்கோஸ்‌ 
கூட்டாகவும்‌ கையோடு கொண்டு வந்த *சிப்ஸ்‌” காரமாகவும்‌ 
கத்தரிக்காய்‌ - வாழைக்காய்‌ - முருங்கைக்காய்‌ சாம்பாராகவும்‌ 
தட்டுக்களில்‌ பாய்ந்தன. போதாக்குறைக்குக்‌ கண்ணைச்‌ சிமிட்டும்‌ 
“ஆம்லெட்(”கள்‌. 

செல்லக்கிளிக்கு அப்போதே சாப்பிடவேண்டும்‌ 
போலிருந்தது. அதே சமயம்‌ கொஞ்சம்‌ குறைவாகச்‌ சாப்பிட்டு 
விட்டு அம்மாவுக்கு அதிகமாகக்‌ கொண்டு போக வேண்டும்‌ என்று 
நினைத்தாள்‌. கை காலெல்லாம்‌ வேர்வை, தலையில்‌ அடுப்புக்கரி. 
இவ்வளவு அருமையான சாப்பாட்டைக்‌ குளிக்காமல்‌ சாப்பிட 
அவளுக்கு விருப்பமில்லை. அதோடூ, அவர்கள்‌ சாப்பிடுபோது 
அங்கே நிற்பது 'பெளசாகவும்‌” தோன்றவில்லை. 


காகித உறவு 72 





செல்லக்கிளி குளிக்கப்போனாள்‌. குளித்தாள்‌. உடம்போடு 
ஒட்டிக்‌ கொண்டிருந்த பாவாடையைப்‌ பிழிந்து வீட்டூக்‌ கொண்டு 
ஈர ஜாக்கெட்டோடு திரும்புவதற்கு அவளுக்குக்‌ கொஞ்சம்‌ 
வெட்கமாக இருந்தது. அதற்குள்‌, “ஏ பொண்ணு....! நாளைக்கு 
நல்லா குளிச்சிக்கலாம்‌... சீக்கிரமாவா'”' என்ற பெரியம்மாவின்‌ 
குரலைக்‌ கேட்டு, கிட்டத்தட்ட ஓடினாள்‌. :*ராத்திரிக்கும்‌ நாளைக்கும்‌ 
மறுநாளைக்கும்‌ சேர்த்து சாப்பிட வேண்டும்‌! இந்த மாதிரி சாப்பாடு 
இனிமேல்‌ எப்போ கிடைக்கப்‌ போவுதோ...?"! 

சாப்பிடக்‌ கூப்பிடுவதாக நினைத்துப்‌ போனால்‌ அவர்கள்‌ 
சாப்பிட்ட தட்டைக்‌ கழுவச்‌ சொன்னார்கள்‌. செல்லக்திளி 
ஜாடையாகப்‌ பாத்திரத்தைப்‌ பார்த்தாள்‌. அதில்‌ ஓர்‌ பருக்கை கூட 
இல்லை. எங்கேயாவது எடுத்து வைத்திருப்பார்களோ என்று 
கண்களைச்‌ சுழலவிட்டாள்‌. வெங்காயத்‌ தோல்களும்‌ 
கறிவேப்பிலை இலைகளும்‌ நைந்துபோன மிளகாய்களும்‌ சூப்பிப்‌ 
போடப்பட்ட முருங்கைக்காய்‌ துண்டுகளும்‌ கிடந்தன. ஏழு வயது 
பாப்பா மட்டும்‌ “அவளுக்குச்‌ சோறு போதுங்கோ” என்றது. உடனே 
கண்ணாடிக்காரர்‌ “வேலக்காரக்‌ குட்டிக்கு வைக்கலியா”” என்று 
கேட்டார்‌. அவர்‌ (டோன்‌: பாப்பாவைச்‌ சமாதானப்‌ படுத்துவதற்காக 
மட்டுமே சொல்வதுபோல்‌ ஒலித்தது. 

பெரியம்மா மட்டும்‌ சவிப்போடு சொன்னாள்‌ : 

“நல்ல பசி எல்லாம்‌ காணாததைக்‌ கண்டது மாதிரி 
சாப்புட்டூட்டுதுங்க இதே மாதிரி வீட்ல சாப்பிட்டா எவ்வளவு நல்ல 
இருக்கும்‌...? 

“நான்‌ சாப்பிடல, வசந்திதான்‌ ஒரு பிடி பிடிச்சிட்டா...”” 

“ஏய்‌! பொய்‌ சொல்லாத... பொய்‌ சொன்ன வாய்க்குப்‌ 
போஜனம்‌ கிடைக்காது." 

எல்லோரும்‌ வாய்‌ விட்டுச்‌ சிரித்தார்கள்‌ செல்லக்கிளிக்கோ 
வாய்விட்டு, மனம்விட்டு, உடம்பெல்லாம்‌ குலுங்கக்‌ குலுங்க அழ 
வேண்டும்‌ போவிருந்தது. 

பட்டினியால்‌ தவிக்கும்‌ அம்மாவூக்கு...? இப்பவே மூணு மணி 
இருக்கும்‌... அவள்‌ ஏகாங்கி மாதிரி மெல்ல நடந்தாள்‌. ஒரு குவியல்‌ 
உணவைத்‌ தின்று கொண்டிருந்த சீமை நாய்‌, அவள்‌ தன்னோடுூ 
போட்டிக்கு வரப்போகிறாள்‌ “என்று பயந்தது மாதிரி *லொள்‌” 
என்றது. 


7/4 ஒரு ஏழைப்‌ பெண்ணின்‌ வாள்‌ 


“ஏ பொண்ணு... சீக்கிரமா பாத்திரத்தைக்‌ கழுவு... புலி 
வந்துடப்‌ போவுது””என்‌ று பெரியவர்‌ சொன்னதும்‌, செல்லக்கிளி 
சுயநினைவுக்கு வந்தாள்‌. 

அவள்‌ தனக்குத்தானே சமாதான ஒப்பந்தம்‌ செய்து 
கொண்டாள்‌. 'பரவால்ல... சாப்புடாட்டா செத்தா போவோம்‌? ஒரு 
வகையில சாப்புடாமப்‌ போவது நல்லதுதான்‌. நிறைய துட்டுக்‌ 
கொடுப்பாங்க... அம்மாவுக்கு ஏதாவது வாங்கிட்டுப்‌ போவலாம்‌... 
ஒண்ணும்‌ குடி முழுவிப்‌ போவல... ஒண்ணே ஒண்ணுதான்‌... 
இப்டி தெரிஞ்சிருந்தா... தூர ஊத்துன கஞ்சித்‌ தண்ணிய 
குடிச்சிருக்கலாம்‌... பரவால்ல... காசு நிறையக்‌ கிடைக்கும்‌.' 

செல்லக்கிளி அவசர அவசரமாகப்‌ பாத்திரங்களைக்‌ 
கழுவினாள்‌. இதற்குள்‌ வாலிபப்‌ பையன்களில்‌ ஒருவன்‌ காரை 
ரிவர்ஸ்‌'ஸில்‌ கொண்டூ வந்தான்‌. பெரியவர்‌ டிக்கியைத்‌ திறந்தார்‌. 
முதலை மாதிரி வாயைப்‌ பிளந்து கொண்டிருந்த டிக்கி'க்குள்ளும்‌ 
கார்‌ ஸீட்டுக்குக்‌ கீழேயும்‌ எல்லா சாமான்களும்‌ ஏற்றப்பட்டன. 
பையன்‌, டிரைவர்‌ இருக்கையில்‌ உட்கார்ந்தான்‌. எல்லோரும்‌ 
ஏறினார்கள்‌ நாயுந்தான்‌. 

செல்லக்கிளி கைகளைப்‌ பிசைந்து கொண்டூ நின்றாள்‌. 
கண்ணாடிக்காரர்‌ பைக்குள்‌ கையை விட்டு ஓர்‌ ஐந்து ரூபாய்‌ 
நோட்டையும்‌ ஒரு ரூபாய்‌ நோட்டையும்‌ எடுத்தார்‌. சிறுமிக்குப்‌ 
பயங்கரமான மகிழ்ச்சி. 

பெரியவர்‌ முகத்தைச்‌ சுழித்துக்கொண்டே, “அஞ்சு ரூபா 
நோட்டா இருக்கே. ரெண்டு ரூபாய்‌ சேஞ்ஜ்‌ இருக்கா?” என்று 
கேட்டார்‌. 

எல்லோரும்‌ ;இல்லை' என்பதற்கு அடையாளமாகத்‌ 
தலையை 4மைனஸ்‌' மாதிரி ஆட்டியபோது கஞ்சியிலும்‌ படு 
கஞ்சியான பெரியம்மா, “ஒரு ரூபாய்‌ போதும்‌... விறருக்கு ஐம்பது 
பைசா. வேலைக்கு ஐம்பது பைசா... கொஞ்சமாவது 
பொறுப்பிருந்தா... ரெண்டு ரூபாய்‌ கொடுக்கணும்னு 
சொல்லுவீங்களா”? என்றாள்‌. 

“இது மெட்ராஸ்‌ இல்ல டாடி... அங்கதான்‌ விலைவாசி 
அதிகம்‌... ஓசில விறகு பொறுக்குகிற ஊரு இது... இதுங்களுக்கு 
இருபத்தஞ்சு பைசாவே லட்சம்‌ ரூபாய்‌ மாதிரி'”' என்றாள்‌ 
பொருளாதாரப்‌ பட்டதாரியான குதிரைக்‌ கொண்டை. 


காகித உறவு 75 





டிரைவர்‌-பையன்‌ காரை ஸ்டார்ட்‌ செய்து அதை நகர்த்திக்‌ 
கொண்டிருந்தான்‌. சிறுமியும்‌ காரோடூ சேர்ந்து நடந்தாள்‌. 
கண்ணாடிக்காரர்‌ ஒரு ரூபாய்‌ நோட்டை அவள்‌ கையில்‌ 
திணித்தபோது கார்‌ உறுமிக்கொண்டூ ஓடியது. 

சிறுமி அந்த ஒரு ரூபாய்‌ நோட்டையே வெவறித்துப்‌ 
பார்த்தாள்‌. பின்பு ஆத்திரம்‌ தாங்க முடியாமல்‌ அதைச்‌ 
சுக்குநூறாகக்‌ கிழித்துப்‌ போட்டாள்‌. இரைச்சலோடூ விழுந்து 
கொண்டிருந்த அருவி, ஒங்கி வளர்ந்த மரங்கள்‌, பச்சைப்‌ 
பசேலென்று பாசி படிந்த பாறைகள்‌, அங்குமிங்குமாகப்‌ பறந்து 
கொண்டிருந்த மைனாக்‌ குருவிகள்‌ அத்தனையும்‌ அவளுக்குப்‌ 
பொய்மையாகத்‌ தெரிந்தன. சிறிது நேரத்திற்குப்‌ பிறகு கிழித்துப்‌ 
போட்ட ரூபாய்ச்‌ சிதறல்களை ஒன்று சேர்க்கப்‌ பார்த்தாள்‌ 
முடியவில்லை. அம்மா முகத்தில்‌ எப்படி விழிப்பது? அவள்‌ பசித்‌ 
தீயை எப்படி அணைப்பது? 

செல்லக்கிளியின்‌ கண்களிலிருந்து இரண்டு சொட்டு 
இரண்டே சொட்டு உஷ்ணநீர்‌ கொதித்துக்கொண்டிருந்த பாறாங்கல்‌ 
ஒன்றில்‌ விழுந்த சமயத்தில்‌ - 

மெட்ராஸ்‌ கோஷ்டி போய்க்‌ கொண்டிருந்த அந்தக்‌ கார்‌ 
ஒரு பள்ளத்தில்‌ உருண்டூ விழுந்து குப்புறக்‌ கிடந்தது. 
பெட்ரோலில்‌ தீப்பற்றி கர்ரும்‌ அதற்குள்ளிருந்த சாமான்களும்‌ 
எரிந்து கொண்டிருந்தன. ஒரு ரூபாய்த்‌ தாளை. நீட்டிய 
கண்ணாடிக்காரர்‌ ஒடியாமல்‌ இருந்த ஒரே ஒரு கையால்‌ காருக்குள்‌ 
இருந்தவர்களை வெளியே இழுத்துப்‌ போட்டூக்‌ கொண்டிருந்தார்‌. 

பாப்பாவுக்கும்‌ நாய்க்கும்‌ தவிர எல்லோருக்கும்‌ பயங்கரமான 
அடி. 

“ஏழையின்‌ கண்ணீர்‌ கூர்வாளை ஒக்கும்‌? என்பார்கள்‌ 
அந்த வாள்‌, கார்‌ சக்கரங்களாகவும்‌ கண்ணாடிகளாகவும்‌ பாதாளப்‌ 
பள்ளமாகவும்‌ பெட்ரோல்‌ தீயாகவும்‌ மாறலாமோ? 


௨ ௦9 


பண்டாரம்‌ படுத்தும்‌ பாடு 


பண்டாரம்‌ மட்டும்‌ அரசியலில்‌ இருந்திருப்பானோயனால்‌, 
மிகச்‌ சிறந்த தலைவராகக்‌ கருதப்பட்டிருப்பான்‌. அந்த அளவிற்கு 
 *பிஸி' அவன்‌. இருப்பினும்‌ அலுவலகத்தில்‌ அக்கெளண்டண்டாக 
மாட்டிக்‌ கொண்டதால்‌, அவனுடைய :பிராடுத்தனம்‌” அடிக்கடி 
'சேலஞ்ஜ்‌” செய்யப்பட்டது. அதற்கு ஒரு வகையில்‌ அவனும்‌ 
காரணம்‌. 

பொதுவாகத்‌ தப்புத்‌ தண்டா செய்பவர்கள்‌ எல்லோரையும்‌ 
அனுசரித்துப்‌ போவார்கள்‌. எதிரிகளிடமும்‌ பல்லைக்காட்டி, 
அவர்களைத்‌ தன்‌ நண்பர்களாக்கிக்‌ கொள்ளப்‌ பார்ப்பார்கள்‌. 
ஆனால்‌ பண்டாரம்‌ இதற்கு விதிவிலக்கு. அவன்‌ செய்யாது, விட்டூ 
வைத்த எதுவும்‌ தப்புத்‌ தண்டாவாக இருக்க முடியாது. இந்த 
லட்சணத்தில்‌, அலுவலகத்தில்‌ உள்ள அனைவரிடமும்‌ எகிறுவான்‌. 
ஏடாகூடமாய்‌ நடந்து கொள்ளான்‌. 

அவனை எப்படியாவது எதிலாவது சிக்க வைக்கவேண்டும்‌ 
என்பதில்‌ பலர்‌ கண்ணாக இருந்தாலும்‌ கிரேட்‌ ஒன்‌ கிளார்க்‌ 
கிருபாகரன்‌ &ருத்தாக இருந்தான்‌. அலுவலகத்திலேயே 
நேர்மையானவன்‌ அவன்‌. நேர்மை இல்லாத எந்த நிர்வாகமும்‌, 
பொது மக்களுக்கு எதிரான ஸ்தாபனம்‌ என்று நினைக்கும்‌ 
“கிறுக்கன்‌” 

இதற்கிடையே சில “மைனர்‌: பிராடுகள்‌, அட்மினிஸ்டி 
ரேட்டிவ்‌ ஆமீசருக்கு எத்தனையோ மொட்டை பெட்டிஷன்களைத்‌ 
தட்டிப்‌ பார்த்தார்கள்‌. பலனில்லை, சொல்லப்போனால்‌ 
தனியறையில்‌ “ஏர்‌ கூலர்‌, இதங்‌ கொடுக்க சுழற்நாற்காலியில்‌ 
ஆடாமல்‌ அசையாமல்‌ உட்கார்ந்திருக்கும்‌ அட்மினிஸ்டிரேடிவ்‌ 
ஆபீசர்‌, நொடிக்கு நூறுதரம்‌ பண்டாரம்‌ பண்டாரம்‌' என்று காலிங்‌ 
பெல்லை அழுத்தாமல்‌ வெளியே வந்து கூப்பிட்டு அழைத்துப்‌ 
போகிறார்‌. முக்கியமான பைல்களை, இருவரும்‌ நீண்ட நேரம்‌ 
விவாதிக்கிறார்கள்‌. பண்டாரம்‌ சிரித்த முகத்தோடு வெளியே 
வருகிறான்‌. வந்ததும்‌ வராததுமாக “வார வட்டிக்கு... யாருக்குப்‌ 


பணம்‌ வேண்டும்‌?” என்று கேட்கிறான்‌. 


காகித உறவ 77 





'மொட்டையர்கள்‌' யோசித்தார்கள்‌. அட்மினிஸ்டிரேட்டிவ்‌ 
- ஆபீசரும்‌ அயோக்கியன்‌! பண்டாரத்துக்கு நெருக்கமான பெரிய 
அயோக்கியன்‌! ஆகையால்‌ இப்போது மொட்டைப்‌ பெட்டிஷன்கள்‌ 
எழுதுவதை நிறுத்தி விட்டார்கள்‌. ப 

மொட்டைப்பெட்டிஷன்‌ வரும்‌ போதெதல்லாம்‌ 
அட்மினிஸ்டிரேட்டிவ்‌ ஆபீசர்‌, பண்டாரத்தை வரவழைத்து, 
பெட்டிஷனிலுள்ள குற்றச்சாட்டுகளை, பைல்கள.£ வைத்து, 
விவாதிப்பதோடு, பண்டாரத்துக்கு எச்சரிக்கைமேல்‌ எச்சரிக்கை 
விட்டுக்‌ கொண்டிருக்கிறார்‌ என்பதும்‌, பண்டாரம்‌ அத்தனை 
உதைகளையும்‌ வாங்கிக்‌ கொண்டு வெளியே வரும்‌ போது, 
அவருக்கு, “கான்பிடன்ட்‌' மாதிரி ஓர்‌ அபிப்ராயத்தைக்‌ 
கொடுப்பதற்காகச்‌ சிரித்துக்‌ கொண்டு வருகிறான்‌ என்பதும்‌, 
அந்த அலுவலகத்தில்‌ யாருக்கும்‌ தெரியாது. 

மைனர்‌ பிராடுகள்‌, மேஜர்‌ பிராடுக்கு எதிராக மொட்டைப்‌ 
பெட்டிஷன்‌ வேலையைப்‌ புதுப்பித்தார்கள்‌. அட்மினிஸ்ட்டிரேட்டிவ்‌ 
ஆபீசருக்குப்‌ பதிலாக டில்லியில்‌ இருக்கும்‌ டைரெக்டருக்கு, 
பண்டாரத்தின்‌ சகல பிராட்‌ லீலைகளையும்‌ விலாசப்படுத்தி 
எழுதினார்கள்‌. மொட்டைப்‌ பெட்டிஷனுக்கு *வார வட்டிக்கு ஆபீஸ்‌ 
பணத்தை' விடுவதைத்‌ தலைப்புச்‌ செய்தியாகப்‌ போட்டு அனுப்ப்‌] 
வைத்தார்கள்‌. 

பதில்‌ இல்லை. 

அவர்கள்‌ சளைக்கவில்லை. ஒன்று... இரண்டு... நாலு.. 
எட்டு... 

மொட்டைப்‌ பெட்டிஷன்கள்‌ கத்தை கத்தையாகப்‌ பறந்தன. 
அவற்றை பழைய பேப்பர்க்காரர்களிடம்‌ போட்டால்‌, பேப்பர்காரர்‌ 
செய்கிற திருட்டுத்தனம்‌ தவிர்த்து எடை மூன்று கிலோ தேறும்‌. 

டில்லி டைரக்டரால்‌ இதற்குமேல்‌ பொறுக்க முடியவில்லை. 

இனிப்‌ பொறுத்தல்‌ தவறு. ப 

டைரக்டர்‌, கடுவன்‌ பூனையான டெபடி டைரக்டர்‌ 
தேஷ்முக்கை விசாரணைக்கு அனுப்பினார்‌. 

மடிசார்‌ வேட்டியுடன்‌ சாதாரணமாக வந்த தேஷ்முக்கை, 
“கஸ்டமர்‌' என்று நினைத்தனர்‌ அலுவலக ஊழியர்கள்‌. அவரைப்‌ 
பார்த்ததும்‌, அட்மினிஸ்டிரேட்டிவ்‌ ஆபீஸரே அறைக்கு வெளியே 


78 பண்டாரம்‌ படுத்தும்‌ பாடு 


வந்து அரை பல்டி அடிக்கப்‌ போகிறவர்‌ போல்‌ நெளிந்து 
நின்றதைப்‌ பார்த்துச்‌ சுதாரித்துக்‌ கொண்டார்கள்‌. 

“ஸார்‌ ஒங்க விஸிட்‌ ஸர்பிரைஸா இருக்கே” என்று 
சொன்ன அட்மினிஸ்டிரேட்டிவ்‌ ஆபீஸரைப்‌ பார்த்து அர்த்த 
புஷ்டியாகச்‌ சிரித்துக்கொண்டே, “ஹு இஸ்‌ பண்டாரம்‌? வேர்‌ 
இஸ்‌ பண்டாரம்‌? வாட்‌ இஸ்‌ பண்டாரம்‌?” என்று சத்தமாகச்‌ 
சொன்னார்‌ தேஷ்முக்‌. 

அட்மினிஸ்டிரேட்டிவ்‌ ஆபீசர்‌ அவரை அழைத்துக்‌ கொண்டு, 
பண்டாரத்தின்‌ முன்னால்‌ நிறுத்தி, “ஹி இஸ்‌ பண்டாரம்‌... 
அக்கெளண்டண்ட்‌ பண்டாரம்‌...” என்று சொல்ல நினைத்தாரே 
தவிர, நாக்கு நினைத்ததை ஒலியாக்கவில்லை. 

தேஷ்முக்‌ கடுவன்‌ பூனையானார்‌. பண்டாரம்‌ போட்ட 
“சல்யூட்‌'டைப்‌ பொருட்படுத்தவில்லை. 

“மிஸ்டர்‌ பண்டாரம்‌... வேர்‌ இஸ்‌ கேஷ்‌ பாக்ஸ்‌? கேஷை 
செக்‌ பண்ணணும்‌...” 

பண்டாரம்‌ வெலவெலத்துப்‌ போனான்‌. ஆபீஸ்‌ இம்ரஸ்ட்‌ 
பணம்‌ ஐந்நூறில்‌, கொஞ்சம்தான்‌ இருக்கு... ஐந்து ஆசாமிகளுக்கு 
வார வட்டிக்கு விட்டிருக்கிறான்‌. நாளைக்குத்தான்‌ சம்பள நாள்‌... 
பாவிப்‌ பயல்கள்‌, நாளை மறுநாள்தான்‌ கொண்டுூ வருவார்கள்‌. 

“கமான்‌... கிவ்‌ மீ தி கீ...” 

கிருபாகரன்‌ சிரித்துக்‌ கொண்டான்‌. பயலுக்கு வேணும்‌! 

“ஐ... ஸே... பண்டாரம்‌ சாவியைக்‌ கொடுங்க”... 

பண்டாரம்‌ கதி கலங்கிப்‌ போனான்‌. அதே சமயத்தில்‌ 
சாவியை கொடுங்க! என்ற வார்த்தை அவனுக்கு ஒரு 
சுபசகுனமாக ஒலித்தது. மூளையில்‌ ஏதோ ஒரு “ஸெல்‌' ஒரு 
பிிராடூத்தனத்துக்கு 'ஐடியா' கொடுத்தது. 

பண்டாரத்துக்குப்‌ புதுத்‌ தெம்பு பிறந்தது. 

நல்லா... பாருங்க... ஸார்‌... எதைத்‌ தொட்டாலும்‌ கேஷை 
மட்டும்‌ தொடமாட்டேன்‌. இந்தாங்க... சாவி... இந்தாங்க...” 

தேஷ்முக்‌ ஸீரியஸ்ஸாக முகத்தை வைத்துக்கொண்டு “கேஷ்‌ 
புக்கைட்‌” பார்த்தார்‌. 310-950 ரூபாய்‌ பாலன்ஸ்‌ இருக்க வேண்டும்‌. 


காகித உறவு 79 





தேஷ்முக்‌ சாவியை வைத்து பெட்டியைத்‌ திறந்தார்‌. 
_ பணத்தை வெளியே எடூத்து எண்ணப்போனார்‌. 

பண்டாரம்‌ சிரித்துக்‌ கொண்டான்‌. 

“ஒன்‌ மினிட்‌ ஸார்‌.. எண்ணுங்க. நான்‌ பாத்‌ ரூம்‌ போயிட்டு 
வந்துடறேன்‌... டயேரியா மாதிரி இருக்கு” தேஷ்முக்‌ பணத்தை 
எண்ணி முடித்தார்‌. 90-10 ரூபாய்தான்‌ இருந்தது. 220-80 
ரூபாயைக்‌ காணோம்‌. அவருக்கு ரத்தம்‌ கொதித்தது. இவனை 
விடக்கூடாது. எல்லோரும்‌ பண்டாரம்‌ வருகைக்காகக்‌ 
காத்திருந்தார்கள்‌. ஒரு சிலர்‌ அவனுக்காகப்‌ பரிதாபப்பட்டார்கள்‌. 
மாட்டிக்கிட்டானே! உத்தியோகம்‌ போயிடுமே... ஜெயிலுக்குப்‌ 
போகணுமே... பண்டாரம்‌ அரை மணி நேரம்‌ கழித்துச்‌ 
சாவகாசமாக வந்தான்‌. தேஷ்முக்‌ சீறினார்‌. 

“பண்டாரம்‌... 220 ரூபாய்க்குமேல்‌ எடுத்திருக்கே... ஒன்னை 
சஸ்பெண்ட்‌ செய்யப்‌ போறேன்‌... போலீஸில்‌ ரிப்போர்ட்‌ பண்ணப்‌ 
போறேன்‌...” 

பண்டாரம்‌ அசரவில்லை. 

“வாட்‌...? 310-90 ரூபாய்‌ சரியாய்‌ இருந்துதே...'” 

நான்‌ எண்ணிப்‌ பார்த்தேன்‌... 90-10 தான்‌ இருந்தது.” 

“எப்படி ஸார்‌ இருக்கும்‌? நீங்க வரதுக்கு ஐந்து நிமிஷத்துக்கு 
முன்னதான்‌ செக்‌ பண்ணினேன்‌... 310-90 இருந்தது.” 

“நீ இப்படி சொன்னா என்னய்யா அர்த்தம்‌?” 

“நீங்க எண்ணும்போதே... கொஞ்சத்தை எடுத்துப்‌ பைக்குள்‌ 
வச்சிருக்கலாம்‌. யார்‌ கண்டா?” 

“ஏய்‌... நீ வரம்பு மீறிப்‌ பேசறே... நான்‌ டெபுடி டைரெக்டர்‌ 
தேஷ்முக்‌... என்னையா திருடூனதா சொல்றே?” 

“ஸார்‌ நான்‌ நல்ல குடும்பத்தில இருந்து வந்தவன்‌... நான்‌ 
எடுத்திருப்பேன்னு நீங்கதான்‌ வரம்பு மீறிப்‌ பேசறீங்க...” 

“ஓ மை காட்‌... நீ இண்டர்நேஷனல்‌ பிராடாய்‌ இருப்பே 
போலிருக்கே...” 

“ஸார்‌ வார்த்தையை அளந்து பேசுங்க... கேஷ்‌ பாக்ஸில்‌ 
இருந்து பணத்தை எடுத்து... பைக்குள்‌ போட்டுக்கிட்டதுமில்லாமல்‌... 
என்மேலேயே பழி போடுறீங்களே...” 

“ஓய்‌... பணத்தை எடுத்ததை ஒப்புக்கொள்‌... இல்லேன்னா... 
போலீஸுக்கு போன்‌ பண்ணுவேன்‌...” 


80 பண்டாரம்‌ படுத்தும்‌ பாடு 





“நானும்‌ அதைத்தான்‌ சொல்றேன்‌... மரியாதையா... எடூத்த 
பணத்தை பாக்சிலே போடுங்க.. இல்லேன்னா 199-க்கு போன்‌ 
பண்ண வேண்டியது வரும்‌. அதோட மான நஷ்ட ஈடூ வழக்கு 
போட வேண்டியதிருக்கும்‌.” 

பண்டாரம்‌ தவிர, எல்லோருமே, அதிர்ந்து போனார்கள்‌. 
டெபடி டைரக்டர்‌ தேஷ்முக்‌ முக்கினார்‌. 

“ஏய்‌... என்னையா... ஒரு டெபுடி டைரக்டரைய்யா... திருடன்னு 
சொல்றே... நான்‌ சரியாத்தான்‌ எண்ணினேன்‌... சரியாத்‌...” 

“நீங்க எப்படி ஸார்‌ எண்ணலாம்‌?... என்னை எண்ணச்‌ 
சொல்லி இருக்கணும்‌... நீங்களே... எண்ணி எடுத்துக்கிட்டால்‌ 
நானா பொறுப்பு? நல்லவனுக்குக்‌ காலமில்லங்கறது சரிதான்‌...?” 

அட்மினிஸ்ரேட்டிவ்‌ ஆபீசர்‌ அதிர்ந்து போனார்‌. அலுவலக 
ஊழியர்கள்‌ பண்டாரத்தை மனதுக்குள்‌ வேண்டா வெறுப்பாகப்‌ 
பாராட்டினார்கள்‌. கிருபர்கரனுக்குக்‌ கிறுக்குப்‌ பிடிக்கும்‌ 
போவிருந்தது. தேஷ்முக்கின்‌ கண்களில்‌ நீர்‌ தேங்கிவி'ட்டது. கொட்ட 
வேண்டியதுதான்‌ பாக்கி. 

விஷயம்‌, டைரக்டருக்கு எஸ்‌.டி.டி.யில்‌ சொல்லப்பட்டது. 
அவரிடம்‌ பேசிக்கொண்டிருந்த தேஷ்முக்கின்‌ கண்ணீர்‌ 
டெலிபோனை நனைத்தது. 

பண்டாரத்தை ஒன்றும்‌ செய்ய முடியவில்லை. “பணத்தை 
செக்‌ பண்ணப்போகும்‌ அதிகாரிகள்‌ பணத்தைத்‌ தொடக்கூடாது. 
சம்பந்தப்பட்ட நபரை, பணத்தை எண்ணிக்‌ காட்டூம்படிக்‌ கூற 
வேண்டும்‌” என்‌ று டைரக்டரால்‌ சர்க்குலர்தான்‌ போட முடிந்தது. 

எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்ட டெபுடி டைரக்டர்‌ தேஷ்முக்‌. 
சீனியர்‌அதிகாரி அதோடு டைரெக்டருக்கு வேண்டியர்‌. ஆகையால்‌ 
அவர்மேல்‌ ஆக்ஷன்‌ எடுக்கப்படவில்லை. மாறாக, திரித்தவரைக்கும்‌ 
கயிறு என்ற மனோபாவத்தில்‌, தானுண்டு, தன்‌ பிள்ளைகுட்டிகள்‌ 
உண்டு என்று இருந்த அடமினிஸ்டிரேட்டிவ்‌ ஆபீசர்‌ தமது 
- பிள்ளைகுட்டிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு அந்தமான்‌ கிளைக்கு 
மாற்றப்பட்டார்‌. 

பண்டாரம்‌ தன்னை மாற்றினால்‌ கோர்ட்டில்‌ 
ரிட்போடப்போவதாக ஜாடை மாடையாகப்‌ பேசினான்‌. தானே 
“உண்மை விளம்பியாக மாறி, பண்டாரம்‌ ரிட்டுக்குத்‌ துடித்துக்‌ 
கொண்டிருக்கிறான்‌. அவனை -ஹிட்‌' பண்ணாதீர்கள்‌ என்று 
மொட்டைத்தனமாக எழுதிப்போட்டான்‌. பிறகு, பலனைப்‌ பற்றிக்‌ 
கவலைப்படாத கர்மயோகியாகக்‌ காட்சியளித்தான்‌. 


காகித உறவு 61 





இன்னொரு பெரிய வேலைக்கு அடிபோட்டுக்‌ கொண்டு 
இருந்த டைரக்டர்‌ “கோர்ட்‌ வழக்கு எதற்கு? என்று நினைத்துச்‌ 
சும்மா இருந்துவிட்டார்‌. 

கிருபாகரனால்‌ சும்மா இருக்க முடியவில்லை. 

பல்லைக்‌ கடித்துக்‌ கொண்டான்‌. கட்டூண்டான்‌; 
பொறுத்திருப்பான்‌. 


காலம்‌ மாறும்‌. 
ஆலம்‌ மாறி வந்தது. 


பண்டாரம்‌, லீவில்‌ இருக்கையில்‌, கிருபாகரன்‌, 
எஸ்டாபிளிஷ்‌ மெண்ட்‌ மெசக்ஷன்‌ கிளார்க்கோடு 
பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு மோசடி தெரியவந்தது. பண்டாரம்‌ 
ஆபீஸ்‌ விஷயமாக, குறிப்பிட்ட ஒருவாரம்‌ டெல்லியில்‌ 
இருந்திருக்கிறான்‌. அதற்காக :டி.ஏ” போட்டிருக்கிறான்‌. ஆணால்‌ 
அதே வாரம்‌ சென்னையில்‌ மருத்துவ சிகிக்சை பெற்றதாக 
மெடிக்கல்‌ பில்லும்‌ போட்டிருக்கிறான்‌ எப்படி?” 

கிருபாகரன்‌, மொட்டைப்‌ பெட்டிஷன்‌ எழுதவில்லை. முழுக்‌ 
கையெழுத்தோடு தட்டிவிட்டான்‌ ஒரு பெட்டிஷனை. 

டைரக்டர்‌ “விட்டுத்‌ தொலைக்கலாம்‌”” என்றார்‌. ஆணால்‌ 
சூடுபட்ட தேஷ்முக்‌ பண்டாரத்தைத்‌ தொலைக்கவும்‌” என்றார்‌. 
அதே சமயம்‌ தாமே விசாரணைக்குப்‌ போக மறுத்துவிட்டார்‌. 

இறுதியில்‌ சரியாகக்‌ கண்ணும்‌ தெரியாத காதுங்‌ கேட்காத 
ரிட்டயர்‌ ஆகும்‌ தருவாயில்‌ உள்ள இன்னொரு டெபுடி டைரக்டர்‌ 
படேசிங்கை, டைரெக்டர்‌ அனுப்பி! வைத்தார்‌. படேசிங்‌, மாலையில்‌ 
போகும்‌ ரயிலுக்காக, காலையிலே ஸ்டேஷனில்‌ போய்‌ நிற்கும்‌ 
டைப்பு; எல்லா ரிக்கார்டுகளையம்‌ எடூத்துக்‌ கொண்டார்‌. 
சென்னைக்குப்‌ போவதுதான்‌ அவரது கடைசி “அபிஷியல்‌ 
யாத்திரை. 

ஒரு வாரத்தில்‌, ஒரு ஞாயிற்றுக்‌ கிழமை 

சென்ட்ரல்‌ ஸ்டேஷனில்‌ தமிழ்நாடு எக்ஸ்பிரசில்‌ . முதல்‌ 
வகுப்பிலிருந்து இறங்கிய படே சிங்கை, நாலுமுழ வேட்டியும்‌, 
கிழிந்த சட்டையும்‌ போட்ட நபர்‌ ஒருவன்‌, “நமஸ்கார்‌ படேசிங்ஜி” 
என்றான்‌. 


ஜா: 6. 


92 பண்டாரம்‌ படுத்தும்‌ பாடு 





“அட்மினிஸ்டிரேட்டிவ்‌ ஆபீசர்‌ அனுப்பி! வைத்தார்‌... 
உங்களைப்‌ பார்க்கறதுக்கு ஸ்டேஷனுக்கு வரத்துடித்தார்‌... ஆணால்‌ 
அவர்‌ ஒய்புக்கு ஸீரியஸ்னு திருச்சியிலிருந்து தந்தி வந்தது. போய்‌ 
விட்டார்‌. டோன்ட்‌ ஒர்ரி ஸார்‌... ஒங்களுக்கு :ரூம்‌' புக்‌ 
பண்ணியாச்சு... ஊட்டி போறதுக்கு நீலகிரி எக்ஸ்பிரஸில்‌ டிக்கெட்‌ 
புக்‌ பண்ணியாச்சு... என்னையும்‌ உங்களோட வந்து... சுற்றிக்‌ 
காட்டச்‌ சொன்னார்‌... போகலாமா?” 

போனார்கள்‌. 

பியூனின்‌ அன்பினாலும்‌, அவன்‌ செலவழித்த பணத்தாலும்‌, 
படேசிங்‌ மகிழ்ந்து போனார்‌. பியூன்‌ என்றால்‌, இவனல்லவோ 
பியூன்‌! ஊட்டியிலும்‌ சரி, கோயம்புத்தூரிலும்‌ சரி, ஒரு நயா 
பைசா இதுவரை அவரைச்‌ செலவழிக்க விடவில்லையே, நிச்சயம்‌ 
அவனை “அட்டெண்டராக' புரமோட்‌ செய்ய வேண்டும்‌! 

ஞாயிற்றுக்கிழமை சென்ட்ரலில்‌ இறங்கி, அன்றே நீலகிரி 
எக்ஸ்பிரஸில்‌ ஊட்டி போய்‌, புதன்‌ கிழமை விசாரணைக்காக 
அலுவலகம்‌ வரப்‌ போவதாகவும்‌ ஆவன?” செய்யும்படியும்‌ தான்‌ 
எழுதிய “பர்ஸனல்‌' கடிதத்திற்கு அட்மினிஸ்டிரேட்டிவ்‌ ஆபீசர்‌ 
எடூத்துக்‌ கொண்ட முயற்சியை அவர்‌ பாராட்டியதோடு தாம்‌ 
ரிட்டயராவதால்‌ *காலியாகும்‌” இடத்திற்கு அவரைப்‌ போடும்படி 
சிபாரிசு செய்ய வேண்டுமென்றும்‌ நினைத்துக்‌ கொண்டார்‌. 

ஊட்டி போய்விட்டு, எம்‌.எல்‌.ஏ. .ஹாஸ்டலில ஓய்வெடுத்துக்‌ 
கொண்டிருந்த படேசிங்‌, பியூன்‌, :டீக்காய்‌' டிரஸ்‌ பண்ணிக்‌ 
கொண்டு வருவதைப்‌ பார்த்து வியந்தார்‌. அதுக்கென்ன? 
பியூன்னா, வெட்டியாய்த்தான்‌ இருக்கணுமா? டெர்லின்‌ கூடாதா? 

பியூன்‌ அவரை *பிரைவேட்‌' கார்‌ ஒன்றில்‌ அலுவலகம்‌ 
அழைத்துப்‌ போனான்‌. 

பண்டாரம்‌ சகிதமாய்‌ வந்த படேசிங்கைப்‌ பார்த்து. 
அட்மினிஸ்ட்டிரேட்டிவ்‌ ஆபீசர்‌ ஆச்சரியப்பட்டுப்‌ போனார்‌. 

அவர்‌ பேசுவதற்குள்‌, படேசிங்‌ முந்திக்‌ கொண்டே :ஐ ஆம்‌ 
ஸாரி மிஸ்டர்‌ கண்ணுச்சாமி! ஒங்க. ஒய்பு எப்படி இருக்காங்க?” 
என்று கேட்டு வைத்தார்‌. 

அட்மினிஸ்டிரேடிவ்‌ ஆபீசர்‌ கண்ணுச்சாமி திகைத்தார்‌ 
வந்ததும்‌, வராததுமாய்‌ 'ஒய்பைப்‌ பற்றிக்‌ கேட்கிறானே, இவனுக்கு 
அறிவிருக்கா? அவர்‌ மனைவி அழகிதான்‌ அதுக்காக...? 


காகித உறவு 83 





கண்ணுச்சாமியின்‌ இருக்கையில்‌ படேசிங்‌ உட்கார்ந்தார்‌. 
ஏதோ பேசப்‌ போனார்‌ அதற்குள்‌ பண்டாரம்‌ முந்திக்‌ கொண்ட 
“படேசிங்ஜி.. நான்தான்‌ பண்டாரம்‌... உங்களிடம்‌ தனியாய்ப்‌ 
பேசணும்‌... மிஸ்டர்‌ கண்ணுச்சாமியை வெளியே போகச்‌ 
சொல்றீங்களா?” என்றான்‌. 

டெபடி டைரக்டருக்கு லேசாக விஷயம்‌ புரியத்‌ துவங்கியது. 
கண்ணுச்சாமியைப்‌ போகும்படி அவர்‌ கண்களால்‌ ஆணையிட்டார்‌. 
சொந்த அறையில்‌ இருந்தே வெளியேற்றப்பட்ட வெங்கொடூமைச்‌ 
சாக்காட்டை, நினைத்துக்‌ கண்ணுச்சாமி வெம்பிக்‌ கொண்டு 
வெளியேறிய போது, பண்டாரம்‌ டெபுடியிடம்‌ முரட்டூுத்தனமாகப்‌ 
பேசினான்‌. 

“படேசிங்லி! நான்‌ தப்பு பண்ணியது உண்மைதான்‌. ஏன்‌ 
உங்களை மாதிரி மேலதிகாரிகளும்‌ தப்பு பண்றது மட்டுமில்லாமல்‌, 
தப்பு செய்கிறவர்களைத்தான்‌ விரும்புகிறீர்கள்‌ என்பதுதான்‌ 
காரணம்‌. டூர்‌ போனோமே, எந்த ஒரு இடத்திலேயாவது, எந்த 
ஒரு சின்னச்‌ செலவுக்காவது, எந்த ஒரு சமயத்திலேயாவது 
- நான்‌ கொடுக்கிறேன்னு சொன்னீங்களா? இல்லை. ஏன்‌? ஊரான்‌ 
வீட்டுக்காசுன்னா, எனக்கு மட்டுமல்ல... உங்களுக்கும்‌ ஆசை... 

“சரி விஷயத்துக்கு வருவோம்‌.... உங்களுக்கு நான்‌ 
செலவளிச்சதுக்கு நிறைய ஆதாரம்‌ இருக்கு. நீங்க அதை” 
விட்டூடுங்க நான்‌ “இதை விட்டுடறேன்‌. நீங்க கண்ணுச்சாமிக்கு 
எழுதின லெலட்டரைப்‌ பிரிச்சது தப்புதான்‌. ஆனால்‌ ஒரு 
தப்புத்தானே இன்னொரு நல்லதைக்‌ கொண்டு வருது?” 

படேசிங்‌ விட்டூ விட்டார்‌. பண்டாரம்‌ நேர்மையானவன்‌ 
என்றும்‌, அவன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்‌ 
இல்லை என்றும்‌, 'ரிப்போர்ட்‌' கொடுத்து விட்டார்‌. தேவையற்ற 
பிரச்னைக்கு மூலகாரணமான கிருபாகரன்‌ மீது நடவடிக்கை 
எடூக்க வேண்டும்‌ என்று சிபார்சு செய்தார்‌. 

கிருபாகரன்‌ 'கடவுளே...! இந்தப்‌ பண்டாரத்தை நீதான்‌ 
அடக்கணும்‌” என்று அலுவலகத்திலேயே சாமி கும்ப்‌ட்டான்‌. 

எப்படியோ, ' இப்போது பண்டாரம்‌ காட்டில்மழை பெய்கிறது. 

மொட்டைப்‌ பெட்டிஷன்‌ போடாமல்‌, முழுக்கையெழுத்துப்‌ 
போட்ட கிருபாகரன்‌ மீது நடவடிக்கை எடுக்கப்‌ போவதாகக்‌ கேள்வி. 


௨ 9 


ஒரத்தத்‌ துளிகள்‌ பாயிறாகின்றன 


அந்த வயக்காடு” முழுவதுமே, பொன்‌ பச்சை நிறத்தில்‌ 
மின்னியது. நிறத்தைக்‌ காட்டி, தன்‌ நிலையைக்‌ காட்டும்‌ 
நெற்பயிர்கள்‌, பச்சை நிறத்திலிருந்து, பொன்னிறத்துக்கு 
மாறத்துடிக்கும்‌ இறுதிநிலைக்கு இடைப்பட்ட இந்தப்‌ பொன்‌ பச்சை 
நிறத்தில்‌, பச்சை மதலைகள் போல்‌ நெற்கதிர்களும்‌, இப்போது 
சுட்ட சட்டி நிறத்தில்‌ சுடர்விட்டன. “மூணு கோட்டை' பாசனம்‌ 
கொண்ட அந்தக்‌ கிணற்றின்‌ சரல்‌ குவியலில்‌ இருந்து நிறம்மாறி, 
தன்‌ நிலையைக்‌ காட்டும்‌ நெற்பயிரை, நிலத்தின்‌ கேசங்கள்‌ போல்‌ 
தோன்றிய அந்த உணவுப்‌ பயிர்களைப்கபொதுப்படையாகவும்‌, தன்‌ 
மூணு மரக்கால்‌! விதப்பாட்டை குறிப்பாகவும்‌ 
பார்த்துக்கொண்டிருந்த வினைதீர்த்தான்‌, சரலில்‌ இருந்து இறங்கி, 
வரப்பு வழியாக, நடந்து தன்‌ நிலத்துக்குப்‌ போனான்‌. 

நாலடி உயரங்கொண்ட நெற்பயிர்களுக்கு, ஐந்தே 
முக்கால்‌அடி காவல்‌ தெய்வம்போல்‌, மீசையில்லாமலே 
கம்பீரமாகவும்‌, சிவப்பு நிறமில்லாமலே கவர்ச்சியாகவும்‌ தார்மீக 
ஒளியுடனும்‌, சட்டை போடாமலே, சட்டை கழட்டிய பாம்புபோல்‌ 
மேனி மினுக்கும்‌ வினைதீர்த்தான்‌, வயலை மெய்மறந்து 
பார்த்துக்கொண்டு நின்றான்‌. பின்பு பலமாக வீசிய காற்றில்‌, 
நெற்பயிர்கள்‌ தோகை விரித்தாடி, தங்கச்‌ சரட்டில்‌ தொடுக்கப்‌ 
பட்ட முத்துக்கள்‌ போலவும்‌, 'மசக்கையான? பெண்‌ போலவும்‌, 
நெற்கதிர்கள்‌ சாய்ந்து நிமிர்ந்தன. குலுங்காமல்‌ அசைந்த நெற்பயிர்‌ 
ஒன்றை கைகளால்‌ வருடிவிட்டூுக்‌ கொண்டு, கரும்பச்சை 
புடவைக்கு, பச்சைக்‌ கரைபோல்‌ தோன்றிய அருகம்புல்‌ மொய்த்த 
வரப்பில்‌ உட்கார்ந்து, ள்தையோ யோசித்துக்கொண்டிருப்பவன்‌ 
போலவும்‌, எதையுமே யோசிக்காத யோகி போலவும்‌, குத்துக்கால்‌ 
போட்டு உட்கார்ந்திருந்தான்‌. பின்னாவிருந்து வெட்டூக்கிளிகள்‌ 
ட. தாவுவதை வைத்து யாரோ வருவதைச்‌ சத்தம்‌ தடையம்‌ 
இல்லாமலே புரிந்து கொண்டு, திரும்பப்‌ பார்த்தான்‌. 

அந்த பாசனத்தில்‌, “மூணு மரக்கால்‌” தவிர, அதாவது 
இவனுடைய இத்தச்‌ சுண்டைக்காய்‌ நிலத்தை தவிர்த்த பூசணிக்காய்‌ 
பகுதிக்கு ஏகபோக உரிமையாளரான வீராசாமி, மோதிரக்‌ கையை 
நீட்டிக்‌ கொண்டே வந்தார்‌. வயதைக்‌ கருதியும்‌, வசதியைக்‌ 
கருதியும்‌, வினைதீர்த்தான்‌ எழுந்தான்‌. 


காகித உறவு . கே 





“என்னடா... வெனதீர்த்தான்‌... எத தீக்கரதுக்குடா... 
யோசனையில... இருக்குற...” 

“ஒண்ணுமில்லை, மாமா! சும்மாத்தான்‌!” 

“அகத்தின்‌ அழகு... முகத்துல தெரியுன்னு சொல்றது 
தெரியாதாடா... ஒன்னப்‌ பாத்தா... நீ இங்க இருக்கது மாதிரியும்‌ 
தெரியல... இருக்க வேண்டியது மாதிரியும்‌ தெரியல...” 

“சும்மாத்தா...” 

“நானும்‌.. சும்மாத்தான்‌ கேக்கேன்‌... சும்மாச்‌ சொல்லு" 

வினைதீர்த்தான்‌ சிறிது தயங்கினான்‌. சிறிது நாணினான்‌. 
பிறகு அவரைப்‌ பார்க்காமலே நெற்பயிர்களைப்‌ பார்த்துக்‌ 
கொண்டு தயங்கித்‌ தயங்கியும்‌, பிறகு தானாகப்‌ பேசாமல்‌ வேறு 
யாரோ பேசுவது போலவும்‌ பேசினான்‌. 

“ஒண்ணுமில்லே... ஒரு கிறுக்குத்தனமான எண்ணம்‌ 
வந்தது... இந்த நிலத்தில்‌... நெல்ல... நானே... விதச்சேன்‌... 
நாலைஞ்சி வருஷமா அடமானத்துல இருந்த இந்தப்‌ பூமிய 
மீட்டி...ராவும்‌ பகலுமா உழச்சேன்‌... இப்போ அதுகூட... எனக்குப்‌ 
பெரிசாத்‌ தெரியல... இந்த நெல்‌ பயிருங்கள... முளைச்சதுல... 
இருந்து பார்த்துக்கிட்டு... வரேன்‌ எனக்கு... இதுல... சொந்தப்‌ 
பிள்ளைய மாதிரி தோணுது. இப்போ பாக்கையில்‌... இதுவள 
எப்படிக்‌ கஷ்டப்பட்டு வளத்தனோ... அது மாதிரி வளத்து... பத்து 
வயசில... பறிகொடுத்த... என்‌ மகன்‌ ஞாபகந்தான்‌ வருது... அந்த 
ஞாபகங்கூட பெரிசாத்‌ தெரியல... நானே வளத்த... இந்த நெல்‌ 
பயிர... இன்னும்‌ ரெண்டூ மாசத்துல.... நானே அறுக்கப்போறேன்‌. 
இத...நினைச்சிப்‌ பார்க்கவே... கஷ்டமா... இருக்கு...” 

வீராசாமி சிரித்தார்‌. குனிந்து ஒரு அருகம்புல்லை வேரோடு 
பிடுங்கி, தலைகீழாக வைத்துப்‌ பற்குத்திக்கொண்டிருந்தவர்‌, பல்‌ 
குத்துவதை விட்டு விட்டு, மோவாயை தூக்கி நெஞ்சை நிமிர்த்திச்‌ 
சிரித்தார்‌. சுயநினைவுக்கு வந்த வினை தீர்த்தான்‌ சங்கோஜமாக 
மன்றாடினான்‌. ்‌ 

“மாமா...நீரு நல்லாயிருப்பியரு... நான்‌ சொன்னதை ஊர்ல 
சொல்லவிடாதேயும்‌...அப்புறம்‌ நான்‌ தலைகாட்ட முடியாது... எல்லாப்‌ 
பயலுவளும்‌ என்னைப்‌ பார்த்துச்‌ சிரிப்பாங்க.... ஏற்கனவே... ஒரு 
. மாதிரி பார்க்கறானுக." 


66 ப இரத்தத்‌ துளிகள்‌ பயிராகின்றன 


வீராசாமி, இப்போது சிரிக்கவில்லை. கையில்‌ தொங்கிய 
அருகம்புல்லை கையால்‌ கசக்கிக்கொண்டே, அவனைப்‌ பார்த்தார்‌. 
பிறகு ஆறுதல்‌ சொன்னார்‌. 


“ஒன்‌ மனசு... இளுகுன மனசுன்னு, மாமாவுக்குத்‌ 
தெரியாதா.. ஊர்க்காரங்கதான்‌ “அவனுக்கு மனசு இளகுனது 
இல்ல... மூளை இளகுனதுன்னு சொல்லுதாங்க... சொல்லிவிட்டுப்‌ 
போகட்டும்‌” ப 

“எனக்கா மூளைக்‌ கோளாறு? நான்‌... எவன்‌... பெண்‌ 
டாட்டிய பிடிச்சி இழுத்தேன்‌... நீரே சொல்லும்‌” 

“போவட்டுண்டா... இந்த... பயிருங்கள... ஒன்கையால... 
பன்னருவாள வச்சி அறுக்க ஒனக்குச்‌ சங்கடமா இருந்தா... 
பேசாம... இந்த நிலத்தை மாமாகிட்டே குடுத்துடேன்‌.' 

வினைதீர்த்தான்‌, “மாமா, விளையாட்டுக்குப்‌ பேசுகிறார்‌' 
என்று நினைத்து, அவரை விளையாட்டுத்‌ தனமாய்ப்‌ பார்த்தான்‌. 
அவரும்‌ லேசாகச்‌ சிரித்தார்‌. வயலை விழுங்கிவிடுவது போல்‌ 
அவர்‌ பார்த்ததில்‌, இவன்‌ திடுக்கிட்டாலும்‌, விளக்கேற்றி வைக்கும்‌ 
மாமாவே, விளக்கை அணைக்கமாட்டார்‌ என்ற தைரியத்தில்‌ 
சிரித்தான்‌. வீராசாமியும்‌ விளைட்டுக்குச்‌ சொன்னவர்போல்‌, 
“எழுந்திருடா... காலங்கார்த்தால... உரத்தப்‌ போடுறத வட்டுப்புட்டு... 
தத்துவம்‌ பேசறான்‌... தத்துவம்‌” என்று சொல்லி விட்டுத்‌ தூரத்தே 
தெரிந்த ஒரு சிவப்புச்‌ சேலையைப்‌ பார்த்து, ஓடாத குறையாக 
நடந்தார்‌. 

நாலைந்து நாட்கள்‌ ஓடின. 

சீமா உரத்தை ஓர்‌ ஓலைப்பெட்டியில்‌ வைத்து, தோளில்‌ 
சாய்ந்து அணை கொடுத்தவாறு, வயலுக்குப்‌ போய்க்‌ கொண்டிருந்த 
வினைதீர்த்தானைப்‌ பார்த்ததும்‌, டிராக்டரை ஓட்டிக்கொண்டு 
வந்தவனை “நில்லுடா” என்று சொல்லி நிறுத்தி, பின்னார்‌ 
உட்கார்ந்திருந்த வீராசாமி வினைதீர்த்தானையும்‌ 
ஏற்றிக்கொண்டார்‌. நேரடியாகவே கேட்டார்‌. 

“என்னடா... நான்‌... சொன்னத யோசிச்சுப்‌ பார்த்தியாடா...” 

““ஒமக்கு... கோயில்கட்டி கும்பிடப்போறேன்‌ மாமா... 
இப்பல்லாம்‌... நீரு சொன்னது மாதிரி தத்துப்பித்துன்னு 
நினைக்கிறதில்ல... நெல்‌ பயிர... அழிச்சாலும்‌... நாமதான்‌ 


காகித உறவு 67 





அதிலிருந்தே... இன்னொன்ன உண்டாக்குறோமுன்னு நினைச்சி... 
மனச தேத்திக்கிட்டேன்‌” 

“நான்‌... அதச்‌... சொல்லலடா... ஒன்‌ வயல... மாமாவுக்கு 
குடுக்கச்‌ சொன்னேன்‌... யோசித்துப்‌ பாத்தியா?” 

“நீரு... என்ன சொல்றீரு?”” 

“அதாண்டா... ஒன்‌ நிலத்த தாறியான்னு கேட்டேனில்ல?'”” 

“மாமா... ஒமக்கே... இது நல்லா இருக்கா.” 

“என்னடா பவுசு பண்ணுற... இந்த மூணு மரக்கால்‌ 
விதப்பாட்ட வச்சிக்கிட்டு, என்னடா பண்ணப்போறே? கோட்ட கட்டப்‌ 
போறியாக்கும்‌... மாமாவுக்குத்‌ தந்தியான்னா எனக்குச்‌ 
சேந்தாப்போல இருக்கும்‌... டிராக்டர்‌ நிறுத்தறதுக்கு... வசதியா 
இருக்கும்‌.” 

“அதோட நான்‌ நடுத்‌ தெருவில... நிக்கதுக்கும்‌ வசதியா 
இருக்கும்‌...” 

“என்னடா... வாயி... நீளுது” 

“பின்ன என்ன மாமா... நிலத்த... ஒம்ம மச்சினங்கிட்ட 
நீரு சொல்லித்தான்‌... ஆயிரம்‌ ரூபாய்க்கு அடமானம்‌ வச்சேன்‌... 
பணத்த வச்சிக்கிட்டு... ஏதோ... சந்தைக்குச்‌ சந்தை போயி... 
மசாலா சாமான்கள்‌... வித்து... வயித்தக்களுவுனேன்‌... ஒம்ம 
மச்சினன்‌... அந்த மூணு மரக்கால்‌ விதப்பாட்டுல... நீரு நெல்லு 
போட்டா... கரும்பு போட்டும்‌ வரப்ப வெட்டியும்‌ அட்டூழியும்‌ 
பண்றாண்டா மாமாமவுக்காவது ஒன்‌ நிலத்தத்‌ திருப்புன்னு 
சொன்னதை வச்சி தோட்டத்த வித்து இதமீட்டுனேன்‌ இப்ப... 
அரசன நம்பி புருஷன... விட்டது மாதிரி தோட்டத்த விட்ட என்னை 
வயலையும்விடச்‌ சொன்னா என்னமாமா அர்த்தம்‌? நீங்க 
மட்டுந்தான்‌ வயலு வச்சிக்கணுமா? அப்படியாவது சர்க்காருல.. 
ஒரு சட்டத்தை போடச்‌ சொல்லும்‌." 

“ஒண்ணு கேட்டதுக்கு... ஒன்பது சொல்றியா... நீ எவ்வளவு... 
நாளைக்கி... வயல வச்சிருக்கன்னு பாத்துப்புடலாண்டா...'” 

“பாத்துப்புடலாம்‌... மாடக்கண்ணு... டிராக்டரை நிறுத்து... 
எனக்கு... இது வண்டில்ல... என்‌ பிணத்த சுமக்கிற ரதம்‌.” 

வினைதீர்த்தான்‌, “சீம' உர பெட்டியை பிடித்துக்‌ கொண்டே, 
கீழே குதித்ததில்‌ உரம்‌ மண்ணில்‌ சிதறியது. உரத்தை 


98 இரத்தத்‌ துளிகள்‌ பயிராகின்றன 


அள்ளப்போனபோது, டிராக்டர்‌ எழுப்பிய தூச), அவன்‌ கண்ணை 
மறைத்தது. 

ஒரு வாரம்‌ ஓடியது. 

வீராசாமியின்‌ “முப்பத்திரண்டு” மரக்கால்‌ விதப்பாட்டிலும்‌ 
துள்ளிக்‌ குதித்து நீர்‌ பாய்ந்தது. வயல்‌ முழுவதும்‌ நீர்பாய்ந்து 
விட்டதும்‌, பண்ணைப்பெண்‌ சகதி சகிதமான மண்வெட்டியை 
வைத்துக்‌ கொண்டு, “கொன்னுப்புடுவேன்‌' என்பதுபோல்‌ 
ஆட்டியபோது சரலில்‌ உட்கார்ந்து டிரான்ஸிஸ்டர்‌ ரேடியோவைக்‌ 
கேட்டுக்கொண்டிருந்த வீராசாமி, “இத்துடன்‌? என்ற வார்த்தை 
வந்த வானொலிப்பெட்டியை, மூடிவிட்டு, பம்ப்‌ செட்‌ அறைக்குள்‌ 
போய்‌, என்ஜினை *ஆப்‌' செய்துவிட்டு, கதவை மூடப்போனார்‌. 
அலறிக்கொண்டு வீந்தவன்போல்‌ தோன்றிய வினைதீர்த்தானை, 
கண்களால்‌ உருட்டிக்கொண்டே கதவை அங்குமிங்கும்‌ ஆட்டினார்‌. 

“எதுக்கு மாமா... ஆப்‌ பண்ணுறீயரு?”” 

“என்‌ என்ஜின ஆப்‌ பண்ண ஒன்கிட்ட கேக்கணுமா??... 

“மாமா ஒமக்கே இது நல்லா இருக்கா... என்‌ வயலுக்கு 
தண்ணி பாயாண்டாமா?” 

“ஒன்‌ வயலுக்கு... தண்ணி பாய்ச்ச நான்‌ என்ன... ஒன்‌ 
வேலக்காரனா... என்னடா உன்மனசில.. நினைச்சுக்கிட்டே.” 

“இப்படி பேசுறது நல்லா இல்ல மாமா... நல்லா 
நினைச்சிப்பாரும்‌... கமலக்கிடங்கு ஒமக்கும்‌... எனக்கும்‌ பொதுச்‌ 
சொத்து... அது இருந்தாத்தான்‌ நான்‌.... மாட்டை வச்சி... கமல 
அடிக்க முடியும்‌... மாடு வாங்கப்புறப்பட்ட என்கிட்ட என்ன 
சொன்னீயரு? “ஏய்‌... மூணு மரக்கால்‌ விதப்பாட்டுக்கு... என்‌ பம்ப்‌ 
செட்டுலயே... தண்ணி பாய்ச்சிக்க... கமலக்கிடங்க... மூடி, நான்‌ 
அதுல பயிர்‌ வைக்கேன்‌... ஒனக்கும்‌ தண்ணி கிடச்ச துமாதிரி 
ஆச்சு... எனக்கும்‌, கொஞ்சம்‌ நிலம்‌ கிடைச்சது மாதிரி ஆச்சுன்னு 
சொன்னீரு... இப்போ கமலக்‌ கிடங்கயும்‌ எடுத்துக்கிட்டு... பம்பு 
செட்டையும்‌ மூடுனா... என்னா மாமா அர்த்தம்‌?” 

“ஒன்‌ கமலக்‌ கிடங்கு பங்கு எனக்கு வேண்டாம்‌... ஒனக்கு 
அதுல... மூணடி வரும்‌... தாராளமா எடுத்துக்க...” 

“மாமா... நீரு பேசறது நியாயமில்ல...”” 

“ஓஹோ ஹைகோர்ட்‌ ஜட்ஜ்‌ சொல்லிட்டியளோ... சரியாத்தான்‌ 
இருக்கும்‌... நீ... ஏமுழா... யல்லைக்காட்றே இந்தா... கதவை மூடு” 


காகித உறவு 69 





பண்ணைப்பெண்‌, வினைதீர்த்தானுக்குப்‌ பரிதாபப்பட்டுக்‌ 
கொண்டும்‌, வீராசாமிக்குப்‌ பயந்து கொண்டும்‌, கதவை மூடப்‌ 
போனபோது, வினைதீர்த்தான்‌ சுயமரியாதையை விட்டுவிட்டே 
மன்றாடினான்‌. 

“மாமா... ஒம்ம காலுல... வேணுமுன்னாலும்‌ விழுறேன்‌... 
இப்டிப்‌ பண்ணாதையும்‌... இன்னும்‌ மூணு தண்ணி பாஞ்சால்‌ 
போறும்‌... மூணுகோட்டை நெல்லு கிடைக்கும்‌... தயவு செஞ்சி 
வயத்துல... அடிச்சிடாதயும்‌... பயிர்‌ பட்டுப்‌ போயிடும்‌... போட்ட 
பணமுல்லாம்‌... நாசமா போயிடும்‌... தயவு செஞ்சு... தயவு செஞ்சு.” 

“ஒனக்கு வளர்த்த பிள்ள... இந்தப்‌ பயிரு... அத 
ஒன்கையாலே... அறுக்காமல்‌ போறதுக்கு சந்தோஷப்படாம... இப்டி 
வெக்க மானம்‌ இல்லாம... எதுக்குடா... பிச்ச கேக்குற...” 

“கதவ... உடைக்க... அதிக நேரம்‌ ஆவாது மாமா...” 

எங்க... உடடா பார்க்கலாம்‌... இத உடச்சிட்டு நீ ஊர்ல 
இருந்துடுறத பார்த்துடலாம்‌. நாய்க்குப்‌ பிறந்த நாயே... ஏழா 
வள்ளி... வீட்டுக்குப்‌ போயி... நம்ம...மருதுவயும்‌.. பெருமாளயும்‌... 
அரிவாளோட வரச்‌ சொல்லுதா.. போரழா... ஏல நாய்க்கிப்‌ பிறந்த 
பயல நீ... ஒரு அப்பனுக்குப்‌ பிறந்தவன்னா... கதவ... உட்டா... 
பார்க்கலாம்‌.” 

வினைதீர்த்தான்‌, கூனிக்குறுகி நின்றான்‌. அந்த பம்பு 
அறையை இடித்து, அந்த ஆசாமியைப்‌ புதைக்க, அவனுக்கு அதிக 
நேரம்‌ ஆகாது. ஆனால்‌ பின்‌ விளைவு... அவனை நம்பியிருக்கும்‌ 
நாலைந்து பிள்ளைகளின்‌ கதி... வயதுக்கு வரும்‌ பருவத்துக்கு 
வந்திருக்கும்‌ அவர்‌ மகளின்‌ கதி... அதோடு... அவர்‌ குடும்பம்‌, 
சிறை போகாத குடும்பம்‌. நாற்பது வயதான அந்த உழவனின்‌ 
குடும்பம்‌ ஒரு சிவில்‌ குடும்பம்‌. 

என்ன செய்வது என்று புரியாமல்‌, தலையில்‌ கையை 
வைத்துக்‌ கொண்டு, தன்‌ வயலின்‌ பரப்பில்‌ உட்கார்ந்திருந்த 
வினைதீர்த்தான்‌, நாளைக்கு வாடிப்போகப்‌ போகிற பயிர்களுக்காக 
வாடி வதங்கியபடி, ஊர்‌ முகப்புக்குள்‌ வந்தபோது அங்கே சில 
வரவேற்பாளர்கள்‌ நின்றார்கள்‌. வீராசாமியின்‌ கோபசாமிகள்‌, 
உறவுக்குக்‌ கை கொடுக்கும்‌ கையாட்கள்‌ வினைதீர்த்தானின்‌ 
முன்னால்‌ வந்து ஒருவன்‌ வழிமறித்தான்‌. 


90 ப இரத்தத்‌ துளிகள்‌ பயிராகின்றன 


பம்பு செட்ட உடைப்பேன்னு எதுக்காவல சொன்ன? 
ஒன்னால உடைக்க முடியுமால...”” 


அவன்கிட்ட எதுக்குடா... வாய்ப்பேச்சு... கையால பேசுடா...” 


“ஏமுல... பதில்‌ பேச மாட்டாக்க? உடைக்கப்போற கையை 
ஏண்டா... மடக்குற... எங்க... அந்த... கைய... பாக்கலாமா?” 


“இன்னுமாடா... பேசிக்கிட்டு இருக்கீக... தூக்கிப்‌ போட்டு 
மிதிங்கல...”? 

இதற்குள்‌ கூட்டம்கூடி விட்டது. வினைதீர்த்தான்‌ அடிபடப்‌ 
போவதற்கு முன்னால்‌, நல்லவேளையாக நாலைந்து பேர்‌ 
கூடிவிட்டார்கள்‌. அடிபடப்‌ போனவன்‌ முறையிட்டான்‌. 

“நீங்களே சொல்லுங்க... கமலக்கிடங்க... எடூத்துக்‌ 
கிடுகிறேன்‌... நீ பம்புல.... தண்ணி பாய்ச்சுக்கன்னு சொல்லிட்டு... 
இப்போ... செட்ட... மூடுனா... நியாயமா... நீங்களே... சொல்லுங்க... 
நீங்க என்ன சொன்னாலும்‌... கட்டுப்படூறேன்‌."' 

அடிக்கப்‌ போனவர்கள்‌ மிரட்டினார்கள்‌. 

“நாங்க அப்படித்தான்‌ மூடுவோம்‌... நீ என்ன செய்யணுமோ 
செய்துக்க... வேணுமன்னா... கோர்ட்டுக்கு வேணுமுன்னாலும்‌ போ... 
அதவிட்டுப்புட்டு... அதை உடைப்பேன்‌... இத உடைப்பேன்னு... 
சொன்னியானா... உடப்புக்குள்ள போயிடுவே... ஜாக்கிரதையா 
நடந்துக்க. ஒன்‌ பெண்டாட்டி பத்திரம்‌...” 

மிரட்டியவர்கள்‌, கூட்டத்தைப்‌ பொருட்படுத்தாமல்‌ 
போய்விட்டார்கள்‌. கூட்டத்தில்‌ இருந்த ஒரு சில நீதிமான்கள்‌, 
வக்கீல்‌ படிப்பு படிக்க வேண்டிய அந்த ஆசாமிகள்‌, 
வினைத்தீர்த்தானை வேறுவிதமாகக்‌ கேட்டார்கள்‌. 

“ஒனக்கு... அறிவு எங்கடா... போச்சி... அவன்‌... ஏமாந்தா... 
ஆளையே... ஏப்பம்போடுகிற பய.. கமலக்கிடங்க... மூடக்கூடாதுன்னு 
சொல்ல வேண்டியதுதானா? குடுமியை பிடிக்கக்‌ குடுத்துட்டு... 
இப்ப வலிக்குதேன்னா.... என்னடா பண்ண முடியும்‌” 

வினைத்தீர்த்தான்‌ விம்மினான்‌. 

“மச்சான்‌... இப்ப நடந்ததுக்கு வழிசொல்லும்‌” 

“நீ... எங்கிட்ட கேட்டுக்கிட்டா... கமலக்கிடங்க குடுத்த? எடாத 
எடுப்பு எடுத்தால்‌ படாதபாடு பட வேண்டியதுதானே.” 


காகித உறவு 91 





“நான்‌ போட்ட பணமுல்லாம்‌ நாசமா... போயிடுமே... அவர்‌ 
நிலத்தக்‌ கேட்டாரு... நான்‌ மாட்டேன்னு சொன்னதுக்காவ... 
இப்படிப்‌ பண்றாரு... இது ஒங்களுக்கு தெரியமாட்டக்கே...”” 

“தெரியுதுடா... ஆனா... அதெல்லாம்‌... விவகாரமுன்னு 
வரும்போது... எடுபடாது... நீங்க, ஆயிரம்‌ பேசியிருந்தாலும்‌ 
சபையிலே நிக்காது, அவன்‌ பழிகாரப்‌ பயலாச்சே.” 

“பாத்துப்‌ பேசும்வே... அந்தக்‌ குடிகாரப்‌ பய வரான்‌... வாரும்‌ 
மாப்பிள்ள... சந்தைக்குப்‌ போயிட்டு . வாரியரோ... வீராசாமி 
மாப்பிள்ள... இந்த வினைதீர்த்தான்‌ பயல... ஒமக்குச்‌ ஜோடியா.... 
எப்படியோ... பெரிய மனசு பண்ணி தண்ணி விடும்‌... ஒழிஞ்சு 
போறான்‌” . ப 

வீராசாமி அவர்களை நிமிர்ந்து பார்த்தார்‌. இரண்டூ பேர்‌ 
கடன்‌ வாங்கியவர்கள்‌. மூவர்‌ கடன்‌ கேட்டுக்‌ கொண்டிருப்பவர்கள்‌. 
ஒருவர்‌ தன்‌ மகனுக்கு இவருடைய தயவில்‌ பஞ்சாயத்து யூனியனில்‌ 
வேலை வாங்கிவிடலாம்‌ என்று நினைப்பவர்‌. வீராசாமி 
அலட்சியமாகப்‌ பேசினார்‌. 

“தனக்குப்‌ போவத்தான்‌... தானம்‌... கிணத்துல தண்ணி 

வத்திக்கிட்டு வருது... என்‌ வயலுக்கே... தண்ணி பத்தல...” 


““இருந்தாலும்‌...நீரு... பெரிய மனசு வச்ச.” 

“அவன்‌ பம்பு செட்ட உடச்சி... எடுத்துக்குவானாம்‌ 
மவராசானா... எடுத்துக்கட்டும்‌”” 

“அப்படியா... சொன்னான்‌... கழுதப்பய... ஏல... பெரிய 
மனுஷனப்பார்த்து... அப்படியால கேக்கது... நாங்க... நியாயம்‌ பேச... 
முடியாதபடி... பண்ணிப்பிட்டு... இப்போ பாசாங்கு போடுதியாக்கும்‌... 
மாப்பிள்ள... நீரு... போவம்‌...” ப 

இரண்டு நாட்கள்‌ போயின. 

வினைதீர்த்தானின்‌, நெெற்பயிர்கள்‌ஏ சவலைப்‌ 
பிள்ளைகளாயின. நெற்கதிர்கள்‌ சுருங்கத்‌ துவங்கின. செடிகளின்‌ 
அடிப்பாகம்‌, உலரத்‌ துவங்கியது. அன்றைக்குத்‌ தண்ணீர்‌ 
பாயவில்லையானால்‌ வைக்கோல்கூடக்‌ கிடைக்காது. 


92 இரத்தத்‌ துளிகள்‌ பயிராகின்றன 


பம்ப்‌ செட்டை “ஆப்‌” செய்துவிட்டு, கதவை மூடிய 
வீராசாமியை வினைதீர்த்தான்‌ கண்கள்‌ குளமாகப்‌ பார்த்தான்‌. 
அவர்‌, அருகில்‌ போய்‌ நின்று கொண்டு கைகளைப்‌ பிசைந்தான்‌. 
தலையைச்‌ சொறிந்தான்‌. “மாமா” 

“ஒங்க... அத்தய... நான்‌ வச்சிக்கிட்டா இருக்கேன்‌... என்னை 
மாமான்னு சொல்லுத?” 

அடிக்கத்துடித்த கைகளை அடக்கிக்‌ கொண்டூ, கொதித்த 
கண்களைத்‌ தாழ்த்திக்‌ கொண்டு வீராசாமி, தன்‌ வயல்‌ பக்கம்‌ 
வந்தான்‌. பயிர்களைப்‌ பார்க்க பார்க்க, தன்‌ பத்து வயது மகன்‌ 
மரணத்துடன்‌ போராடிய காட்சி, அவன்‌ நினைவுக்கு வந்தது. 
அன்று கண்ணுக்குத்‌ தெரியாத எமனைச்‌ சபித்த அவன்‌ 
கண்ணுக்குத்‌ தெரிந்த இந்த எமனை, “பார்த்துட வேண்டியதுதான்‌" 
என்று மண்வெட்டியை எடுத்துக்கொண்டு புறப்படப்‌ போனபோது 
மாடக்கண்ணு மச்சான்‌ வந்தார்‌. பக்கத்து வயல்காரர்‌ “நாலு 
மரக்கால்‌” விதப்பாட்டில்‌ நாள்‌ முழுதும்‌ போராடுபவர்‌. 

“ஏமுல பித்துப்‌ புடிச்சி நிக்குற... என்‌ கிணத்துல... அர 
நாள்‌... இறவ எனக்குவரும்‌... அதுல... ரெண்டு நாழிய.. நீ... 
எடுத்துக்கடா... என்‌ வாய்க்கால்‌ தண்ணி ஒனக்குப்‌ பாயுமே...”” 

“மாடு... இல்லியே... மச்சான்‌...” 

“யாருகிட்டேயாவது கேளூ... என்‌ மாடூ கிழடு... அரநாள்‌ 
தாங்காது... மாடு கிடைக்காட்டா... இருக்கவே இருக்கு... என்‌ மாடு.” 


வினைத்தீர்த்தான்‌, கரையில்‌ போய்க்‌ கொண்டிருந்த 
வீராசாமியை, அலட்சியமாகப்‌ பார்த்தான்‌. பயிர்களை 
வாஞ்சையோடு பார்த்தான்‌. வாடகை “இறவைக்காக' நாலைந்து 
பேரைப்‌ பார்த்தான்‌. ஆசாமிகள்‌ நழுவி விட்டார்கள்‌. ஏதோ ஓரளவு 
தைரியமுள்ள ஒரு விவசாயி தன்‌ மாடுகளை தானே கொண்டு 
வந்து, தானே கமலை கட்டுவதாகச்‌ சொல்விவிட்டார்‌. வாடகை 
ஐந்து ரூபாய்‌ பெரிசில்லை. 

வீட்டுக்கு வந்த அல்னதத்தான்‌ மனைவி, இடிந்த 
முகத்தோடு வரவேற்றாள்‌. 

“மாடக்கண்ணு மச்சான்‌, தண்ணி தருவேன்னுட்டார்‌. கவலய 
விடு” 


காகித உறவு 93 





“தலவலி போயி... திருகுவலி வந்துட்டு...” 

“என்ன சொல்ற...” 

“இது... வீராசாமி சின்னையாவோட.. நிலமாமில்லா..."” 

“இன்னுமாழா... அவன்‌... ஒனக்குச்‌ சின்னையா...” 

“இந்த நிலத்துல இருக்க வீட்ட காலி பண்ணணுமாம்‌... 
நிலம்‌ அவங்களுக்கு வேணுமாம்‌... காலி பண்ணாட்டா... 
்‌ இடிப்பார்களாம்‌.” 

“யாரு சொன்னா?” 

“வீராசாமி மவன்‌ பெருமாள்‌ வந்துட்டுப்‌ போனான்‌. ஏன்‌ 
கவலப்படுறீரு... நாம இருபது வருஷமா குடியிருக்கோம்‌. யாரும்‌ 
எதுவும்‌ பண்ண முடியாது'' ப 

“நீ சொல்றது சரிதான்‌... வீராசாமி... இப்பதான்‌ குடிச 
போட்டேன்னு பிரிப்பான்‌. நாம கோர்ட்டுக்குப்‌ போவணும்‌. வக்கீலப்‌ 
பாக்கணும்‌.. அவனுக்கு வீட்டப்‌ பிரிச்சது எத்தனாவது சட்டத்துல.. 
குத்தமுன்னு சொல்லுறதுக்கே அம்பது ரூபாய்‌ குடுக்கணும்‌... 
குத்தத்த சொல்றதுக்கே இவ்வளவுன்னா... அத... நிரூபிக்கதுக்கு 
எவ்வளவு ஆவும்‌... நினைச்சிப்பாரு...'' 

“சுரி... முதல்ல சாப்பிடும்‌... பேசாம... அந்த 
குடிகெடுப்பாங்கிட்டே... நிலத்த குடூத்திருக்கலாம்‌”” 

வினைதீர்த்தான்‌ தூங்கவில்லை. மறுநாள்‌, வீராசாமியின்‌ 
எதிர்ப்புக்கு இடையிலும்‌ தான்‌ மனிதன்‌ என்பதை நிரூபிக்கும்‌ 
மாடக்கண்ணு மச்சானையும்‌, வாடகை இறவைக்காரரையும்‌ 
நெஞ்சார நினைத்துக்‌ கொண்டு, சும்மா படுூத்துக்‌ கிடந்தான்‌. 

காலையில்‌ எழுந்து, வயலுக்குப்‌ புறப்படப்போன அவனிடம்‌, 
வாடகை இறவைக்காரர்‌ வந்தார்‌. ்‌ 

“என்ன தாத்தா... இன்னுமா... வயலுக்குப்‌ போகல..." 

“சுண்டைக்காய்‌ கால்பணம்‌.. சுமகூலி முக்கால்‌ பணம்‌...” 

“என்ன தாத்தா சொல்றீரூ...”” 

“என்‌ பேரன்‌... மாடுங்கள... பத்திக்கிட்டு போயிருக்கான்‌... 
ஒரு பீடியை பத்த வைக்கதுக்கு... அவன்‌... நின்ன போது... ஒரு 


94 இரத்தத்‌ துளிகள்‌ பயிராகின்றன 


மாடு... வீராசாமியோட வைக்கோலுல ஒருவாய்‌ வச்சிட்டு... உடனே... 
அவன்‌ ரெண்டு மாட்டையும்‌ பவுண்டரில... பத்தி... அடச்சட்டான்‌...” 

“இது... வேணுமுன்னு நடந்திருக்கு... பரவாயில்ல... முன்சீப்ப 
பார்த்து... அபராதத்த கட்டிடலாம்‌... நானே கட்டூறேன்‌..."' 

“நான்‌ முன்சீப்ப தேடிப்போனேன்‌. அந்தப்‌ பயமவன்‌ 
தலமறவா ஆயிட்டான்‌... அவன்‌... வீராசாமி... அக்கா மவன்தானே... 
சாயங்காலந்தான்‌ வருவான்‌” ட்‌ 

“அப்படின்னா என்‌ பயிரு என்‌ பயிரு” 

வினைதீர்த்தான்‌ ஓடினான்‌. சத்திய ஆவேசத்துடன்‌, அந்த 
ஆவேசமே ஓர்‌ உந்தலாக, வயலைப்‌ பார்த்து ஓடினான்‌. தண்ணீர்‌ 
கொடுக்க முன்‌ வந்த மாடக்கண்ணு விழுந்து கிடந்த ஒரு கிழட்டூ 
மாட்டின்‌ வாலைக்‌ கடித்து அதை, எழுப்பப்‌ பார்த்தார்‌. மாடு 
நகருவதாகத்‌ தெரியவில்லை. 

வினைத்தீர்த்தான்‌ ஓடினான்‌. தன்‌ வயலை நோக்கி 
ஓடினான்‌... விதவைப்‌ பெண்போல்‌, பதவியிழந்த அரசியல்வாதி 
போல, பட்டினி கிடந்த குழந்தைபோல, நெற்பயிர்கள்‌ கருகப்‌ 
போவதுபோல்‌ தோன்றின. பக்கத்து வீராசாமி வயலில்‌ 
நெற்பயிர்கள்‌ 'பேபிஷோ' காட்சிபோல்‌ தோன்றின. நீர்‌ விரைந்து 
பாய்ந்தது அருகாமையில்‌... அவற்றின்‌ அருகில்‌ நின்ற வீராசாமியும்‌ - 
அவரது வகையறாக்களும்‌ “அடுத்த பருவத்துல... இந்த ஒரு 
தட்டுலயும்‌... வாகை மரத்தையும்‌ முருங்க மரத்தயும்‌... வச்ச டணும்‌” 
என்று வினைத்தீர்த்தானுக்குக்‌ கேட்கும்படியாகக்‌ கேட்க வேண்டும்‌ 
என்னும்படியாகப்‌ பேசினார்கள்‌. 

வினைதீர்த்தானால்‌ தாள முடியவில்லை. தாங்க 
முடியவில்லை. 

ஏய்‌... அற்பப்‌ பயலுவளா... என்‌ வயல...கருக்குனது 
மில்லாம... நான்‌ அடுத்த வருடத்திலேயும்‌... பயிரிடாம போறதுக்காக... 
மரத்த வச்சி... என்‌ வயலுக்கு... இருட்டி : விடப்‌ போறியளா... 
செய்யுங்கடா...” அளிக்கப்‌ பணமும்‌... அம்பலத்துக்கு ஆளும்‌ 
இருக்கிற திமுறுலயாடா... பண்ணுறீங்க... பண்ணுங்கடா... ஊரு 


கேக்காட்டாலும்‌... உதிர மாடன்‌ கேக்காம போகமாட்டாண்டா." 


அவ்வளவுதான்‌ 


காகித உறவு 95 


்‌ வீராசாமி நல்ல மனிதர்‌, ஆகையால்‌ அவர்‌ எதுவம்‌ 

பேசவில்லை. அவரது கையாட்கள்‌, காலாட்கள்‌ வந்தார்கள்‌. வினை 
தீர்த்தானின்‌ வயலை மிதித்துக்‌ கொண்டே வந்தார்கள்‌. “மூட்டம்‌ 
போட்டால்‌ பெருச்சாளி தானாவரும்‌” என்பது போல்‌, திக்குமூட்டிய 
வினைதீர்த்தான்‌, திட்டியே தீருவான்‌ என்பதை 
எதிர்பார்த்தவர்கள்போல்‌, கர்மயோகிகள்‌ போல்‌ வந்தார்கள்‌. 
இருவர்‌, வினளைதீர்த்தானின்‌ கைகளையும்‌, காஃகைளையும்‌ 
பிடித்துக்‌ கொள்ள, எஞ்சிய மூன்று வீரர்கள்‌, அவனை எட்டி 
உதைத்தார்கள்‌ மண்‌ வெட்டிக்‌ கணையால்‌ வாயில்‌ குத்தினார்கள்‌. 
வயிற்றில்‌ இடித்தார்கள்‌. அடித்தகளைப்போடு, முதுகை நிமிர்த்திக்‌ 
கொண்டு, அவர்கள்‌ இளைப்பாறப்‌ போனபோது, வினைதீர்த்தான்‌ 
வயலில்‌ சுருண்டூ கிடந்தான்‌ வாயில்‌ பொங்கிய ரத்தம்‌, வயலை 
நனைத்தது. வயிற்றில்‌ துளிர்த்த ரத்தத்‌ துளிகள்‌, நெற்பயிரில்‌ 
பட்டன. 

வினைதீர்த்தான்‌ ஓடினான்‌. பகல்‌ இருந்து வீட்டுக்கு 
வராமலே ஓடினான்‌. அருகேயுள்ள சட்டாம்பட்டிக்கு ஒடினான்‌. 
அங்கே வல்லமை பொருந்திய 'சண்டியர்‌' மிராசுதாரும்‌ 
வீராசாமியை எப்படிக்‌ கையைக்‌ காலை ஓஒடிக்கலாம்‌ என்று 
குறிபார்த்து இருப்பவருமான ராஜதுரையிடம்‌, ட. போய்‌ 
நின்றான்‌. 

“கும்பிடுறேன்‌ அய்யா...” 

“என்ன விஷயம்‌ வினைதீர்த்தான்‌...” 

“என்‌ மூணு மரக்கால்‌ விதப்பாட்ட நீங்க எடுத்துக்கணும்‌.” 

“பணம்‌ இல்லியே.” 

“எவ்வளவு வேணுமுன்னாலும்‌ தாங்க...” 


“எந்தப்‌ பக்கமா இருக்கு” 

“ஒங்க... மருமகன சந்தையிலே... ஆள்‌ வச்சி அடிச்சாரு 
பாருங்க... வீராசாமி... அவரு வயலுக்குப்‌ பக்கத்துல... பொது வரப்பு... 
பொதுப்‌ பாசனம்‌...” 

“அப்படின்னா... வாங்கிக்கிறேன்‌. இந்த மூணு மரக்கால்‌ 
“விதப்பாட்ட வச்சி... அவன்‌ மூணு கோட்டயயும்‌... பொட்டல்‌ 
காடாக்கப்‌ போறேன்‌... பாரு... மரக்கால்‌ ஆயிரம்‌ ரூபாய்தான்‌ 
சரியா...” 


96 இரத்தத்‌ துளிகள்‌ பயிராகின்றன 


“தப்போ... சரியோ... நிலத்த... ஒங்௯£ ட கொடுத்தே 
ஆகணும்‌...” 

சட்டாம்பட்டிக்கும்‌ குட்டாம்பட்டிக்கும்‌ முட்டாப்‌ பகை - 
வீராசாமியும்‌ ராஜதுரையும்‌ தங்கள்‌ *எக்காளத்தை' திருப்திப்‌ 
படுத்துவதற்காக, ஊர்ச்சண்டையை நடத்தியவர்கள்‌. ஒரு 
கொலைகூட விழுந்திருக்கிறது. வீராசாமியைவிட எல்லா 
வகையிலும்‌ வல்லவரான ராஜதுரை, வினைதீர்த்தான்‌ நிலத்தை 
மலைப்பாம்பின்‌ நோக்கோடு வாங்கிக்கொண்டான்‌. 

இப்போது ஊர்க்காரர்களில்‌ சிலர்‌, வினைதீர்த்தானைச்‌ 
சாடினார்கள்‌. 

நிலத்தை ஊரவிட்டு... ஊர்ல போயாடா... விக்கது? 
சட்டாம்பட்டிக்காரன்‌ கொலகாரப்‌ பாவி... நம்ம வீராசாமிய... 
கஷ்டப்படுத்துனால்‌... நாம்‌ பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? 
ஒன்னால... ரெண்டு ஊருக்கு இடையிலயும்‌ குத்துப்பழி... 
வெட்டுப்பழி வரப்போவுது.”” 

வினைதீர்த்தான்‌ சிரித்தான்‌. அழுதான்‌. 

வயலில்‌, தன்‌ சொந்த வயலில்‌, கண்மணிபோல்‌ காத்து 
நெல்மணியில்‌ பட்ட தன்‌ ரத்தம்‌ - சொந்தப்‌ பிள்ளையைப்‌ போல்‌ 
பாவித்த தன்‌ நெற்பயிர்களில்‌ நீருக்குப்‌ பதிலாகப்‌ பட்ட 
ரத்தத்துளிகள்‌, வீராசாமியையும்‌, அவன்‌ ஆட்களையும்‌, இந்த 
விவகாரத்தில்‌ நியாயத்தின்‌ பக்கம்‌ நில்லாத எல்லோரையும்‌ 
சும்மாவிடாது என்ற அசுரத்தனமான திருப்தியில்‌, ஆன்மீகக்‌ 
கோபத்தில்‌ சிரித்தான்‌. 

அதேசமயம்‌, விதைக்கும்போது தந்தையாகவும்‌ 
நாற்றிடும்போது தாயாகவும்‌, உரமிடூம்போது ஆசானாகவும்‌ 
களையெடுக்கும்போது காவலனாகவும்‌, நீரிடும்போது தோழனாகவும்‌ 
இருந்து, கண்ணுக்குக்‌ கண்ணாய்ப்‌ பராமரித்த வயலை - தன்‌ 
சொந்த வயலை நினைத்தும்‌ அழுதான்‌. சத்தியம்‌ சத்தம்‌ போடாது 
என்பதுபோல்‌, அவன்‌ சத்தம்‌ போடாமலே அழுதான்‌. 


டெ. ௨ 9 


மணிவாசகா பதிப்பகத்தின்‌ 
பாடநூல்‌ வரிசை 


முனைவர்‌ தமிழண்ணல்‌ 
தொல்காப்பியம்‌ - சொல்லதிகாரம்‌ 
தொல்காப்பியம்‌ - எழுத்ததிகாரம்‌ 
தொல்காப்பியம்‌ - பொருளதிகாரம்‌ 
(3 தொகுதிகள்‌) 


முனைவர்‌ ச. அகத்தியலிங்கம்‌ 
திராவிட மொழிகள்‌ 1, 1] 


முனைவர்‌ ச.வே. சுப்பிரமணியன்‌ 
தொல்காப்பியம்‌ (பையடக்கப்பதிப்பு) 
தமிழ்‌ இலக்கிய வரலாறு 


முனைவர்‌ சு. சக்திவேல்‌ 
தமிழ்மொழி வரலாறு 
, நாட்டுப்புறஇயல்‌ ஆய்வு 
இதழியல்‌ 
வே.தி.செல்லம்‌ 
தமிழக வரலாறும்‌ பண்பாடும்‌ 
தமிழக வரலாறு - புதிய: பார்வை 


பேராசிரியர்‌ சோம. இளவரசு 
தமிழ்‌ இலக்கிய வரலாறு 
நன்னூல்‌ எழுத்ததிகாரம்‌ 
நன்னூல்‌ சொல்லதிகாரம்‌ 
இலக்கண வரலாறு